Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, September 29, 2019

Tamilnadu Hindu Makkal Katchi President Thiru. Arjun Sampath Avl Visit ...


தன்வந்திரி பீடத்தில்திரு. அர்ஜுன் சம்பத் அவர்கள் தரிசனம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தமிழக இந்து மக்கள் கட்சி தலைவர் திரு. அர்ஜுன் சம்பத் அவர்கள் 27.08.2019 வெள்ளிக்கிழமையன்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து பீடத்தில் நடைபெற்ற யாக பூஜைகளில் பங்கேற்று சங்கல்பம் செய்து பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசிகளை பெற்றனர். பின்னர் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் மட்டுமின்றி ஸ்ரீ பாரத மாதா, சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள், ஸ்ரீ வாஸ்து பகவான், பாதாள சொர்ண சனீஸ்வர் போன்ற இதர பரிவார மூர்த்திகளையும் தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











Saturday, September 28, 2019

Nikumbala Yagam-Swarna Kala Bhairavar Yagam....


தன்வந்திரி பீடத்தில்

நிகும்பலா யாகத்துடன் சொர்ண கால பைரவர் யாகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் அமாவாசை மற்றும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்று 28.09.2019 சனிக்கிழமை ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், நிகும்பலா யாகத்துடன் சொர்ண கால பைரவர் யாகம், ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி, ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

இதில் பிரபல ஜோதிடர் கோயம்பத்தூர் திரு. ஆனந்தவேல், பெங்களூர் திரு. சதிஷ் குடும்பத்தினர்கள், திருவலம் திரு.சத்தியா, சென்னை டாக்டர் திரு. ரங்கராஜன், மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர்.

இதில் நெய், தேன், நவசமித்துகள், விசேஷ பழங்கள், புஷ்பங்கள், மிளகாய், மஞ்சள், குங்குமம், வெண்கடுகு, மூலிகைகள், பலகாரங்கள், நிவேதன பொருட்கள், மேலும் பல திரவியங்கள் சேர்க்கபட்டு மஹா பூர்ணாஹுதியானது நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கபட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்
.









Sunday, September 22, 2019

108 Kumkum - Turmeric Abhishekam


தன்வந்திரி பீடத்தில்தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டுஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி மற்றும் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவிக்கு108 கிலோ மஞ்சள் குங்குமம் அபிஷேகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலனுக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் தேய்பிற அஷ்டமியை முன்னிட்டு நேற்று 21.09.2019 சனிக்கிழமை மற்றும் இன்று 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ப்ரத்யங்கிரா, துர்கா, பைரவர் யாகங்களுடன் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி மற்றும் ஸ்ரீ காலபைரவருக்கு 108 கிலோ மஞ்சள்  குங்கும்ம் அபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருஷ்டி தோஷங்கள் நிவர்த்தியாகவும், சத்ரு உபாதைகள் அகலவும், குடும்ப நலனுக்காகவும், இயற்கை வளத்திற்காகவும், உலக நலனுக்காகவும், விவச்சாயங்கள் செழிக்கவும், மேலும் பல்வேறு நன்மைகளுக்காக கூட்டு பிராத்தனை செய்தனர். மேலும் இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார், இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.












Friday, September 20, 2019

Theipirai Ashtami Homam


தன்வந்திரி பீடத்தில்
தேய்பிறை அஷ்டமி யாகமும் அஷ்ட பைரவர் பூஜையும்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வருகிற 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை தேய்பிறை அஷ்டமி யாகத்துடன் அஷ்டபைரவர் பூஜை நடைபெற உள்ளது.

சொர்ண கால பைரவர் ஹோமத்துடன் அஷ்ட பைரவர் பூஜை :

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களின் பாபத்தை நீக்கி அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

பைரவர் வழிபாடு ஏன்?

துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது.

கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். அதனால்தான் பைரவர் வழிபாட்டின் பலனைக் குறிக்க பைரவர் வழிபாடு கைமேற் பலன் இந்தப் பழமொழி வழங்கப்பட்டது.
நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். அதுவே அவர்களின் நல்ல பார்வையால் சிலர் எதிர்பாராத நன்மைகளையும், புகழையும் அடைகிறார்கள். நன்மைகள் கிடைத்தால் சரி, ஆனால், வரும் துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் வழிபாடு செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பைரவர் வழிபாடு செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் துன்பங்கள் யாவும் ஓடி ஒளியும்  இன்பங்கள் எல்லாம் தேடி வரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவருக்கு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்வர்ண கால பைரவர் யாகமும் மஹாபைரவர் யாகமும், அஷ்ட பைரவர் வழிபாடும் நடைபெறுகிறது.

இந்த யாகங்களில் பக்தர்களின் பலவிதமான தோஷங்கள் நீங்கி தேவைகள் பூர்த்தி அடையவும் கீழ்கண்ட காரணங்களுக்காகவும் பிரார்த்தனை நடைபெற உள்ளது.

வர வேண்டிய பணம் வந்து சேரவும், தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை அமைய வேண்டியும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடவும், வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் நீங்கி, வலியும், வேதனையும் பெருமளவு குறையவும், சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரவும், வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகவும், தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்து கொண்டே செல்லவும், அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகவும், பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும், நமது கடுமையான கர்மவினைகள் தீரவும், தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும்,  வழக்கு வியாஜ்ஜியங்களில்வெற்றி பெறவும், வெளி நாடு செல்ல வாய்ப்பு ஏற்படவும், வெளி நாட்டில் வாழ்பவர்கள் நிம்மதியாக இருக்கவும், செய்வினை மாந்திரீகம், சத்ரு உபாதை போன்றவைகளால் ஏற்படும் தொல்லைகள் அகலவும் ஸ்ரீ மஹாபைரவர், சொர்ண பைரவர் யாகத்துடன் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் போன்ற அஷ்ட பைரவர்களுக்கும், மஹாபைரவர், சுவர்ண ஆகர்ஷண பைரவருக்கும் மகா அபிஷேகம், விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து கூஷ்மாண்ட தீபம் ஏற்றி செவ்வரளி பூக்களால் அர்ச்சனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்  தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Thursday, September 19, 2019

Puratasi Sani Pushpanjali Poojai.


தன்வந்திரி பீடத்தில்
புரட்டாசி சனிக்கிழமையில்
புஷ்பாஞ்சலியும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு வருகிற 21.09.2019 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு புஷ்பாஞ்சலியும் விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

புரட்டாசி சனிக்கிழமை மஹிமை :

பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள்.  அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன் கிட்டும். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும் அழைப்பார்கள். ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும், ஒரு மாதம் முழுவதும் விரதம்  கடைக்கப்பிடிக்கப்படுவது புரட்டாசி மாதம். புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. பல  தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் பல  தடைகளை நீக்கி நலன்களை  வாரி வழங்கும் என்பது நம்பிக்கை. பணம் இல்லாமல் இவ்வுலகம் இல்லை.பணமிருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க  போதிய ஆயுளும், ஆரோக்கியமும் அவசியம். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருவது சனிக்கிழமை விரதம்..பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சௌபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த புரட்டாசி சனிக்கிழமையில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி நடைபெறும் பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203