தன்வந்திரி பீடத்தில்ராஜயோகம் தரும்ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஹோமம்.
இப்பாரத பூமியில் ஒரே மேடையில், ஒரே நேரத்தில் 16 தெய்வங்களுக்கு
திருக்கல்யாண வைபவங்கள் நடைபெற்ற வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில்
அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமாகும்.
இப்பீடத்தின் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன்
அவ்வப்பொழுது பிரம்மாண்ட யாகங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள மாமேரு மற்றும் காயத்ரி தேவியை
ஆராதிக்கும் வகையில் வருகிற 01.05.2019 புதன்கிழமை மே தினத்தை முன்னிட்டு
காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஹோமம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மஹாமேருவிற்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும்
சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளது.
ஸ்ரீ ராஜ
ராஜேஸ்வரி அஷ்டகமும் யாகமும் :
ஸ்ரீ
ராஜராஜேஸ்வரி தேவி ஹோமத்தின் மூலம் அழியா செல்வம், அந்தஸ்து, புகழ், பதவி, நோயற்ற மங்களமான குடும்ப சுகவாழ்வு, உயர்கல்வி ஆகியவைகளை அளிக்கவல்லது. ஸ்ரீ
ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் தலைப்பே எல்லா கடவுள்களுக்கும் ராணியானவள், சர்வ வல்லமை பொருந்தியவள், எல்லா
இடத்திலும் வ்யாபித்துள்ளவள், சுபத்தைத் தருபவள், சாம்ராஜ்ய லக்ஷ்மியை அளிப்பவள். இவளே ஆத்ம ஸவரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆவாள்.
நாம் ஒவோருவரும் வாழ்வில் மேலும் மேலும் வளர்ச்சி காண வேண்டும். பல்வேறு வழிகளில் செல்வம் சேர்க்க வேண்டும் என்று எண்ணுகிறோம். அதில் நமக்கு ஏமாற்றம் ஏற்பட்டால், நமக்கு பயம் ஏற்பட்டு, தடுமாற்றத்துடன், தவறு செய்து, துன்பங்களில் சிக்கிகொள்கிறோம். இத்தகைய தவறை செய்யாமல் இருக்க நம்மை காத்து அணைக்கும் தெய்வமே ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆகும். ராஜ ராஜேஸ்வரியை ‘ஆத்ம ஸ்வரூபிணி’ என்றே வர்ணிக்கப் படுகிறாள் அம்பிகை!
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் யாகத்தில் பங்கேற்பதின் மூலம் துர்சக்திகள் அண்டாது, ஏவல், பில்லி சூன்யங்கள் நம்மை விட்டு விலகும், விரோதிகள் தன்னால் அழிந்து போவார், துரோகிகளுக்கு சந்ததி தோஷம் உண்டாகும். புகழ் கூடும். வசிய சக்தி உண்டாகும். சித்து வேலைகள் கை கூடும். அதிர்ஷ்ட லக்ஷ்மி நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வாயில் கதவை தட்டுவாள். தோல்விகள் ஏற்படாது. அனைவரும் பணிந்து போவார்.
இந்த கலியுகத்தில் காக்கும் அன்னையாக விளங்கும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியை வேண்டி நடைபெறும் ஹோமத்தில் பங்கேற்று, பிரார்த்தனை செய்து அனைத்து வளங்களையும் பெற்று ராஜயோகத்துடன் வாழ்வாங்கு வாழலாம். அழியாத ஐஸ்வர்யங்களையும், பதவி உயர்வையும் தரவல்ல ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஹோமம் அழியா செல்வம், அந்தஸ்து, புகழ், பதவி, நோயற்ற மங்களமான குடும்ப சுகவாழ்வு, உயர்கல்வி ஆகியவைகளை அளிக்கவல்லது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி தேவியின் அருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment