நீடாமங்கலம்,
ஜூன் 19, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபரிகார யாகம் தன்வந்திரி பீடம்
சார்பில் நடந்தது. குருபரிகார யாகம் வேலூர் மாவட்டம்
வாலஜாப்பேட்டையில் உள்ள தன்வந்தரி பீடத்தில்
கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில்
இருந்து தமிழகத்துக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வேண்டி
365 நாட்கள் மகாசண்டி யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் 100 நாள் யாகம் நிறைவடைந்ததையொட்டி
தன்வந்திரி பீடம் சார்பில் திருவாரூர்
மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி
ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபரிகார யாகம் நடைபெற்றது. சிறப்பு
யாகத்தையொட்டி குருபகவான், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன் ஆகிய சன்னதிகளில் சிறப்பு
அபிசேக, ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அபிசேக, ஆராதனைகள்
மற்றும் குரு பரிகார யாகத்தை
ஜோதிராமலிங்க சிவாச்சாரியார் செய்து வைத்தார். யாகத்தில்
கலந்து கொண்ட தன்வந்திரி பீட
முரளிதரசுவாமிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:- இயற்கையில்
ஏற்பட்டுள்ள மாற்றங்களால் உரிய நேரத்தில் மழை
பெய்வதில்லை. பல்வேறு வகையில் பொதுமக்கள்
பாதிக்கப்படுகிறார்கள். பாதிப்புகளில் இருந்து விடுபட்டு மக்கள்
அனைவரும் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதற்காகவும்,
கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில்
இருந்து தமிழகத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர்
கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வேலூர் வாலஜாப்பேட்டை தன்வந்திரி
பீடத்தில் 365 நாட்கள் மகாசண்டி யாகம்
நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 100 நாட்கள் யாகம் நடைபெற்று
இருக்கிறது. இதையொட்டி சிதம்பரத்தில் ருத்ராபிசேகம், திருபுவனத்தில் சரபயாகம், ஆலங்குடியில் குருபரிகார யாகம் மற்றும் அபிசேக,
ஆராதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அய்யாவாடி
கோவிலிலும், தன்வந்திரி பீடத்திலும் இன்று (வெள்ளிக்கிழமை) சுதர்சன
யாகம் நடத்தப்படும். நாளை (சனிக்கிழமை) முதல்
கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களில்
யாகங்கள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
- நன்றி தினத்தந்தி
No comments:
Post a Comment