ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப யாகம்
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவமனையில் கொரோனா போன்ற கொடிய நோய்கள் தீர கோடி யாகம்.
ஸ்ரீ தன்வந்திரி கோடிஜெப யாகம் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 01.09.2021 முதல் 14.11.2021 வரை சர்வ ரோக நிவாரணம் பெறவும், சகல ஆரோக்கிய பெறவும் அஷ்ட ஐஸ்வர்ய பிராப்தி வேண்டி நடைபெறுகிறது.
ஸ்ரீ தன்வந்திரி பகவான்: உலக மக்களை காக்க வேண்டி மஹா விஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று அழைத்து மகிழ்கின்றோம். அவை மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி என தசாவதாரங்களாகும். தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார். ஸ்ரீ தன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன. பாற்கடலில் தோன்றியவரே ஸ்ரீ தன்வந்திரி.
திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்த போது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் காக்கும் கடவுளான தன்வந்திரி பகவான். கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு,சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி அருள்பாவிக்கின்றார். ஸ்ரீ தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர்.
இவரை நோய்கள் தீரவும், நோயின்றி வாழ வேண்டியும் வழிபடலாம் பணம், சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும். நிம்மதியான மனம் வேண்டும். அல்லவா? ஸ்ரீ ரங்கநாதருக்கு வைத்தியம் பாத்தவர் ஆவார். இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும். மருத்துவ கடவுள் தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்ம வினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்ற வல்லது. இவரை வழிபட்டால் நோய் நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். அவரே ஸ்ரீமன் நாராயணன்.
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடம் மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவமனை
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரும் பக்தர்களுக்கு தன்வந்திரி பகவான் வைத்தியம் செய்யும் விதமாக, கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம், கத்தி, மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தன்வந்திரி பகவான் வைத்தியராக இருப்பதாலும், மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவ மனையாக அமைந்துள்ளதாலும், நோயாளிகள் பலரும் அவரிடம் வைத்தியம் பார்க்க வருகிறார்கள் என்பதால் இங்கு அர்ச்சனை கிடையாது. யாகம் மட்டுமே பிரதானமாக திகழ்கிறது. நோய் தீர்க்கும் தன்வந்திரி மந்திரம் ஓம் நமோபகவதே வாசு தேவாய தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நம: இதன் பொருள்: எல்லோருக்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருப்பவரும், சகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன். எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணுக்கு தெரியாமல் நீக்குவாயாக, என்பதாகும்.
நோயற்று வாழட்டும் உலகு:
“நோயற்று வாழட்டும் உலகு” என்ற தாரக மந்திரத்தை கொண்டு, தன் தாய்க்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றும் பொருட்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் உருவாக்கப்பட்டது தான் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். ஸ்வாமிகள் இப்பீடத்தில் தொடர்ந்து வித விதமான யாகங்களும், ஜபங்களும், கூட்டு பிரார்த்தனைகளும் உலக நலனுக்காக நடத்தி கொண்டு வருகிறார். நாம் அனைவருமே நோயற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஆனால், வயதும், சூழ்நிலையும் நம்மை ஏதேனும் ஒரு நோயில் தள்ளிவிடுகிறது. இதிலிருந்து மாண்டு, மீண்டு வருவதற்குள் ஒருவழியாக ஓய்ந்து விடுகிறோம். வந்த நோய்க்கும், இனி எந்த நோயும் நம்மை அண்டாமல் இருக்கவும் நோய்களை தீர்க்கும் இப்பீடத்தில் உள்ள தெய்வீக மருத்துவரை வழிபட்டு வாழ்வை வளமாக மாற்றிடுவோம்.
ஸ்ரீ தன்வந்திரியும் ராகு, கேதுவும்:
தன்வந்திரி கொண்டு வந்த அமிர்தத்தை எப்படியோ ராகு, கேது என்ற அசுரர்கள் பெற்றனர். அதனால்தான் அவர்களும் நவக்கிரங்களில் இடம் பிடித்தனர். ஊனமுற்றாலும் உயிர் பிழைத்து, சூரிய சந்திரர்களைப் பிடித்து, அவ்வப்போது கிரகண காலங்களை ஏற்படுத்தி வருகின்றனர் ராகுவும், கேதுவும். என்றாலும் திருமாலின் திருவருளால் மாந்தர்கள் காக்கப்பட்டு வருகின்றனர்.
பதினெட்டு சித்தர் - ஆயுர்வேத வைத்தியர்:
மாந்தர்களுக்கு அவரவர்களின் கர்மவினையால் ஏற்படும் நோய் நொடிகளைப் போக்க திருமாலே தன்வந்த்ரி பகவானாகவும் அவதரித்தார் என்ற கருத்தும் உண்டு. தன்வந்தரி பகவான், பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். சித்த மருத்துவ ஆராய்ச்சி நூல்களின் தொகுப்பு 'தன்வந்தரி நிகண்டு' என்ற பெயரில் பிரபலமாக உள்ளது. ஆயுர்வேத வைத்தியம் அவர் அளித்த பரிசே! விஞ்ஞானமயமான இந்த உலகத்தில், பல நூதன நோய்கள் மாந்தர்களை வருத்துகின்றன. மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
46 லட்சம் பக்தர்கள் 54 கோடி மந்திரங்கள்:
தமிழகத்தில் தன்வந்திரி பகவானுக்கு தனி ஆலயம் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ளது.
ஸ்ரீ தன்வந்திரி பகவான் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்துள்ள அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில்ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோயில் உள்ளது. கலி காலத்தில் மக்கள் நோயினால் பாதிக்கப்படாமல் இருக்க 46 லட்சம் பக்தர்கள் கைப்படை எழுதிய ஐம்பத்திநான்கு கோடி தன்வந்திரி மஹா மந்திரங்களுடன் அழியா சொத்தாக தோன்றிய அற்புத ஆரோக்ய பீடம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. 85 பரிவார மூர்த்திகளுடன் 468 சித்தர்கள் சிவலிங்கம் ரூபமாக அமைந்துள்ளது.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்:
இந்த பீடம் ஒளஷத பீடமாக அமைந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி என்பதாகும். ஆரோக்கிய பீடம் இங்குள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வலம் தரும் வாஸ்து பகவான் முதல் சஞ்சலம் போக்கும் சஞ்சீவிராயர் மற்றும் பஞ்சமுக வராகி வரை ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் 85க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்களும் இருப்பதும் ஒரு தனி நபராக பீடத்தை நிறுவி இருப்பது தமிழகத்தை ஏன் ஒட்டுமொத்த உலகமே வாலாஜாவை திரும்பி பார்ப்பது ஆச்சர்யமே. இங்கு யோகா மற்றும் இயற்கை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளது. தினசரியும் யாகம் தன்வந்திரியே மூலவராக அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். தன்வந்திரி பகவான் சிலை எட்டு அடி உயரம். ஒரே கல்லால் செய்யப்பட்டது. சுமார் 10 டன் எடையுள்ளது. பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் அருள் புரிகின்றார். நான்கு திருக்கரங்கள். பகவானின் திருமார்பில் ஸ்ரீலட்சுமியுடன் மிக கம்பீரமாக நின்ற கோலத்தில் சிரித்த முகத்துடன் காட்சி தருகிறார். சற்றுக் கீழே கஜலட்சுமி தேவி காட்சி தருகிறாள். வலது மேற்கரத்தில் சக்கரம். வலது கீழ்க்கரத்தில் அமிர்த கலசம். இடது மேற்கரத்தில் சங்கு. இடது கீழ்க்கரத்தில் சீந்தல் கொடி. வலது தொடையில் அட்டை பூச்சியுடன் தலைமை அலோபதி மருத்துவாகத் தரிசனம் தருகிறார்.. மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவ மனையாகவும் ஷண்மதங்களுக்கு உரிய தலமாகவும் நிவாரண பீடமாகவும் விளங்குகிறது வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.
மஹா தன்வந்திரி கோடி ஜப யக்ஞம்:
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி 01.09.2021 புதன்கிழமை முதல் 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை வரை 75 நாட்கள் காலை 6.30 மணி முதல மாலை 6.30 மணி வரை நோய்கள் தீர்த்து நம்மை காக்கும் கடவுளான ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளை வேண்டி கொரோனா போன்ற கொடிய நோய்கள் தீரவும் சர்வ ரோக நிவாரணம் பெறவும், ஆரோக்ய, ஐஸ்வர்ய பிராப்தி வேண்டியும் ஸ்வாமிகளிடம் தீக்ஷை பெற்ற சீடர்களால் மஹா தன்வந்திரி கோடி ஜப யக்ஞம் 1000 கணக்கான மூலிகைகள் கொண்டு தொடர் யாகமாக நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் அரசு வழிகாட்டுதல்படி இவ்வைபவத்தில் கலந்து கொண்டு ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டுகிறோம்.
தன்வந்திரி ஹோமத்தின் பலன்:
ஒரு மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் யாகம் இது. இவை மட்டுமல்லாமல் தன்வந்திரி பெருமாளின் அனுக்கிரகத்தையும், அருளையும் கூட்டித் தரும் யாகம். ஒவ்வொரு மனிதனின் மனதைக் கட்டுக்குள் அடக்கி, ஆசைக்கு அணை போடும் ஹோமம் ஆகும். அதிகமாக உண்ணாது உடலுக்கு ஏற்ற தேவையான உணவை மட்டும் உண்ண வைக்கும் அதீத யாகம் இது. இந்த யாகத்தை முறையாக செய்து கொள்பவர்களுக்கு மூளைக் கோளாறு, மூளை நரம்பினால் ஏற்படும் கோளாறு போன்ற கபால நோய்கள், வாத சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். மற்றும் உடல் ரீதியான நோய்களுக்கும் மன ரீதியான நோய்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும்.
யாகத்தில் பங்கேற்க:
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை-632 513.
இராணிப்பேட்டை மாவட்டம்.
தொலைபேசி: 04172-294022, செல்: 9443330203
No comments:
Post a Comment