தன்வந்திரி பீடத்தில்மழை வேண்டியும் இயற்கை வளம் வேண்டியும்தொடர் திருமஞ்சன திருவிழா.
04.05.2019
முதல்
02.06.2019 வரை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு”
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, அக்னி நக்ஷத்திரத்தின்
தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும்,
வருண பகவானின் கருணை வேண்டியும், உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் சென்ற
04.05.2019 சனிக்கிழமை முதல் 29.05.2019 வெள்ளிக்கிழமை வரை 27 நாட்கள் 27
நக்ஷத்திரகாரர்களின் நலன் கருதி அஸ்வினி நக்ஷத்திரம் முதல் ரேவதி நக்ஷத்திரம் வரை
ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு தன்வந்திரி ஹோமத்துடன் தொடர்
திருமஞ்சன திருவிழாவுடன் லக்ஷார்ச்சனை, புஷ்பாஞ்சலி
வைபவங்கள் நடைபெறுகிறது. மூன்றாவது நாளான இன்று 06.05.2019 திங்கள்கிழமை மூலவர்
தன்வந்திரி பெருமாளுக்கு தயிர் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை 07.0.5.2019 செவ்வாய்கிழமை
தன்வந்திரி ஹோமத்துடன் தேன் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மே 30 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை புஷ்பயாகம், அன்னப்பாவாடை
உற்சவம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment