வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை,
கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி
மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இது வரையில் 75 விதமான சன்னதிகளில்
சைவம், வைணவம், சாக்தம், செளரம், கெளமாரம் மற்றும் காணாபத்யம் போன்ற 6 மதங்களுக்கு அதற்குரிய தெய்வங்கள்
ப்ரதிஷ்டை செய்துள்ளர். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்தலத்தில் உலக மக்களின் நலன்
கருதியும் பால ஜோதிட வாசகர்களின் நலன் கருதியும் கீழ் கண்ட தேதிகளில் “நன்மை தரும்
நான்கு ஹோமங்களை” ஸ்வாமிகள் முன்னின்று நடத்துகிறார், பக்தர்கள் இந்த வாய்ப்பை
பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறோம்.
1.
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சங்கடஹர கணபதி ஹோமம்.
வருகிற 19.10.2016 புதன்
கிழமை சதுர்த்தியை முன்னிட்டு மாலை 5.00 மணியளவில், சங்கடஹர கணபதி ஹோமம் நடைபெறஉள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர
சதுர்த்தி" நாளில் விரதம் இருந்து கணபதி ஹோமத்தில் கலந்து கொண்டால்
குடும்பத்தில் சுபிட்சமும்,
தடைகளின்றி எல்லா காரியங்களிலும்
வெற்றி பெறலாம். மேலும், இந்த ஹோமத்தில்
பங்கேற்பவர்களுக்கு நீண்ட நாட்களாக
தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு
உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை
அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்களுக்கு, சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.
2. கால சர்ப தோஷ பரிஹார ஹோமம்
24.10.2016 அன்று
திங்கட் கிழமை 10.00 மணியளவில் ஆயில்ய நட்சத்திரத்தன்று சிறப்பு கால சர்ப தோஷ
பரிஹார ஹோமம் நடைபெறும். இராகு கேது தோஷம் அகலவும், நாக தோஷம் சர்ப தோஷம் விலகவும், ராகுபுக்தி ராகுதிசையினால் ஏற்படும்
தடைகள் அகலவும், திருமணம் குழந்தைபேறு அமையவும் மேலும்
ஒருவருடைய வாழ்க்கையில் இருந்து வரும் குடும்ப பிரச்சனைகள், நாள் பட்ட வியாதிகள், வியாபாரத்தில் வரும் இடையூறுகள், சகோதர, சகோதரிகளுக்குள் உள்ள மனவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பெற, ஒருவருடைய வேலை அல்லது செய்யும் தொழில்
மந்தமில்லாமல் சீராக நடைபெற, வீடு
அல்லது வாகனங்கள் மூலமாக வரும் தொல்லைகளிலிருந்து விடுபட, தந்தையுடன் இருந்து வரும் மனக் கசப்பு
நீங்கி சுமுக உறவு நிலவ, குடும்ப கஷ்டங்கள் இன்றி வளம் பெற
மற்றும் எந்த காரியமும் தடைகள் இல்லாமல் தொடர்ந்து வெற்றி பெற இந்த கால சர்ப தோஷ
பரிஹார ஹோமம் செய்வதால் பலன் கிடைக்கும்.
3. வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி
ஹோமம்
27.10.2016, வியாழக் கிழமை அன்று காலை 7.45 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு
வாஸ்து சாந்தி ஹோமம், ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு ஆலயம் அமைத்து
பிரதி மாதம் வளர் பிறை பஞ்சமி மற்றும் வாஸ்து நாட்களில் விசேஷமான முறையில் யாக
குண்டங்கள் அமைத்து ஹோமம் செய்து, கலச
நீரை வாஸ்து தேவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும்,
கட்டுமானப்
பணிகளில் மற்றும் நாம் வசிக்கும் இடங்களில் குறைகள் ஏதும் இருப்பின், அவற்றிற்குப் பரிகாரமாக வாஸ்து சாந்தி
ஹோமம் செய்வது பலன் தரும்.
4. தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஸ்ரீ துர்கா ஹோமம்
29.10.2016, சனிக் கிழமை அன்று காலை 10.00
மணியளவில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்பு ஸ்ரீ துர்கா ஹோமம் நடைபெறும்.
இந்த ஹோமம் நவ சக்தி அருளால் கீர்த்தி புகழுடன்
வாழவும், நம் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ செய்த
பாவங்களை நிவர்த்தி செய்வதற்காகவும், தீய
மோகத்திலிருந்து விடுபடவும், உலக
அமைதிக்காகவும் செய்யப்படுகிறது. தீபத் திருநாளான, தீபாவளித் திருநாளில் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது சிறப்பு வாய்ந்த
பலன்களைத் தரும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த புனித ஹோமங்களில்
எண்ணற்ற சிகப்பு நிற பழங்கள், சிகப்பு மிளகாய் வத்தல், பல வகையான சிகப்பு புஷ்பங்கள், பூசனிக் காய்கள் பலவகையான மூலிகைகள், பழங்கள், திரவியங்கள்,
பால், தயிர், பூக்கள், பட்டு வஸ்த்திரங்கள் அகிய அனைத்து பொருட்களும் உபயோகப்படுத்தப்படும்.
இந்த ஹோமத்தில் பங்கு பெற்று தோஷ நிவர்த்தி செய்து வாழ்வில் வளம் பெற
வேண்டுகிறோம். பக்தர்கள் மேற்கண்ட ஹோமத்தில் பங்கேற்று ஸ்தாபகர் பீடாதிபதி ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று நலமாய் வாழ அன்புடன் அழைக்கிறோம்.
மேற்காணும் ஹோமங்களில்
பங்கு பெற விழைவோர் ஒரு ஹோமத்திற்கு ரூ.1,000/- வீதம்
தங்கள் பங்களிப்பை தெரிவித்து, பங்கு பெறும் ஹோமத்தின்
பெயர், தங்கள் பெயர், கோத்ரம், நட்சத்திரம்,மற்றும் முகவரியுடன், ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் பெயருக்கு M.O அல்லது D.D அனுப்பி பகவத் கைங்கர்யத்தில் பங்கு
கொள்ள பிரார்திக்கிறோம்.
தொடர்புக்கு:
ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்கிய பீடம், கீழ் புதுப்பேட்டை, அனந்தலை
மதுரா வாலாஜாபேட்டை – 632513.
Ph : 04172-230033/9488209877/9488213701
வங்கி
விவரங்கள்:
Sri
Muralidhara Swamigal
State Bank
of India Walajapet - 632513
A/C No.
10917462439
IFSC Code: SBIN0000775
No comments:
Post a Comment