கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தமிழகம் மற்றும் இந்தியாவின்
பல புனித க்ஷேத்திரங்களுக்கும் சென்று சுமார் 300க்கும் மேற்பட்ட சித்தர்களின்
ஜீவ சமாதிகளையும் அதிஷ்டானங்களையும், அவதார ஸ்தலங்களையும் தரிசித்து,
அங்கிருந்து ம்ருத்யு (மண்) எடுத்து வந்து,
அதை லிங்கங்களின் அடியில் வைத்து, சக்தியைக்
ஒன்று திரட்டி தொடர்ந்து 15 நாட்கள்
அதிருத்ர யாகம் செய்து 468 லிங்கங்களும் பிரதிஷ்டை செய்துள்ளார் ஸ்வாமிகள்.
இத்தனை
சிறப்பு வாய்ந்த 468 சித்தர்களுக்கும் இன்று (3.5.2015) ஞாயிற்றுக்கிழமை சித்ரா பௌர்ணமி
நன்நாளில் தன்வந்திரி பீடத்தில் தனித்தனியாக 468 யாக குண்டங்கள் அமைத்து, ஒவ்வொரு குண்டத்திலும்
பக்தர்களையும், சாதுக்களையும், மகான்களையும், சந்நியாசிகளையும் அமரவைத்து மாபெரும்
சித்தர்கள் ஹோமமும், சப்தரிஷி பூஜையும் நடைபெற்றது. மேலும் யாகத்தின் முடிவில் 468
சித்தர்களுக்கும் பன்னீர் அபிஷேகமும் நடைபெற்றது.
இந்த
யாகத்தில் 500க்கும் மேற்பட்ட சந்நியாசிகள், சாதுக்கள், மகான்கள் மற்றும் பிரமுகர்கள்,
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தினர். இதனைத் தொடர்ந்து சிறப்பு சாதுக்களுக்கு வஸ்திர தானமும், அன்னதானமும்
வழங்கப்பட்டது என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment