கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Tuesday, October 30, 2018
Monday, October 29, 2018
Sunday, October 28, 2018
Kodi Japa Maha Danvantri Homam - 100th Day (28.10.2018)...
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து ஹோமத்துடன்
ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப ஹோமம் நிறைவு.
மாண்புமிகு நீதியரசர் திரு. முரளிதரன் அவர்கள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளின் பரிபூரண அருளால் நோய்கள் நீங்கி அனைத்து பயன்களையும் பெற சென்ற 19.07.2018 முதல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 100 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப யக்ஞம் இன்று 28.10.2018 காலை நிறைவு பெற்றது.
இன்று காலை 7.00 மணியளவில் வேத பாராயணம், கோபூஜை, திருப்பள்ளி எழுச்சி, யாகசாலை பூஜை, கலச பூஜை நடைபெற்று மஹா தன்வந்திரி ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், மஹாலக்ஷ்மி ஹோமத்துடன் 11.30 மணியளவில் மஹாபூர்ணாஹுதி நடைபெற்று, கலச புறப்பாடு செய்து ஸ்ரீ தன்வந்திரி மூலவர் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி மற்றும், சுதர்சனாழ்வாருக்கு பஞ்சசூக்த பாராயணத்துடன் 48 கலசங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு.M.V. முரளிதரன் அவர்கள், திருமதி. முரளிதரன் அவர்கள், சென்னை நங்கநல்லூர் 108 சக்திபீட பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ காமாட்சி ஸ்வாமிகள், சித்தஞ்சி தவத்திரு. மோகனானந்த ஸ்வாமிகள், திருவண்ணாமலை சீரடி சாயிபாபா ஆலய நிர்வாகி திரு. சாயி ரவிச்சந்திரன் அவர்கள், கொடுமுடி ஆட்சி பீடம் தவத்திரு. ராணியம்மாள், சென்னை தவத்திரு. Dr. கவி முரளிகிருஷ்ணன், சென்னை பெருங்கவிக்கோ சேதுராமன் அவர்கள், சினிமா தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக், வாலாஜாபேட்டை Dr. குழந்தைவேல் குடும்பத்தினர், வேலூர் தென்னிந்திய புரோகிதர் சங்க நிர்வாகி திரு. V.R. சீதாராமன் அவர்கள், ஆற்காடு மஹாலக்ஷ்மி நர்சிங் கல்லூரி, லக்ஷ்மி லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், ஆந்திரா, கர்னாடக, கேரள, பாண்டிச்சேரி மாநிலத்தில் சேர்ந்த பக்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் யாகத்தில் மூலிகைகளை சேர்த்து கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து பங்கேற்றவர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி புகைப்படவும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் விரைவில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழா பத்திரிகையை மாண்புமிகு நீதியரசர் அவர்கள் வெளியிட மேல்சித்தாமூர் ஜீனகாஞ்சி ஜைன மடாதிபதி திரு. லக்ஷ்மிசேன பட்டாரக்கர அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார் விழா இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Saturday, October 27, 2018
Kodi Japa Maha Danvantri Homam ....
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
உலக மக்களின் உடல் பிணி மற்றும் உள்ளத்து பிணி நீங்க,
சென்ற 19.07.2018 முதல் நடைபெற்று
வந்த
ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப ஹோமம்
நாளை நிறைவுபெறுகிறது.
மஹான்கள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை என்றாலே ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடம்
என்றுதான் அனைவரின்
நம் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது எனலாம். ஆரோக்ய பீடத்தில்
எழுந்தருளியுள்ள எம்பெருமானான நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும், ஆரோக்ய லக்ஷ்மி தாயாருக்கும்,
இதர 75 பரிவார மூர்த்திகளுக்கும் பக்தர்களின் தேவைகளுக்காக நிவர்த்திக்காக யாகங்கள், ஜபங்கள் வைபவகமாக அனுதினமும்
நடந்து வருகிறது என்பது
அனைவரும் அறிந்ததே. ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு கோடி
ஜப யக்ஞமும், அர்ச்சனையும், மஹாபிஷேகமும் உலக நன்மை கருதியும், மக்கள் வாழ்வாங்கு வாழவும் மாபெரும் கோடி ஜப ஹோமம் சென்ற 19.07.2018 முதல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
நடைபெற்று
வருகிறது.
“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆசிகளுடன்
ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளின் பரிபூரண அருளால் நோய்கள் நீங்கி அனைத்து பயன்களையும் பெற நடைபெறும் இந்த யாகம் நாளை 28.10.2018 ல்
100 நாட்கள் நிறைவுபெறுகிறது. இந்த மஹாபூர்ணாஹுதி பல்வேறு மஹான்கள் மற்றும்
பக்தர்கள், மாணவ மாணவிகள் முன்னிலையில் காலை 11.30 மணியளவில் நடைபெற்று ஸ்ரீ
தன்வந்திரி மூலவருக்கும் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மிக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற
உள்ளது. பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழக்கின்றோம். சென்ற மூன்று
நாட்களாக ஆற்காடு மஹாலக்ஷ்மி நர்சிங் கல்லூரி, லக்ஷ்மி லோகநாதன் பள்ள, வாலாஜா
வி.கெ.வி. பள்ளி, ஸ்ரீ நாராயண வித்யாலயா பள்ளி, ப்ரைட் மைண்ட்ச் வித்யோதயா பள்ளி,
காவேரிப்பாக்கம் கலைமகள் மெட்ரிகுலேஷன்
பள்ளி போன்ற பல்வேறு பள்ளிகளிலிருந்து 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்,
ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு யாகத்தில் மூலிகைகளை சேர்த்து கூட்டுப்பிரார்த்தனை
செய்தனர். இதனை தொடர்ந்து பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ தன்வந்திரி
புகைப்படவும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
Sunday, October 21, 2018
Rahu Ketu Homam - Kali Yagam ....
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வருகிற 07.11.2018 புதன்கிழமை
அமாவாசையில்
ராகு-கேது ஹோமத்துடன்
மஹாகாளி யாகம் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி உலக நலன் கருதியும், சகல கார்ய சித்தி பெறவும், வருகிற 07.11.2018 புதன்கிழமை காலை 11.00 மணியளவில், அமாவாசையை முன்னிட்டு ராகு-கேது ஹோமத்துடன் மஹாகாளி யாகம் நடைபெற உள்ளது.
மஹா காளி யாகம்
:
தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த
தாயாக விளங்குகின்றார். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்த அன்னையானவள்
அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய
சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை
சேர்ப்பாள். இத்தேவியின் அருள் பெற அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் பயன்பெற
தன்வந்திரி பீடத்தில் ராகு-கேது ஹோமத்துடன் மஹாகாளி யாகம் நடைபெற உள்ளது.
தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு
இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர்.
மேற்கண்ட மஹா யாகங்கள் சகல கார்ய சித்தி பெறவும், தடைகள்
நிவர்த்தி பெறவும், சர்பதோஷங்கள் விலகவும், ஸ்ரீ அஷ்ட
லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க
சுமங்கலி பிராப்தி பெறவும், யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி
நடைபெறுகிறது. நடைபெறுகிறது.
ராகு – கேது ப்ரீத்தி
ஹோமம் :
சர்ப தோஷங்கள், நாக தோஷங்கள்
விலகவும், உத்யோகம், தொழில், வியாபாரம், திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் உள்ள தடைகள் அகலவும், சினிமா துறையில்
புகழ் பெறவும், கேமராமேன் போன்ற டெக்னிக்கல் துறைகளில் முன்னேறவும், பல கலைகளில்
வித்தகராகவும், கலைத்துறை, நிழற்படம், எடிட்டிங், அனிமேஷன் போன்ற
துறைகளில் சிறந்து விளங்கவும், இசை துறையில் பெயரும் புகழும் கிடைக்கவும்,
அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாபெரும் ராகு – கேது பிரீதி ஹோமம்
நடைபெறுகிறது.
இந்த மஹா யாகங்களில் பங்கேற்பதின்
மூலம் சாபங்கள், தடைகள் ஆகியவை நீங்கி செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை
கிடைக்கும். மேலும் நினைத்த காரியம் ஜெயமாகும். இதில் பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை
பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, வால் மிளகு, லவங்கம் போன்ற
திரவியங்கள் யாகத்தில் சேர்க்கப்பட உள்ளது. ஹோமத்தில் நாம் இடும் மூலிகை பொருட்கள்
தெய்வத்திற்கு உணவாகின்றன. இந்த ஹோமத்தில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன.
உதாரணமாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு
இராஜ வசியத்தையும், செந்நாயுருவி
ஆண் வசியத்தையும், நில ஊமத்தை
பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு
சத்ரு வசியத்தையும், சீந்தில்கொடி
தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல கார்யங்கள் வெற்றி பெற யாகத்தில்
சேர்க்கப்பட உள்ளது. ஹோமத்தீயில் தெய்வங்களை வசியம் செய்து, பால், பழம், தேன், மூலிகை
சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரம்
ஜபித்து நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று
நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033
/ 09443330203
Friday, October 19, 2018
Navaratri Pooja - Sulini Duraga Homam - Shirdi Sai Baba's 100th Aradhanai ......
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
நவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன்
சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு
சிறப்பு ஆராதனை விழா நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நவராத்திரியை
முன்னிட்டு சூலினி துர்கா ஹோமம், குபேர சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம், மஹா சரஸ்வதி ஹோமம்,
ருத்ர ஹோமம், அஷ்ட பைரவர் சகித காலபைரவர் ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், காயத்ரீ
ஹோமம், அன்னபூரணி ஹோமம், போன்ற பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று உரிய தெய்வங்களுக்கு
மஹா அபிஷேகத்துடன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு
அக்ஷராப்பியாச பூஜையும் சரஸ்வதி தேவிக்கு பாலபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து
சீரடி சாயிபாபாவின் 100 ஆம் ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு சீரடி சாயிபாபா மூலமந்திர
ஹோமமும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. மேலும் நாளை ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ
தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Subscribe to:
Posts (Atom)