Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, June 1, 2013

நவபைரவருக்கு சிறப்பு ஹோமம்

நவ பைரவருக்கு
அபிஷேகம் செய்யும் காட்சி.
நவ பைரவருக்கு
இசையுடன் கூடிய ப்ரார்த்தனை.
நவபைரவர் ஹோமம்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு உலக நலன் கருதி அஷ்டமங்கள கால பைரவருக்கு சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

சொர்ணாகர்ஷன பைரவர்
மேலும் சொர்ணாகர்ஷன பைரவருக்கு சிறப்பு ஹோமத்துடன் கூடிய அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றக்காட்சி.

நிகும்பல யாகம் சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நிகும்பல யாகம் சிறப்பாக நடைபெற்றது

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் 01.06.2013 சனிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாபெரும் யாகத்தில் சுமார் 500 கிலோ மிளகாய் வற்றல், வேப்பெண்ணெய், கடுகு, நாயுருவி, நெய், தேன் போன்ற எண்ணற்ற மூலிகைகள், 100க்கும் மேற்பட்ட பழங்கள், புஷ்பங்கள், பட்டு வஸ்திரங்கள், நவ ரத்தினங்கள் மற்றும் செவ்வரளிப் பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு நிகும்பல யாகம் நடைபெற்றது.
மேலும் இந்த ஹோமத்தில் பூர்ணாஹூதிக்கு முன்னதாக யாக வேள்வியிலிருந்து அம்பாள் அக்னி வடிவாய் எழுந்தருளி அனைவரையும் ஆசீர்வதித்தாள்.

இந்த ஹோமத்தில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் அனைவரும் நிகும்பல ஹோமத்திலும், அதன்பிறகு நடைபெறும் மகிசாசூரமர்த்தினி அபிஷேகத்திலும், கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

மேலும் இதனைத் தொடர்ந்து நாளை காலை 10.00 மணியளவில் (02.06.2013) ஸ்ரீ சரஸ்வதி தேவி, ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ராகு-கேது ஆகிய தெய்வங்களுக்கு மண்டலாபிஷேகம் பூர்த்தியாக உள்ளது எனவே பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நிகழும் அற்புதங்கள்


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற்ற நிகும்பல ஹோமத்தில் எழுந்தருளிய அம்பாள். (01.06.2013)
__________________________________


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற்ற பைரவர் ஹோமத்தில் எழுந்தருளிய பைரவர். (24.04.2013)

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு எண்ணற்ற ஹோமங்கள்

யக்ஞ பூமியில் இன்று யாகத்திருவிழா

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு எண்ணற்ற ஹோமங்கள் இன்று (01.06.2013) நடைபெற்று வருகின்றன. அவற்றுள் சனிசாந்தி ஹோமம், ஸ்பெஷல் சனிசாந்தி ஹோமம், தன்வந்திரி ஹோமம், பைரவர் ஹோமம், மஹா நிகும்பல ஹோமம் என பல ஹோமங்களில் பக்தர்கள் பங்குபெற்று ப்ரார்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும் பீடத்தில் அனைத்து சந்நிதிகளிலும் பக்தர்கள் திரளாக வந்திருந்து கூட்டுப்ரார்த்தனை செய்தனர். பின்னர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசிகள் பெற்று மகிழ்ந்தனர்.

ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு
சிறப்பு அபிஷேகமும்,
ஆராதனையும் நடைபெற்ற காட்சி
நிகும்பல ஹோமத்தில்  கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளுரை வழங்கிய காட்சி
நிகும்பல ஹோமத்தில்  கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளுரை வழங்கிய காட்சி
ஸ்ரீ லட்சுமி ஹோமத்தில்
ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி தாயார்.
ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி சந்நிதியில்
பக்தர்கள் ப்ரார்த்தனை
ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் நடைபெற்ற காட்சி.
ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் நடைபெற்ற காட்சி.
ஸ்பெஷல் சனிசாந்தி ஹோமம்
நடைபெற்றக் காட்சி
ஸ்பெஷல் சனிசாந்தி ஹோமம்
நடைபெற்றக் காட்சி
சஞ்சீவி ஆஞ்சநேயர் சந்நிதியில் பக்தர்கள்.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு
பைரவர் ஹோமம் நடைபெற்ற காட்சி.
 பக்தர்கள் ராகு கேது தோஷங்கள் நிவர்த்திபெற
எள் போன்ற பொருட்களை
யாத்தில் இட்டு ப்ரார்த்தனை செய்தனர்.
 இளம் தம்பதியர்கள் ஆர்வமுடனும்,
தன்வதிரி யோக மையத்தில் தியானம் செய்தனர்.


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நிகும்பல யாகம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிகும்பல யாகத்தில் பங்கு பெற்றுள்ள பக்தர்களின் ஒரு பகுதி



நிகும்பல யாகம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிகும்பல யாகத்தில் பயன்படுத்த இருக்கும் மேலும் தேவையான பொருட்கள் உங்கள் பார்வைக்கு.




மாபெரும் நிகும்பல ஹோமம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று நடைபெற இருக்கின்ற (01.06.2013) மாபெரும் நிகும்பல ஹோமத்தில் தன்வந்திரிகுடும்பத்தினர் மற்றும் தன்வந்திரி சேவகர்கள்  தேவையான பொருட்களை தயார் நிலையில் வரிசைப்படுத்தி நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்கும் காட்சி.

பிரமாண்டமான புஷ்ப அலங்காரத்துடன் 8 அடி உயரமுள்ள 
ஸ்ரீ ப்ரத்தியங்கரா தேவி
ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் 500 கிலோ மிளாகாய் வற்றல்.

ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் குங்குமம் மற்றும் கடுகு.

ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் குங்குமம் மற்றும் உப்பு.


ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும்
உப்பு மற்றும் மிளகு.
ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும்
108 வகையான மூலிகைகள்.

 2


ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் இனிப்பு வகைகள்.
ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் இனிப்பு வகைகள்.

ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் பழ வகைகள்.