Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, September 14, 2019

Sri Lakshmi Narayana Homam


தன்வந்திரி பீடத்தில்
ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் மஹாளய பக்ஷத்தை முன்னிட்டு உலக மக்கள் நலன் கருதியும், சகலவித தோஷங்கள் அகலவும் வருகிற 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமமும், விசேஷ பூஜைகளும் நடைபெற உள்ளது.

ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் செல்வத்தை பாதுக்காப்பராகவும் செல்வ செழிப்பை தரும் கடவுளாக விளங்குபவர். இத்தம்பதிகளை யாகம், திருமஞ்சனம், அர்ச்சனை, பாராயணம் போன்ற பல்வேறு வழிகளில் வேண்டுவது மிகவும் சிறந்த பலன் தரக்கூடிய செயலாகும். மேலும் யாகங்கள் செய்வதும், யாகங்களில் பங்கேற்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, அது கடவுளின் அனுக்கிரகத்தையும் செல்வ செழிப்பையும் பல மடங்கு பெருக்கி நமக்கு வரத்தை அளிக்கக் கூடியது.

ஸ்ரீ லக்ஷ்மி மற்றும் ஸ்ரீமன் நாராயணனுக்காக நடத்தப்படும் ஹோம பூஜைகளில் பங்கேற்பதின் மூலம் இருவரின் அனுக்கிரகமும் கிடைக்கப் பெற்று சகலவித தோஷங்களும் நீங்கி, நீண்ட ஆயுளுடன் வாழ்க்கை நடத்தலாம். செல்வத்தின் அதிபதியான ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் கடாட்சத்தால் உங்கள் வாழ்வில் செழிப்பும், பொருட்செல்வமும், நல்ல அதிர்ஷ்டமும், நல்லிணக்கமும், ஆன்மீக ஞானமும் கிடைக்கப் பெறுவீர்கள். ஸ்ரீமன் நாராயணனின் கடாட்சத்தால் எதிர்பாராத நிதி நெருக்கடி சமயங்களில் உங்கள் ஆஸ்திகளுக்கான பாதுகாப்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.

இந்த யாகத்திற்கு  இந்த யாகத்திற்கு தாமரை புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருள்டன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


No comments:

Post a Comment