வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில்
அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் இன்று 29/01/17 ஞாயிற்று கிழமை காலை 10.00
மணியளவில் சிறந்த வேத விற்பன்னர்களை
கொண்டு சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற்றது. இந்த
ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம், முனீஸ்வர
ஹோமம் ராகு கேது ஹோமம் நடைபெற்றது.
இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின்
பலன்கள் ஏராளம். பெண்களின்
திருமணத் தடைகள் நீங்கி திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு
ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும்
அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும்
இருக்கும்என்பது
நம்பிக்கையாகும்..
மேலும் இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு
கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்பட்டது.. ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ
தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்றது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
No comments:
Post a Comment