வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
சமீப காலமாக பலவிதமான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (29.06.2015)
காலை 9.00 மணியளவில் ஸ்ரீராகு கேது, கருடாழ்வார், ஸ்ரீ லட்சுமி கணபதி, பலிபீடம் ஆகியவற்றுக்கு
மாற்று ப்ரதிஷ்டா வைபவம் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட சன்னதிகளுக்கு
கலச ஆகர்ஷணம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர்.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Monday, June 29, 2015
இரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்...
வேலூர் மாவட்டம், இரத்தினகிரி, ஸ்ரீ பாலமுருகன் ஆலய இரண்டாவது மஹா கும்பாபிஷேகம் 29.06.2015 அன்று நடைபெறுவதை முன்னிட்டு 28.06.2015 அன்று நடைபெற்ற 5வது கால யாகத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், தருமபுர ஆதினம் கட்டளை குமாரசாமி தம்பிரான், கோவிலூர் மடம் ஸ்வாமிகள் மற்றும் ஆற்காடு தொழிலதிபர் J.லட்சுமணன் ஆகியோர் பங்கேற்ற காட்சி.
Sunday, June 28, 2015
தன்வந்திரி பீடத்திற்கு தருமபுர ஆதினம் கட்டளை முனைவர் குமாரசாமி தம்பிரான் வருகை புரிந்தார்.
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 29.06.2015 திங்கட்கிழமை
காலை 9.00 மணியளவில் ஜீர்ணோதாரன அஸ்டோபந்தன கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தில்
ராகு கேது, கருடாழ்வார், ஸ்ரீ லட்சுமி கணபதி மற்றும் பலிபீடம் ஆகியவை மாற்று ப்ரதிஷ்டை
நடைபெற உள்ளது. இந்த வைபவத்திற்கு முன்னதாக இன்று காலை (28.06.2015) 10.00 மணியளவில்
நடைபெற்ற ஆரம்பகால பூஜையில் தருமபுர ஆதீனம்
முனைவர் குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள் வந்திருந்து தன்வந்திரி பகவானையும் இதர பரிவார
தெய்வங்களையும் தரிசித்து ப்ரார்த்தனை செய்து யாகசாலை பூஜையில் பங்கேற்றார்.
இதனைத்
தொடர்ந்து நடைபெற்ற சுயம்வரகலாபார்வதி யாகத்தில் கலந்து கொண்ட திருமணமாகாத பெண்களுக்கு
சிறப்பு ஆசிகள் வழங்கினார். ஹோமத்தில் பங்கேற்றவர்கள் சிறப்பு அன்னதானத்திலும் பங்கேற்றனர்
என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.
தன்வந்திரி பீடத்தில் ஜூலை 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை தன்வந்திரி பீடத்தில் யாகத்திருவிழா
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஜூலை 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்துக்களின்
புனித மாதமான ஆடி மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாக வேண்டி
ஏகோபித்த பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
காரியசித்தி ஹோமங்களாக மேற்கண்ட தேதிகளில் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கீழ்கண்ட
21 ஹோமங்களை தினசரி நடத்த உள்ளார்.
பக்தர்கள்
அனைவரும் குருபெர்ச்சியின் பலன் பெறவும், குலதெய்வங்களின் அருள்பெறவும், குரு மகான்களின்
ஆசி பெறவும், வாழ்வில் ஏற்படும் பலவிதமான தடைகளும் நீங்க கீழ்கண்ட 21 யாகங்கள் 10 நாட்கள்
தொடர்ந்து நடைபெற உள்ளது.
யாகம் செய்வதினால் ஏற்படும்
நன்மைகள் : ஒரு மனிதன்
தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள்
எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான
கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார். மேலும் தேக ஆரோக்கியம், செல்வ
வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம்,
எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத்
தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.
யோகம் தரும் யாகங்கள்…
யாகங்களின் பெயர்கள் - பலன்கள்
: 1.மகா கணபதி ஹோமம் – காரியத்தடை நீங்க. 2.ஆயுஷ்ய ஹோமம் – ஆயுள் பலம்பெற. 3.சரஸ்வதி 4.லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் – கல்வி
கேள்வி ஞானம்பெற்று அதிக மதிப்பெண்கள் பெற. 5.சூலினிதுர்கா
ஹோமம் – ராகு தசை, ராகு புக்தி மற்றும் நாக தோஷங்கள் நீங்க. 6.த்ருஷ்டி துர்கா ஹோமம் – மாங்கல்ய தோஷங்கள்
நீங்கவும் த்ருஷ்டிகள் அகலவும். 7.சுயம்வரகலாபார்வதி
யாகம் – பெண்களின் திருமணத்தடை நீங்க. 8.கந்தர்வராஜ
ஹோமம் – ஆண்களின் திருமணத்தடை நீங்க. 9.ஆகர்ஷ்ண
பைரவர் யாகம் – தொழில், உத்தியோகம் பெற. 10.தன்வந்திரி ஹோமம் – நோய்கள் நீங்கி
ஆரோக்யம் பெற. 11.அஷ்ட லட்சுமி ஹோமம் 12.குபேர
லட்சுமி யாகம் – ஐஸ்வர்யம் பெற்று குடும்பம் ஷேமம் பெறவும். 13.நவக்கிரஹ சாந்தி ஹோமம் – நவக்கிரஹங்களால்
ஏற்படும் தோஷங்கள் அகல. 14.சனிசாந்தி ஹோமம்
– சனிக்கிரஹத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய. 15.கார்த்த வீர்யார்ஜூனர் ஹோமம் – இழந்ததை மீண்டும் பெற. 16.வாஸ்து சாந்தி ஹோமம் – வாஸ்து தோஷங்கள்
நீங்கி வளமான வாழ்வு பெற. 17.நட்சத்திர சாந்தி
ஹோமம் – நட்சத்திர தோஷங்கள் நீங்கி நன்மைகள் பல பெற. 18.சந்தான கோபால யாகம் – குழந்தைபாக்யம் பெற. 19.மஹா காலபைரவர் ஹோமம் – அனைத்து கவலைகளும், தடைகளும் நீங்க. 20.ம்ருத்ஞ்யம் ஹோமம் – மரணபயம் நீங்க. 21.ருத்ர ஹோமம் – விவசாயம் வளம்பெறவும், முக்தி
பெறவும் மேற்கண்ட 21 வகையான ஹோமங்கள் சிறந்த வேத விற்ப்பன்னர்களைக் கொண்டு ஆகம முறைப்படி
முறையாக செய்யப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பால ஜோதிட வாசகர்கள், ஜோதிடர்கள் மற்றும்
பலரும் பயன்படுத்தி பலன்பெற ப்ரார்த்திக்கின்றோம்.
குறிப்பு : நாள் ஒன்றுக்கு தாங்கள் விரும்பிய மூன்று
ஹோமங்களில் பங்கேற்க ரூ.5000/-. வீதமும், அனைத்து ஹோமங்களிலும் பங்கேற்க ரூ.27,000/-
மட்டுமே செலுத்தி பங்கு பெற விரும்பும் ஹோமத்தின் பெயர், தங்கள் பெயர், கோத்திரம்,
நட்சத்திரம் மற்றும் முகவரியுடன், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பெயருக்கு MO அல்லது DD (வாலாஜாபேட்டையில்
மாற்றத்தக்க வகையில்) அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
S. Muralidaran (A) Sri Muralidhara Swamigal Srinivasan
State Bank of India
Walajapet Branch
A/C No. 10917462439
IFSC : SBIN0000775
மேலும் விபரங்களுக்கு…
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை,
அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை
– 632513.
வேலூர் மாவட்டம்.
Ph
: 04172-230033 / 230274
Cell
: 9443330203
www.danvantritemple.org
eMail
: danvantripeedam@gmail.comSaturday, June 27, 2015
Friday, June 26, 2015
Wednesday, June 24, 2015
Tuesday, June 23, 2015
Sunday, June 21, 2015
Friday, June 19, 2015
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபரிகார யாகம் தன்வந்திரி பீடம் சார்பில் நடந்தது
நீடாமங்கலம்,
ஜூன் 19, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபரிகார யாகம் தன்வந்திரி பீடம்
சார்பில் நடந்தது. குருபரிகார யாகம் வேலூர் மாவட்டம்
வாலஜாப்பேட்டையில் உள்ள தன்வந்தரி பீடத்தில்
கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில்
இருந்து தமிழகத்துக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வேண்டி
365 நாட்கள் மகாசண்டி யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் 100 நாள் யாகம் நிறைவடைந்ததையொட்டி
தன்வந்திரி பீடம் சார்பில் திருவாரூர்
மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி
ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபரிகார யாகம் நடைபெற்றது. சிறப்பு
யாகத்தையொட்டி குருபகவான், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன் ஆகிய சன்னதிகளில் சிறப்பு
அபிசேக, ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அபிசேக, ஆராதனைகள்
மற்றும் குரு பரிகார யாகத்தை
ஜோதிராமலிங்க சிவாச்சாரியார் செய்து வைத்தார். யாகத்தில்
கலந்து கொண்ட தன்வந்திரி பீட
முரளிதரசுவாமிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:- இயற்கையில்
ஏற்பட்டுள்ள மாற்றங்களால் உரிய நேரத்தில் மழை
பெய்வதில்லை. பல்வேறு வகையில் பொதுமக்கள்
பாதிக்கப்படுகிறார்கள். பாதிப்புகளில் இருந்து விடுபட்டு மக்கள்
அனைவரும் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதற்காகவும்,
கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில்
இருந்து தமிழகத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர்
கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வேலூர் வாலஜாப்பேட்டை தன்வந்திரி
பீடத்தில் 365 நாட்கள் மகாசண்டி யாகம்
நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 100 நாட்கள் யாகம் நடைபெற்று
இருக்கிறது. இதையொட்டி சிதம்பரத்தில் ருத்ராபிசேகம், திருபுவனத்தில் சரபயாகம், ஆலங்குடியில் குருபரிகார யாகம் மற்றும் அபிசேக,
ஆராதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அய்யாவாடி
கோவிலிலும், தன்வந்திரி பீடத்திலும் இன்று (வெள்ளிக்கிழமை) சுதர்சன
யாகம் நடத்தப்படும். நாளை (சனிக்கிழமை) முதல்
கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களில்
யாகங்கள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
- நன்றி தினத்தந்தி
Thursday, June 18, 2015
சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு சுதர்சன யாகம்..
ஜூன் 26 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில்
தன்வந்திரி பீடத்தில் சுதர்சன மஹா ஜெயந்தி விழா முன்னிட்டு சிறப்பு சுதர்சன யாகம்…
இன்றைய
காலகட்டத்தில் மனிதர்கள் மிகவும் கஷ்டங்களையும் மன
வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டு இருளில் உள்ளார்கள்.
.அத்தகையவர்களுக்கு ஒளியைக் தந்து, அவர்களைத்
துன்பத்திலிருந்து விடுவித்துக் காக்கும் கடவுள்தான் சுதர்சனப் பெருமாள்.
மகாவிஷ்ணுவின் பஞ்ச
ஆயுதங்கள்:
ஸ்ரீசுதர்சனம், ஸ்ரீபாஞ்சஜன்யம், ஸ்ரீகௌமோதகீ, ஸ்ரீநந்தகம், ஸ்ரீசார்ங்கம். இந்த பஞ்ச ஆயுதங்களும்
மகாவிஷ்ணுவின் பணிகளைச் செய்ய எப்பொழுதும் தயாராக
இருக்கும். இந்த ஆயுதங்களுக்கு ஐந்து
தத்துவங்கள் உள்ளன. அவை:
சக்கரம்-
மனஸ் தத்துவம்; கதை- புத்தி தத்துவம்;
சங்கு- அகங்காரத் தத்துவம்; வாள்- வித்யா தத்துவம்;
வில்- இந்திரிய தத்துவம்.
இதில்
முதன்மையானது சக்கரம் என்று சொல்லப்படும்
சுதர்சனப் பெருமாள்தான். பெருமாளின் அம்சமாகவே இவர் விளங்குகிறார். எனவே,
சுதர்சனரை திருமாலாகவே வணங்குகின்றோம். திருமாலை எப்பொழுதும் தன்மீது தாங்கிக் கொண்டிருக்கும்
ஆதிசேஷனை அனந்தாழ்வார் என்றும்; திருமாளின் வாகனமாக விளங்கும் கருடனை
கருடாழ்வார் என்றும்; நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளிய
மரத்துக்கு திருப்புளியாழ்வான் என்றும்; பஞ்ச ஆயுதங்களின் முதன்மையான
சுதர்சனத்திற்கு சக்கரத்தாழ்வார் என்றும் ஆழ்வார் பட்டம்
கொடுக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.
மனிதனுக்கு
ஏற்படும் நோய்கள், மனஅமைதியின்மை, எதிலும் தோல்வி, மரண
பயம், பில்லி, சூன்யம் போன்றவற்றால்
ஏற்படும் பயம், வியாபாரத்தில் கஷ்டம்
ஏற்படுதல், கண் திருஷ்டியால் முன்னேற்றம்
தடைப்படுதல் போன்றவற்றைப் போக்கும் வல்லமை கொண்டவர் சக்கரத்தாழ்வார்தான்.
நவகிரகங்களினால்
தோன்றும் பிரச்சினைகளை உடனே போக்கும் உன்னத
பார்வை உடையவர் சுதர்சனர். நவகிரகங்களில்
முதன்மையானவர் சூரியன். ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில்
இருந்தால் அந்த ஜாதகர் உயர்
நிலைக்கு வருவார் என்பது நிச்சயம்.
அத்தகைய சூரியனையே மறைத்து பகலை இருளாக்கியவர்
சுதர்சனர்.
சுதர்சனர்
தன் கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு,
அங்குசம், சத்துகாக்கினி, கத்தி, வேல், சங்கம்,
வில், பாசம், கலப்பை, வஜ்ரம்,
கதை, உலக்கை, சூலம் என
பதினாறு ஆயுதங்கள் தாங்கியுள்ளார். சுதர்சனரின் பின்புறம் நான்கு கரங்களிலும் சக்கரம்
தாங்கி யோக நரசிம்மர் காட்சியளிப்பார்.
இவரை சுதர்சன நரசிம்மர் என்பர்.
இப்படிப்பட்ட
மகிமை வாய்ந்த சுதர்சனமூர்த்திக்கு தன்வந்திரி பீடத்தில் தனிச் சந்நிதி அமைந்துள்ளது. தன்வந்திரி பீடத்தில் வருகிற
26.6.2015 வெள்ளிக்கிழமை சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு மஹா சுதர்சுன ஹோமமும், சுதர்சனருக்கு
மஹா அபிஷேகமும் சுதர்சனர் சந்நிதியில் நெய்
தீபம்
ஏற்றி சிறப்பு அர்ச்சனையும் நடைபெற உள்ளது. மேற்கண்ட ஹோமத்திலும், பூஜையிலும் பக்தர்கள்
கலந்து கொண்டு சுதர்சனரை பலமுறை வலம் வந்தும் சுதர்சனரின்
அருளைப்
பெறலாம்
என்கிறார்
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
கர்நாடக மாநிலம் குல்பர்காவிர்க்கு ஸ்வாமிகள் விஜயம்...
கர்நாடக
மாநிலம், குல்பர்கா மாவட்டம், சித்தாபூர் தாலுகா அருகே உள்ள ஷாபாத்தில் இயங்கி வரும் S.S.K Trust நிர்வாகம் சார்பில் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர்
ஆலயம் துவங்க உள்ளார்கள். இதற்கான ஆரம்பகால பூஜை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் தலைமையில் வருகிற 21.6.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற
உள்ளது. அனைவரும் பங்கேற்று ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
Monday, June 15, 2015
Monday, June 8, 2015
Monday, June 1, 2015
வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் ஜூலை 5ல் குருப்பெயர்ச்சி யாகம் 06.07.2015 முதல் 13.07.2015 வரை லட்சார்ச்சனை
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் வரும் ஜூலை 5ம் தேதி குருப்பெயர்ச்சி
யாகம் நடைபெற உள்ளது.
ஆண்டுக்கு
ஒரு முறை குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பிரவேசிப்பார். அதன்படி
இந்த ஆண்டு வரும் ஜூலை 5ம் தேதி குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதனை முன்னிட்டு வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சி யாகமானது வெகு சிறப்பாக
நடைபெற இருக்கிறது.
குரு
பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன்பெற வேண்டி 06.07.2015
முதல் 13.07.2015 வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. ஒருவரது
ஜென்ம ராசியிலிருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் குருபகவான் சஞ்சாரம் செய்யும்
போது நற்பலன்களை அளிப்பார். இதன்படி கடகம், மேஷம், கும்பம், தனுசு, துலாம் ராசிக்கு
நற்பலன் கிடைக்கும். ஜென்ம ராசியான 1, 3, 4, 6, 8, 10, 12 ஆகிய ராசிகளில் குருபகவான்
சஞ்சாரம் செய்யும்போது நற்பலன் அளிக்காது என்பது பொதுவிதி, இதன்படி சிம்மம், மிதுனம்,
ரிஷபம், மீனம், மகரம், விருச்சிகம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு நற்பலன் அளிக்காது.
இந்த
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 06.07.2015 முதல் 13.07.2015 வரை
லட்சார்ச்சனை நடக்கிறது. 5.07.2015 மற்றும் 14.07.2015 ஆகிய
தேதிகளில் குருப்பெயர்ச்சி யாகம் நடக்கிறது. இவற்றிற்கான கட்டணம் ரூ.500
ஆகும். லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்களில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக
குடிநீர் வசதி முதற்கொண்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
லட்சார்ச்சனை
மற்றும் பரிகார ஹோமங்களில் நேரடியாக பங்கேற்கலாம் அப்படி நேரடியாக பங்கேற்க இயலாதவர்கள்
உரிய கட்டணத் தொகையை S.MURALIDHARAN என்ற பெயருக்கு டிடி எடுத்து, அத்துடன் உங்கள் பெயர், ராசி,
நட்சத்திரம், உங்கள் முகவரி ஆகியவற்றை தெளிவாக எழுதி கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
மேலும்
தொடர்புக்கு…
தொடர்புக்கு
ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033,
செல் – 9443330203
Email : danvantripeedam@gmail.com
www.danvantritemple.org
www.danvantripeedam.blogspot.in
Subscribe to:
Posts (Atom)