வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 108 கலச திருமஞ்சன திருவிழா பூர்த்தி வைபவம் மற்றும் ஆஷாட நவராத்திரி ஆரம்பம் வெகுவிமரிசையாக நடைபெற்றது
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Monday, June 19, 2023
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 108 கலச திருமஞ்சன திருவிழா பூர்த்தி வைபவம் மற்றும் ஆஷாட நவராத்திரி ஆரம்பம் வெகுவிமரிசையாக நடைபெற்றது
Tuesday, June 13, 2023
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அருள்மிகு தாய் மூகாம்பிகை, ஸ்ரீராஜ காளி அம்மன், அருள்மிகு வீரபத்திரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் 8.6.23 & 9.6.23
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அருள்மிகு தாய் மூகாம்பிகை, ஸ்ரீராஜ காளி அம்மன், அருள்மிகு வீரபத்திரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமரசையாக நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மூலவர் ஸ்ரீ ஆரோக்லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் 90 பரிவார தெய்வங்களுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் அருள்மிகு தாய் மூகாம்பிகை தேவி, ஸ்ரீ ராஜ காளி அம்மன், ஸ்ரீ வீரபத்திரர் பிரதிஷ்டை செய்வதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 7.6.23 புதன்கிழமையன்று மாலை 5.00 மணிமுதல் துவங்கி 8.06.2023 வியாழக்கிழமையன்று, ஸ்ரீ தாய் மூகாம்பிகை தேவி மற்றும் 9.06.2023, வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீ வீரபத்திரர் மற்றும் ஸ்ரீ ராஜ காளியம்மனின் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், சுற்றப்புற நகர கிராம மக்கள், ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளையும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசிகளையும் பெற்று சென்றனர். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சபாநாயகர் மாண்புமிகு ஏம்பலம் ஆர். செல்வம் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்