வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வரும் 22 ம் தேதி காலை வேதபாட சாலை விஷேச சாந்தி பூஜையுடன் தொடங்கப்பட உள்ளது. இதில் உபநயனம் செய்துகொண்ட 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் மாணவர்களாக சேர்த்துகொள்ளப்பட உள்ளதாக டாக்டர் முரளிதரசுவாமிகள் தெரிவித்துள்ளார்.
வாலாஜா அருகே அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம் ஆன்மீக பணியுடன் சமூகப் பணிகளையும் செய்துவருகிறது. வேதங்களை ஒவ்வொருவரும் அறிந்து கொண்டு அதன் பலன்களை அடையும் வகையில் வேதங்கள் கற்பதற்கான வேதபாட சாலை தொடங்கப்பட உள்ளது. வேதங்களை கற்று இறைவனை துதி பாடுதல் மூலம் நமது தேவைகளை பூர்த்தி செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது. இயற்கை, பொருளாதாரம், கலை, பண்பாடு, பாரம்பரியம், சமயம் போன்றவற்றை அறிந்துகொள்வதில் வேதங்கள் முக்கியமான பங்கு வகிக்கிறது. தன்வந்திரி பீடத்தில் வேத மாதாவான ஸ்ரீ காயத்திரி தேவி, கல்விக் கடவுளான ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரிவர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தனித்தனியே சன்னதிகள் அமைந்துள்ளன. அத்திருக்கடவுள்களின் அருள் மாணவர்களுக்கு கிட்டும் வகையில் இந்த வேத பாட சாலை தொடங்கப்படுகிறது. வாஸ்து சாந்தி பூஜை மற்றும் விஷேச சாந்தி பூஜையுடன் ஸ்ரீ சங்கரர் ஜெயந்தி, ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி தினங்கள் வருவதை முன்னிட்டு குருவருள் பெறும் வகையில் 22 ம் தேதி இந்த வேதபாட சாலை தொடங்கப்படுகிறது. இப்பாடசாலையில் உபநயனம் செய்துகொண்ட 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சேர்த்துகொள்ளப்பட உள்ளனர். இவர்களுக்கு தங்கும் இடம், உணவு, உடை தன்வந்திரி பீடத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த வேதபாட சாலையில் முதற்கட்டமாக சேரும் மாணவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா யஜூர் வேதம் போதிக்கப்பட உள்ளது. படிப்படியாக அனைத்து வேதங்களும் போதிக்கப்பட உள்ளது.
மேலும் தொடர்புக்கு,
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை,632513 போன் : 04172 230033, 9443330203
No comments:
Post a Comment