Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, July 31, 2016

THANKS TO " MAALAISUDAR " 28.07.2016


2016 ஆகஸ்டு 12 முதல் 17 மாலை வரை.

வாலாஜா தன்வந்திரி பீடத்தில் தன்வந்திரிக்கு ஏகதின லட்சார்சனையுடன் மாபெரும் நோய் நிவாரண ஹோமம் நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பெற்றோருக்காக அமைத்துள்ள தன்வந்திரி பீடத்தில் வருகிற 12.08.2016 வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணி முதல் வரலட்சுமி விரதம்,ஆடி வெள்ளியை முன்னிட்டு துவங்கி 17.08.2016 புதன் கிழமை மாலை பௌர்ணமி வரை உலக நலன் கருதியும் உலக மக்களின் உடல்நலம் மனநலம் வேண்டியும், வாழ்வில் வளமும் நலமும் பெறுவதற்கும் கீழ்கண்ட பலன்களை பெறுவதற்க்கும் இந்த நிவாரண ஹோம வழிபாடு நடைபெறுகிறது.
இயற்கைச் சீற்றம், பேரிடர்கள், கடல் கொந்தளிப்பு போன்ற பேராபத்துகளிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், உலக மக்களின் தேவைகளான திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நிரந்தர உத்தியோகம், கல்வி, குடும்ப க்ஷேமம், கடன் நிவாரணம், நோய் நிவாரணம், மன அமைதி, மன சாந்தி, ஆடை அணிகலன்கள் போன்றவற்றைப் பெறவும், துர் மரணம், விபத்துக்கள், வறுமை போன்றவற்றைத் தவிர்க்கவும், கொடிய வியாதிகளால் துன்பம் ஏற்படும்போதும், கிரகங்களின் பெயர்ச்சியினாலும் சுழற்சியினாலும் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும், வழக்குகளில் வெற்றி பெறவும், சொத்து பிரச்னைகள் தீரவும், தம்பதிகளின் ஒற்றுமை, தாம்பத்ய அந்யோன்யம் வேண்டியும், சகல பாபங்களிலிருந்து விடுதலை பெறவும், சகல காரிய ஸித்தி அடையவும், லட்சுமி கடாட்சம் குறைவில்லாமல் இருக்கவும், இளைய தலைமுறையினரின் ஆரோக்கியம் கருதியும், நல் பழக்க வழக்கங்கள் வளரவும், அவர்களிடம் பாசம், நேசம், பக்தி போன்றவை சிறக்கவும் இத்தகைய ஹோமங்கள் மாபெரும் தூண்டுகோல் சக்தியாக அமையும்.
நல்வாழ்க்கை நாம் வாழ்வதற்கு தர்ம சிந்தனை, பொறுமை குணம், சகிப்புத் தன்மை போன்றவை எப்படி அவசியமோ, அதுபோல் இறை வழிபாடும் அவசியம் தேவை.
இறை பக்தி இல்லாத வாழ்க்கை, நிலவில்லாத வானம் போல்! மீன் இல்லாத கடல் போல்! அப்படிப்பட்ட வாழ்க்கையை & அதாவது இறை பக்தி இல்லாத ஒரு வாழ்க்கையை ஒருவர் வாழ நேர்ந்தால் அதனால் எந்தப் பலனும் அவருக்கு இல்லை.
கடந்த பிறவியில் செய்துள்ள நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு ஜீவனும் அதற்குரிய பலன்களை இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும். அதன்படி அனுபவித்து வருகின்றன. இது நியதி. என்றாலும் & ஈடில்லாத இறை பக்தியினாலும், தயாள குணத்தினாலும், வாழுகின்ற முறையினாலும் தீவினைகளின் கெடுபலன்களை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும். இது சர்வ நிச்சயம்.
எனவே, வாழுகின்ற இந்தக் காலத்தில் நாம் அனுபவிக்க வேண்டிய தீவினைகளை ஓரளவு குறைப்பதற்கு இறைவனை வழிபட்டே ஆக வேண்டும். அவனது அருளுக்குப் பாத்திரம் ஆக வேண்டும். எங்கும் நிறைந்துள்ள இறைவனை நாம் வழிபடுவதற்குப் பல முறைகள் உள்ளன.
சங்கீதம், நாம கோஷம், அர்ச்சனை, அபிஷேகம், ஜபம் & இப்படிப் பல வழிபாட்டு முறைகள் உள்ளன. இவற்றில் முக்கியமான ஒரு வழிபாட்டு முறை & ஹோமம் செய்வது.
ஹோமங்கள் மூலமாக நமது பிரார்த்தனைகளும் கோரிக்கைகளும் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த ஹோமங்களில் ஒரு தூதுவராகச் செயல்படும் அக்னி பகவான்தான் நமது கோரிக்கைகளை & எந்தெந்த தேவதைகளுக்கு வைக்கிறோமோ & அந்தந்த தேவதைகளிடம் கொண்டு போய் சேர்ப்பிக்கிறார்.
எனவேதான், வாலாஜாவில் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் துவங்கிய காலத்தில் இருந்தே ஹோமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அக்னி பகவானின் வாசம் இல்லாத நாளே இங்கு இல்லை. தினம்தோறும் ஹோமங்கள். தங்களுக்கு நேர்ந்த பல விதமான பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டி, இந்த ஆரோக்ய பீடம் தேடி வருகிறார்கள். ஸ்ரீதன்வந்திரி பகவானை வணங்குகிறார்கள்.
‘யக்ஞ பூமி’ என்று சொல்லும் அளவுக்கு இதுவரை இங்கே பல்லாயிரக்கணக்கான ஹோமங்கள் நடந்துள்ளன. ரோகம் தீர்த்து யோகம் அளிக்கும் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீட யாக சாலையில் ஆண்டு முழுதும் ஐஸ்வர்யத்துடன் ஆயுள் பலம் பெற அபூர்வமான பல யாகங்கள் நடந்து வருகின்றன. இந்த யாகங்களுக்கு ஏற்ற வகையில் விசேஷமான சந்நிதிகளும் இங்கே அமைந்திருப்பது சிறப்பு.
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடக்கும் ஹோமங்களுக்கு பெரும் சிறப்பு உண்டு. காரணம் & இங்கே இருக்கின்ற யாகசாலையில் ‘அணையா அக்னி’ என்றென்றும் வாசம் செய்து கொண்டிருக்கிறது. பீடம் துவங்கிய நாளில் ஏற்றப்பட்ட யாகசாலை அக்னி, இன்றளவும் விடாமல் தன் சாந்நித்தியத்தை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை.632513
e-mail : danvantripeedam@gmail.com , web:www.danvantritemple.org, www.danvantripeedam.blogspot.in



GURU PEYARCHI YAGAM at DANVANTRI PEEDAM,WALAJAPET. AUGUST, 2nd morning 10.AM and 11th evening 8.00 PM. PARIHARA RASIGAL Mesham, Mithunam,Kadagam,Kanni,Thulam,Dhanusu and Kumbam.Per Rasi Sangalpam RS 500/- Only On AUGUST 12th Morning 10,00 AM, 508 DAMPATHI POOJA , Sangalpam per Dampathi RS 1000/- .e-mail: danvantripeedam@gmail.com, CT.9443330203


Thursday, July 21, 2016

வீரப்ரஹ்மான்காருக்கு மாடு மேய்க்கும் வேலை கொடுத்த அச்சம்மாவின் இல்லம்





வீர ப்ரஹ்மங்காரின் ஓலை சுவடிகள் ஒரு பகுதி பிரதிஷ்டை செய்யப்பட்ட புளிய மரம்





மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜந்தா குகை கோயில் அருகில் அமைந்துள்ள பத்திர மாருதி ஆலயத்தில் ஸ்வாமிகள் தரிசனம்.



மகாராஷ்டிர மாநிலம் நாசீக் அருகில் சீதை தபஷ் செய்த குகை மற்றும் கோயிலில் ஸ்வாமிகள் தரிசனம்.










மகாராஷ்டிர மாநிலம் நாசீக் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி ஆசிரமம் ரேணுகா தேவி ஆலயம் ஸ்ரீ சிவாநந்த சரஸ்வதி மகாராஜ் ஆசிரமத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்











ஆந்திர மாநிலம் ஹைதரபாத் அருகில் பிரசித்தி பெற்ற யாதுகிரி குட்டா லஷ்மி நரசிம்ம ஷேத்திரத்தில் ஸ்வாமிகள் தரிசனம்.





ஆந்திர மாநிலம் செகண்டிராபாத் அருகே அமைந்துள்ள டாக்டர் ஸ்ரீநிவாஸ் அவர்களின் துர்கா லட்சுமி சரஸ்வதி ஆலய கும்பாபிஷேகத்தில் ஸ்வாமிகளின் அருளாசிகள் வழங்கிய காட்சிகள்