Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, January 3, 2015

தன்வந்திரி பீடத்தில் 3வது நாளாக பத்துலட்சம் ஏலக்காய் கொண்டு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் சிறப்பு அன்னதானத்துடன் நடைபெற்றது…








வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் பத்து லட்சம் ஏலாக்காய் கொண்டு மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறவும், மாணவ, மாணவியர்களுக்குள் நல்ல ஒற்றுமை ஏற்படவும் வேண்டி மேற்கண்ட ஹோமம் நடைபெற்றது.

இதில் இன்று பூர்ணாஹூதியில் விசேஷ திரவியங்களுடன், இரண்டு இலட்சம் ஏலக்காய்கள் சேர்க்கப்பட்டது. ஏராளமான மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
தன்வந்திரி குடும்பத்தை சேர்ந்த திரு. R.பட்டாபிராமன்-சென்னை, இந்த ஹோமத்தில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி திரு.மோகன், வேலூர், திரு. செங்கல்வராயன், சென்னை,  திரு. ஸ்ரீநிவாச பிரசாந்த், திருநின்றாவூர், மற்றும் திருமதி. ஷீலா நகநாதன் ஆகிறோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  நிறைவாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாவியரும் கலந்து கொண்டு கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை பெற்றுச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து நாளை (4.01.2015) ஸ்ரீ ஹயக்ரீவர் தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. அனைவரும் பங்கேற்று பயன்பெற ப்ரார்த்திக்கின்றோம்.

மேலும் 5.1.2015 திங்கட்கிழமை நாள் முழுவதும் நடைபெற உள்ள சிவ பஞ்சாக்ஷரி யாகத்தை முன்னிட்டு 4.1.2015 மாலை பூர்வாங்க பூஜைகள் நடைபெற உள்ளன. இத்தத்தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

Friday, January 2, 2015

தன்வந்திரி பீடத்தில் இரண்டாவது நாளாக ஸ்ரீவித்யா லட்சுமி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம் சிறப் அன்னதானத்துடன் நடைபெற்றது…


1000 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற ஹயக்ரீவர் ஹோமம். அப்போது இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது
பத்து லட்சம் ஏலக்காய் ஹோமத்தில் வேலூர் நாராயணி பீடம் மேலாளர் கலந்து கொண்ட போது.

பத்து லட்சம் ஏலக்காய் ஹோமத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஏலக்காய்.
பத்து லட்சம் ஏலக்காய் ஹோமத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஏலக்காய்.

பத்து லட்சம்ஏலக்காய் ஹோமத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஏலக்காய்.
பத்து லட்சம் ஏலக்காய் ஹோமத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஏலக்காய்.

பத்து லட்சம் ஏலக்காய் ஹோமத்திற்காக வைக்கப்பட்டுள்ள ஏலக்காய்.
ஏலக்காய் ஹோமத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சார்யர்கள்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் பத்து லட்சம் ஏலாக்காய் கொண்டு மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறவும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் சக மாணவ, மாணவியர்களிடம் நல்ல அனுகுமுறை ஏற்பட வேண்டி ஹோமங்கள் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று பூர்ணாஹூதியில் விசேஷ திரவியங்களுடன், இரண்டு இலட்சம் ஏலக்காய்கள் சேர்க்கப்பட்டது. ஏராளமான மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

இந்த யாகத்தில் வேலூர் நாராயணி பீடம் மேலாளர் திரு.சம்பத் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிறைவாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாவியரும் கலந்து கொண்டு கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஹோமத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஹோமத்தில் வைத்து எழுது பொருட்களை ஸ்வாமிகள் இலவசமாக வழங்கி ஆசீர்வதித்தார். இதனைத் தொடர்ந்து அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாளை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம், 4.01.2015 ஸ்ரீ ஹயக்ரீவர் தன்வந்திரி ஹோமமும் நடைபெற உள்ளது. அனைவரும் பங்கேற்று பயன்பெற ப்ரார்த்திக்கின்றோம். இத்தத்தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

Thursday, January 1, 2015

தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்த மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கிய காட்சி…











தன்வந்திரி பீடத்தில் பத்துலட்சம் ஏலக்காய் ஹோமம் துவங்கியது…












வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு காலை 4.00 மணியளவில் தன்வந்திரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்காரமும் செய்யப்பட்டு சொர்க வாசல் தரிசனத்தில் பக்தர்கள் தரிசித்து பரவசம் அடைந்தனர்.

மேலும் பத்து லட்சம் ஏலாக்காய் கொண்டு மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறும் வகையில் கோபூஜையுடன் கணபதிக்கே உரிய மோதகங்கள், அருகம்புல், வெள்ளெருக்கம், கரும்பு போன்ற அஷ்ட திரவியங்கள் கொண்டு முதல் நாளான (01.01.2015) இன்று வித்யா கணபதி ஹோமத்துடன் பத்துலட்சம் ஏலக்காய் ஹோமம் சிறப்பாக துவங்கியது.

இந்த ஹோமத்தில் மைசூர் கருமாரியம்மன் பீடம் பீடாதிபதி சுரேஷ் ஆச்சாரியார் மற்றும் வேலூர் மாவட்டம் உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர் உயர்திரு. இளங்கோவன், இராணிப்பேட்டை தேவராஜ் ஆடிட்டர், தொழிலதிபர் பச்சையப்பன், வார்டு உறுப்பினர் W.G.முரளி, சென்னை மருத்துவர் ரங்கராஜன், ஊட்டி இராஜசேகர் மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாவியரும் கலந்து கொண்டு கூட்டுப்பிரார்த்தனை செய்து ஹோமத்தில் வைத்த எழுது பொருட்கள், மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த ஹோமத்தை ரஜீவ்காந்தி சிவம், விவேகானந்த சிவம் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் நடத்தித்தந்து சிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து நாளை ஸ்ரீ சரஸ்வதி ஹோமமும், வித்யா ஹோமமும், 3.1.2015 அன்று ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமமும், 4.01.2015 ஸ்ரீ ஹயக்ரீவர் தன்வந்திரி ஹோமமும் நடைபெற உள்ளது. அனைவரும் பங்கேற்று பயன்பெற ப்ரார்த்திக்கின்றோம். இத்தத்தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.