Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, January 6, 2014

தன்வந்திரி பீடத்தில் நாமசங்கீர்த்தனையுடன் பக்தி பாமாலை…

கலியுகத்தில் நாமசங்கீர்த்தனம் ஒன்றே இறைவனின் திருப்பாதங்களை எளிதாக அடையும் வழி என்று கூறப்பட்டு வருகிறது. அதிலும் புனித மார்கழி மாதத்தில் இறைவனின் நாமாக்களையும், சங்கீதங்களையும் எவர் ஒருவர் துதி செய்கின்றார்களோ அல்லது அந்த துதியில் எவர் கலந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும் என்பது புராணம்.

சங்கீர்த்தனம் வழியாக இறைவனை மகிழ்விப்பதால் இறைவன் நமக்கு எல்லையில்லா ஆனந்தத்தையும் உடல், மனம், ஆன்மா போன்றவைகளை ஒருநிலைப்படுத்தி அமைதியையும், சந்தோஷத்தையும் அளிப்பர். இந்த பாக்யத்தை அனைவரும் பெறும் விதத்தில் இன்று (6.1.2014) தன்வந்திரி பீடத்தில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஸ்ரீ பட்டாபிராமன் பஜனை மண்டலியை சார்ந்த சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் நாம சங்கீர்த்தனத்துடன் பக்தி பாமாலை இசைத்தனர்.

இதில் கோவிந்தனைப் போற்றியும், ஸ்ரீ கிருஷ்ணனைப் போற்றியும், ஸ்ரீ ராமரைப் போற்றியும் பலவகையான பாடல்களை பாடி மகிழ்ந்தனர். இக்குழுவினருக்கு சிறப்பு ஆராதனையுடன் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. முடிவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்றனர்.


தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற சிறப்பு ஹோமத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி P.N.பிரகாஷ் பங்கேற்பு…

வாலாஜா, ஜனவரி 5, 2014

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாஸ்து பகவானுக்கும், ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கும் விசேஷ ஹோமம் நடைபெற்றது. மேலும் சகல தேவதா காயத்ரி ஹோமமும் காலை 10.00 மணியளவில் துவங்கி 1.00 மணியளவில் கோ பூஜையுடன் நிறைவு பெற்றது. இந்த ஹோமத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.P.N. பிரகாஷ் மற்றும் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு பாண்டுரங்கன் அவர்களும் மஹா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் தன்வந்திரி பகவானையும், இதர 68 தெய்வங்களையும் தரிசனம் செய்தனர். பின்னர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்று மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்திலும் பங்கேற்றனர் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.


Prathyankara Homam held in Danvantri Peedam - The Hindu

Prathyankara Homam held in Danvantri Peedam - The Hindu

Saturday, January 4, 2014

ஜனவரி 4, 2014 தன்வந்திரி பீடத்தில் 60 வது சனிசாந்தி பூஜை மற்றும் சனி தோஷ நிவர்த்தி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது…





71/2 சனி, சனி புக்தி, சனி தசை, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற தசை, புக்தி நடப்பவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் விடுபடவும், திருமணம், குழந்தைபேறு, தொழில், உத்யோகம், வியாபாரம் போன்றவைகளால் ஏற்படும் தடைகள் நீங்கவும் வேண்டி சனி சாந்தி ஹோமம் சனிசாந்தி பூஜையும், சனி தோஷ நிவர்த்தி ஹோமமும் தன்வந்திரி பீடத்தில் 4.01.2014 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் இந்த ஹோமத்தில் கருப்பு நிறம், நீல நிறம் வஸ்த்திரங்கள், எள்ளு, நல்லெண்ணெய், வன்னி சமித்து, வன்னி இலை, எள்ளு சாதம், இரும்பு பாத்திரங்கள், நெல்பொறி, விசேஷ மூலிகைகள், வெல்லம், பால், தயிர், தேன், எலுமிச்சை ஆகிய பொருட்கள் சேர்க்கப்பட்டன.

யாகத்தின் முடிவில் கலச தீர்த்தத்தை நட்சத்திர விருட்சங்களுக்கும், 12 ராசி மண்டல விருட்சங்களுக்கும், 9 நவக்கிரக விருட்சங்களுக்கும் தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள காலச்சக்கரத்தில் சனீஸ்வர கிரகத்திற்குரிய வன்னி விருட்சத்தில் சேர்க்கப்பட்டு விருட்ச பூஜையும் நடைபெற்றது.

இந்த ஹோமத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டு ப்ரார்த்தனை செய்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் பங்கேற்றனர்.

Friday, January 3, 2014

தன்வந்திரி பீடத்தில் 60 வது சனிசாந்தி பூஜை மற்றும் சனி தோஷ நிவர்த்தி ஹோமம்

சனிசாந்தி பூஜையும், சனி தோஷ நிவர்த்தி ஹோமமும் தன்வந்திரி பீடத்தில் 4.01.2014 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்த உள்ளார். இந்த ஹோமத்தில் 71/2 சனி, சனி புக்தி, சனி தசை, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற தசை, புக்தி நடப்பவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் விடுபடவும், திருமணம், குழந்தைபேறு, தொழில், உத்யோகம், வியாபாரம் போன்றவைகளால் ஏற்படும் தடைகள் நீங்கவும் சனி சாந்தி ஹோமம் நடைபெறுகிறது.

சனீஸ்வர பகவான் - நீதிமான்
சனீஸ்வர பகவானை பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை
ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான்சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லைஎன்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்என்று சொல்லப்படுவதும் உண்டு.

சனீஸ்வரரின் ஆதிக்கத் தன்மை
எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் தசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும், ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.

சனிக்கிரகத்தினால் ஏற்படும் சில தோஷங்கள்
நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும் சனிசாந்தி ஹோமத்திலும், சனிதோஷ நிவாரண பூஜைகளிலும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

யாகத்தில் சேர்க்கவுள்ள விசேஷ திரவியங்கள்
மேலும் இந்த ஹோமத்தில் கருப்பு நிறம், நீல நிறம் வஸ்த்திரங்கள், எள்ளு, நல்லெண்ணெய், வன்னி சமித்து, வன்னி இலை, எள்ளு சாதம், இரும்பு பாத்திரங்கள், நெல்பொறி, விசேஷ மூலிகைகள், வெல்லம், பால், தயிர், தேன், எலுமிச்சை போன்றவைகள் கொண்டு நடைபெற உள்ளது.

காலச்சக்கரத்தில் கலச தீர்த்தம்
யாகத்தின் முடிவில் கலச தீர்த்தத்தை நட்சத்திர விருட்சங்களுக்கும், 12 ராசி மண்டல விருட்சங்களுக்கும், 9 நவக்கிரக விருட்சங்களுக்கும் தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள காலச்சக்கரத்தில் சனீஸ்வர கிரகத்திற்குரிய வன்னி விருட்சத்தில் சேர்த்து விருட்ச பூஜையும் நடைபெற உள்ளது.

குறிப்பு : பிரதி ஆங்கில மாதம் முதல் சனிக்கிழமைதோறும் தன்வந்திரி பீடத்தில் சனிசாந்தி ஹோமம் நடைபெற்று வருகிறது.

மேலும் விபரங்களுக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை – 632513. வேலூர் மாவட்டம்.

Phone : 04172-230033 | Cell : 9443330203

Wednesday, January 1, 2014

புத்தாண்டு மற்றும் அனுமந்த் ஜெயந்தி சிறப்பு பிரார்த்தனை…













2014 புத்தாண்டு மற்றும் அனுமந்த் ஜெயந்தியை முன்னிட்டு உலக மக்கள் அனைவரும் நலமுடன் ஆரோக்யமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தன்வந்திரி பீடத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமும், 2014 பூசணிக்காய் கொண்டு (கூஸ்மாண்ட ஹோமமாக) த்ருஷ்டிதுர்கா ஹோமம், ஆரோக்யத்திற்கும், வாழ்வில் வளம்பெறவும் வேண்டி ஸ்ரீ குபேரலட்சுமி ஹோமம், மனநலம், உடல் நலம் வேண்டி மஹா தன்வந்திரி ஹோமம் என ஆகிய மூன்று ஹோமங்களும் நடைபெற்றது. மேலும் 9 அடி ஆஞ்சநேயருக்கு 9 விதமான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சுற்றுபுற மக்கள் பயன்பெற வேண்டி இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் வேலூர் மாவட்ட ஆட்சியர் Dr.R.நந்தகோபால் IAS, அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மக்கள் பங்குபெற்று பயனடைந்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் இராணிப்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R.காந்தி, இராணிப்பேட்டை தொழிலதிபர் S.M.சுகுமார், டாக்டர் தொப்பக்கவுன்டர், டாக்டர் ரங்கராஜ், டாக்டர் ஜெயசங்கர், அலமேலு பாஸ்கர், உள்ளூர் பிரமுகர்கள், ஆன்மிக வாதிகள் மற்றும் சாதுக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்து இந்த ஹோமத்திற்கு தேவையான பூசணிக்காய்கள் மற்றும் ஹோமத்திரவியங்களை கொண்டு வந்து கூட்டுப்ரார்த்தனையிலும் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர். மேலும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருந்திரளாக பக்தர்கள் பீடத்திற்கு வருகை தந்து தன்வந்திரி பகவானையும் இதர 68 பரிவார தெய்வங்களையும் புத்தாண்டில் நோய் நொடியின்றி சகல செல்வம் பெற வேண்டி ப்ரார்த்தனை செய்தனர்.