தன்வந்திரி பீடத்தில் சுதர்சன ஜெயந்தியைை முன்னிட்டு இலட்ச ஜபஹோமத்துடன் மகா சுதர்சன ஹோமம். ஜூலை 10ந்தேதி் முதல் 12வரை நடந்தது.
வாலாஜாபேட்டை, ஜீலை 12 வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தனவந்திரி பீடத்தில் ஸ்ரீசுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை 20 க்கும் மேற்பட்ட வைணவர்களை கொண்டு இலட்ச ஜபஹோமத்துடன் மகா சுதர்சன ஹோமம் நடந்தது.
இதையொட்டி 09ம் தேதி சனிக்கிழமை கருட ஹோமம் நடைபெற்றது.
மழை வேண்டியும் இயற்கை வளம் வேண்டியும் மக்கள் ஆரோக்கியமாக
இருக்க வேண்டியும் நடந்த இந்த ஹோமத்தில் வடநாடு மற்றும் ஆந்திர
மாநிலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு ஸ்வாமிகள் சென்று புனித நீரை சேகரித்துவந்து இந்த யாகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து பீடத்தில் உள்ள சுதர்சன மூலவருக்கு நவகலச அபிஷேக திருமஞ்சனம் செய்யப்பட்டன.
ஸ்ரீ சுசர்சன்ஹோம பலன்கள்: வாழ்வில் பல நன்மைகள்ப்பெறுவதற்கு நாம் ஸ்ரீ சுதர்சன ஹோமம் செய்வது அவசியம். ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களை கொடுக்க வல்லது. தீர்க்க ஆயுசு பெறவும், பூரண ஆயுள்கிடைக்கவும், நினைத்து நிறைவேறவும்
அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும், மனநலம் குணமாகி புத்தி பேலித்தவர்கள் நலம் பெறவும், விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர் சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்கு தெரியாத நோய்கள் நீங்கவும், கோபம் தணியவும் பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.
சுதர்சன் ஹேமத்தில் வெண்காடு. எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால்பாயசம், அரும்புல், சர்க்கரை பொங்கல், தயார், நாயுருவி, நெய், பஞ்சகவியம்,கருநொச்சி இருமுள், நீலஊத்தபூ,உள்ளிட்டபல்வேறு பொருட்கள் ஹோமத்தில் சேர்க்கபட்டன.
சுதர்சன பெருமாளுக்குரிய 16 விதமான அபிஷேக திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகமும், விஷேச அர்ச்சனையும் தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி டாக்டர் முரளிதர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
ஹோமத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு, நந்தகோபால் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் சென்னை திரு.முருகைய்யா ஐ.ஏ.எஸ் வாலாஜா வட்டாட்சியர் திருமதி.பிரியா மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆந்திரா தமிழ் நாடு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. இந்த தகவலை பீடாதிபதி டாக்டர் முரளிதர சுவாமிகள் தெரிவித்தார்
தன்வந்திரி யாகம் நடத்திட பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமயில் 13 நபர்கள் கொண்ட குழவினர் புதன் கிழமை முதல் ஞாயிறு வரை காசி, அயோத்தி,நைமிசாரண்யம்,மற்றும் லக்னோ ஆகிய ஷேத்திரங்களில் யாத்திரை செல்கின்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment