வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து ஹோமத்துடன்
ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப ஹோமம் நிறைவு.
மாண்புமிகு நீதியரசர் திரு. முரளிதரன் அவர்கள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளின் பரிபூரண அருளால் நோய்கள் நீங்கி அனைத்து பயன்களையும் பெற சென்ற 19.07.2018 முதல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 100 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப யக்ஞம் இன்று 28.10.2018 காலை நிறைவு பெற்றது.
இன்று காலை 7.00 மணியளவில் வேத பாராயணம், கோபூஜை, திருப்பள்ளி எழுச்சி, யாகசாலை பூஜை, கலச பூஜை நடைபெற்று மஹா தன்வந்திரி ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், மஹாலக்ஷ்மி ஹோமத்துடன் 11.30 மணியளவில் மஹாபூர்ணாஹுதி நடைபெற்று, கலச புறப்பாடு செய்து ஸ்ரீ தன்வந்திரி மூலவர் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி மற்றும், சுதர்சனாழ்வாருக்கு பஞ்சசூக்த பாராயணத்துடன் 48 கலசங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு.M.V. முரளிதரன் அவர்கள், திருமதி. முரளிதரன் அவர்கள், சென்னை நங்கநல்லூர் 108 சக்திபீட பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ காமாட்சி ஸ்வாமிகள், சித்தஞ்சி தவத்திரு. மோகனானந்த ஸ்வாமிகள், திருவண்ணாமலை சீரடி சாயிபாபா ஆலய நிர்வாகி திரு. சாயி ரவிச்சந்திரன் அவர்கள், கொடுமுடி ஆட்சி பீடம் தவத்திரு. ராணியம்மாள், சென்னை தவத்திரு. Dr. கவி முரளிகிருஷ்ணன், சென்னை பெருங்கவிக்கோ சேதுராமன் அவர்கள், சினிமா தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக், வாலாஜாபேட்டை Dr. குழந்தைவேல் குடும்பத்தினர், வேலூர் தென்னிந்திய புரோகிதர் சங்க நிர்வாகி திரு. V.R. சீதாராமன் அவர்கள், ஆற்காடு மஹாலக்ஷ்மி நர்சிங் கல்லூரி, லக்ஷ்மி லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், ஆந்திரா, கர்னாடக, கேரள, பாண்டிச்சேரி மாநிலத்தில் சேர்ந்த பக்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் யாகத்தில் மூலிகைகளை சேர்த்து கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து பங்கேற்றவர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி புகைப்படவும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் விரைவில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழா பத்திரிகையை மாண்புமிகு நீதியரசர் அவர்கள் வெளியிட மேல்சித்தாமூர் ஜீனகாஞ்சி ஜைன மடாதிபதி திரு. லக்ஷ்மிசேன பட்டாரக்கர அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார் விழா இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment