ஆடிப்பெருக்கு – பதினெட்டாம் பெருக்கு
சிறப்பை தெரிந்துகொள்ளும் விதத்திலும், போற்றிடும் விதத்திலும்
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஆகஸ்ட் 3, 2015ல் சிறப்பு பிரார்த்தனைகள்…
வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டையில்
அமைந்திருக்கும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பாரம்பரியங்களின் சிறப்பை மக்கள்
அறிந்திடும் விதத்திலும், சமய பூஜைகளைப்பற்றி தெரிந்திடும் விதத்திலும், இயற்கையை துதித்திடும்
விதத்திலும், மாங்கல்யத்தின் மகிமையை உணர்ந்து போற்றிடும் வகையிலும், வருண பகவானின்
கருணை உலக மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திடும் விதத்திலும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் சிறப்பு பிரார்த்தனை நடத்த உள்ளார்.
ஆடிப்பெருக்கின் சிறப்பு
ஆடிப்பெருக்கு என்பது
ஆடி மாதம் 18ஆம் நாள்
ஆகும். இந்நாளில், இம்மாதத்தில் தமிழக நீர்நிலைகளில்
நீர் பெருக்கெடுத்து
ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு
என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடிப்பு இடங்களில்
பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்.
இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை
விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு சோளம்
போன்ற தானியங்களை விதைத்தால் தான்
அவர்கள் தை மாதத்தில் அறுவடை
செய்ய முடியும். மேலும் உழவர் திருநாளை ஒவ்வொரு உழவரும் றிப்பாக
நடத்த முடியும். அதற்கு வற்றா
நதிகளை தங்கள் கடவுளாக போற்றி
மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின்
உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே
ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது
எனலாம்.
மக்கள் ஆற்றங்கரைகளில்
கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு
களிப்பர். இந்து சமயத்தவர் மற்றும்
உழவர்கள் கோயில்களில் சென்று
வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள்
ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு
இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம்
செய்து, பசு சாணத்தால் மெழுகி
அதன் மேல் வாழை இலையை
விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன்
முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில்
வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து,
ஊதுபத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத
விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை
மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில்
விடுவார்கள். இப்படி செய்தால், நீர்
வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும்
மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில்
இச்சடங்குகளை செய்வார்கள். இது கங்கா வழிபாடு எனலாம். அது மட்டும் அல்லாமல் அன்று
தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு
சாதங்கள் – சித்ரா அன்னங்களான
(தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல்,
எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி
சாதம், தயிர் சாதம்) செய்து
அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து
குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
மேலும் கணவர்கள் ஆரோக்யத்துடன்
வாழ திருமாங்கல்யத்தை வைத்து சுமங்கலி பூஜை
செய்து, மஞ்சள் சரடு அணிந்து
கொள்வர். நாட்டில் சுபிட்சமாக மழை பெய்து விவசாயம்
செழிக்கவேண்டியும் சிறப்பு பூஜைகளையும் நடத்துவர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடிபெருக்கன்று ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு
வருகை தரும் பக்தர்களுக்கு அன்று நடைபெரும் விசேஷ பிரார்த்தனையில் மக்கள் ஆரோக்யமாகவும்,
இயற்கை வளத்துடனும், தீர்க்க சௌபாக்யங்களுடனும், தீர்கக ஆயுளுடனும் வாழசிறப்பு பிரசாதம்
வழங்கபட உள்ளது. மேலும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை உலக வாழ்வியல் மையமாக அமைத்து உலக
மக்களின் நலனுக்காக பலவிதமான ஆராய்ச்சிகளை செய்து வருகிற கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் பாரம்பரியங்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விதத்தில் இந்த
பிரார்த்தனை நடத்த உள்ளார்.
இந்த இனிய வைபவத்தில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய்
கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment