Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, August 23, 2019

Sri Krishna Jayanthi 2019


தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.


ஸ்ரீகிருஷ்ணரின் சிறப்பு :

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

தன்வந்திரி பீடத்தில் நவநீத கிருஷ்ணர் :

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெருமுயற்சியுடன் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கும், இதர 77 பரிவார தெய்வங்களுக்கும் திருச்சன்னதிகள் அமைத்து உலக மக்கள் நலன் கருதி அவ்வஒப்பொழுது சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று ஜென்மாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவீனமுறையில், கல் ஊஞ்சலில், ஒரடி உயரத்தில் தவழ்ந்த கோலத்தில், நவநீத கிருஷணர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஸ்ரீகிருஷ்ண ஹோமமும் ஜெயந்தி விழாவும் :

நவநீத கிருஷ்ணருக்கு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை தம்பதியர் குழந்தை பாக்யம் வேண்டியும், குடும்ப ஒற்றுமை வேண்டியும், அகந்தை அகலவும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாமல் இருக்கவும், தர்மசீலராக வாழவும், அரசியல் ஞானம் உண்டாகவும், நிர்வாக திறன் அதிகரிக்கவும், மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கவும், திருமணத் தடைகள் அகலவும், செல்வம் பெருகவும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கவும், ஆடு, மாடுகள் பெருகவும், கடன் தீரவும், பகைமை ஒழியவும், புகழ் கூடவும், அமைதி நிலவும், ஆற்றல் பெருகவும், வறுமை இல்லா வாழ்வு அமையவும் ஸ்ரீகிருஷ்ண யாகமும், மஹா அபிஷேகமும் நடைபெற்று கூட்டுப் பிரார்த்தனையுடன் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவாக நடைபெற்றது.

பல்வேறு பலகாரங்கள் நிவேதனம் :

இதனை தொடர்ந்து கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணேய், சீடை, முருக்கு, தட்டை, அப்பம், லட்டு போன்ற பல்வேறு பலகாரங்கள், பழங்கள் வைத்து நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.












Thursday, August 22, 2019

Sri Jayanthi 2019 - Srikrishna Homam


தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ ஜெயந்தியை முன்னிட்டுஸ்ரீகிருஷ்ண ஹோமமும் சிறப்பு திருமஞ்சனமும்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெறவும் ஸ்ரீ ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 23.08.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சந்தான கோபால கிருஷ்ண யாகத்துடன் ஸ்ரீ நவனீத கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனமும் ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிகிறோம். வாசலில் தொடங்கி பூஜை அரை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்கிறோம். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

இன்றைய நாளில் பகவான் கிருஷ்ணரை வேண்டி நடைபெறும் யாக பூஜைகளில் பங்கேற்று கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது, தர்மசீலராக இளைஞர்கள் வருவார்கள், அரசியல் ஞானம் உண்டாகும், நிர்வாக திறன் அதிகரிக்கும், மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும், திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள், புகழ் கூடும், அமைதி நிலவும், ஆற்றல் பெருகும், வறுமை இல்லா வாழ்வு அமையும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ஜெயந்தி நாளில் கண்ணனை வேண்டி நடைபெறும் யாக பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Sunday, August 18, 2019

Adithya Homam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 01.09.2019 ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு
ஆதித்ய ஹோமம் எனும் சூரிய ஹோமம்.

தன்வந்திரி பீடத்தில் வருகிற 01.09.2019 ஆவணி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில் சூரிய ஹோமம் நடைபெற உள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானை வேண்டி நடைபெறும் ஹோமங்களிலும், பூஜைகளிலும் பங்கேற்று சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள், மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் நீங்கும், ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும், நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் புகழ் கூடும் என்பது பக்தர்களில் நம்பிக்கையாகும்.

ஒவ்வொருவரும் வாழ்நாளில் தேவையறிந்து செய்யும் பரிகாரம் தான் ஹோமம் ஆகும். இந்த ஹோமங்கள் குறுப்பிட்ட இலக்குகளை சென்றடையக் கூடியதாக இருக்க வேண்டும் என்றால் நவக்கிரகங்களின் பரிபூரண அனுக்கிறகம் வேண்டும். அவற்றின் மூலம் வாழ்க்கையில் நடைபெறும் நல்லது கெட்டது அனைத்திற்கும் நவக்கிரகங்களின் பங்கு முக்கியமாகும்.

ஜோதிட சாஸ்திர ரீதியாக சூரியன் என்பவர் பிதுர்காரகன் அதாவது ஒருவருக்கு அமைந்த தந்தை பற்றி குறிப்பிடக் கூடியவர். ஒருவரது சுயநிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து, வீரம், பராக்கிரமம், நன்னடத்தை ஆகியவற்றையும், கண்கள், பார்வை, உடல் உஷ்ணம், அரசாங்க தொடர்பு ஆகியவை பற்றியும் சூரியன் குறிப்பிடுவார். ஒருவரது ஜாதக ரீதியாக சூரியனது நிலை கோச்சாரம் அல்லது திசாபுத்திகள் பாதகமாக இருந்தால் சூரிய பிரீதி ஹோமம் செய்து கொள்ளவேண்டும்.

சூரிய ஹோமத்தின் மூலம் சூரிய பகவான் அனுக்கிரகத்துடன் வளமும் நலமும் பெற்று, நீடித்த ஆயுள், இளமை, உயர்ந்த அறிவு, நிறைந்த செல்வம், சிறந்த ஆரோக்கியம் மற்றும் சிறப்பான வாழ்வை பெறலாம்.
மேற்கண்ட ஹோமத்தை பாஸ்கர ஹோமம் என்றும் ஆதித்ய ஹோமம் என்றும் பானு ஹோமம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கபட்டு வருகிறது. இந்த ஹோமத்தில் பங்கு பெறுவதன் மூலம் சூரிய பகவானின் அருள் பெற்று கீழ் கண்ட பலன்கள் பெறுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது.

அரசாங்க வேலையில் ஏற்படும் தடைகள் விலகி பதவி உயர்வு பெறலாம், பாவங்கள் கரையும், கவலை, துக்கம், வேதனை ஆகியவை நீங்கும், நோய்கள் அகலும் அதிலும் குறிப்பாக இதயம், கண் தொடர்பான நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும், தீய சக்திகள் விலகும், கிரஹ தோஷங்கள் அகலும், ஏழரை சனியின் தாக்கம் குறையும், தசா புக்தி தோஷங்கள் விலகும், அனைத்து செயல்களிலும் வெற்றி பெறலாம், இருள் நீங்கும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சூரிய பகவானை வேண்டி நடைபெறும் சூரிய ஹோமத்தில் பங்குபெற்று நலம் பெற அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இந்த தகவலை தன்வந்திர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Sri Guru Raghavendra's 348th Aradhanai Vizha


ஸ்ரீ ராகவேந்திரரின் 348 வது ஆராதனை விழாதன்வந்திரி பீடத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஸ்ரீ குரு ராகவேந்திரரின் 348 ஆவது ஆராதனையை முன்னிட்டு சென்ற 16.08.2019 வெள்ளிக்கிழமை முதல் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை இன்று வரை தினசரி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை விசேஷ ஆராதனைகளுடன் மஹோத்ஸவ விழாவாக நடைபெற்றது.
இதில் ராகவேந்திரர் மூலமந்திர ஹோமத்துடன், நவக்கிரஹ ஹோமங்களும், லட்சுமி பூஜையும் பஞ்சாமிர்த அபிஷேகமும் நடைபெற்து.

தன்வந்திரி பீடத்தில் ராகவேந்திரர்:

உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 4 அடி உயரத்தில் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் காமதேனுவுடன் மார்பில் ராமரும், பிருந்தாவனத்தில் லட்சுமி நரசிம்மருடன் வடிவமைக்கப்பட்டு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் கரிகோல பவனியாக கொண்டு செல்லப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்ற ம்ருத்திகா பிருந்தாவனங்களில் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தர்களால் ஆராதனை செய்யப்பட்டு, 51 பிருந்தாவனங்களில் இருந்து கொண்டு வந்த ம்ருத்தி வைத்து தன்வந்திரி மஹா மந்திரத்துடன் மத்துவாச்சாரியர்களைக் கொண்டு விசேஷமான முறையில் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ராகவேந்திர்ரை பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆராதனையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு குரு மகான் ஆசீர்வாதத்துடன் அனைத்து விதமான பிரச்னைகளும் நீங்கி, சகல சம்பத்துடனும், ஆரோக்யத்துடனும் வாழ வழி கிடைக்கும் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











Thursday, August 15, 2019

73rd Independence Day - Bharat Matha Homam - Pournami Yagam - Aishwaryam Tharum 5 Homangal


தன்வந்திரி பீடத்தில்73 வது சுதந்திர தின விழாவுடன்ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள், பௌர்ணமி யாகங்கள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேடை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வமிகள் ஆசிகளுடன் 73 வது சுதந்திர தினம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று 15.08.2019 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை கொடி ஏற்றும் விழா, பாரதமாத ஹோமம், அபிஷேக ஆராதனைகள், பௌர்ணமி யாகங்கள், ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள் நடைபெற்றது.

நம் நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பூமி பிராட்டி அன்னை ஸ்ரீ பாரத மாதாவை போற்றும் வகையில் தேச நலமே தேக நலம், தேக நலமே தேசம் நலம் என்ற தாரக மந்திரத்தின் படி உலக மக்கள் நலனுக்காக கொடி ஏற்றும் விழா நடைபெற்று, ஸ்ரீ பாரத மாதா ஹோமத்துடன் ஸ்ரீ பாரத மாதாவிற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

மேலும் பௌர்ணமியை முன்னிட்டு ஆண், பெண் திருமண தடைகள் தீர்க்கும் கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி யாகமும், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகமும் நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், மஹா சுதர்ஸன ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மஹா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ குபேர லக்ஷ்மி ஹோமம் ஆகிய ஐந்து ஹோமங்கள் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்களாக நடைபெற்றது.

இந்த யாகங்களில் நெய், தேன், மஞ்சள், சௌபாக்ய பொருட்கள், மூலிகைகள், நவ சமித்துகள், பட்டு வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள், பழங்கள், புஷ்பங்கள், மேலும் பல்வேறு பொருட்கள் சமர்ப்பித்து மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகள் வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினர். தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


















Tuesday, August 13, 2019

Sakata Hara Chathurthi - Sankata Hara Maha Ganapathi Homam


தன்வந்திரி பீடத்தில்

சங்கடங்கள் தீர்க்கும்

சங்கடஹர மஹா கணபதி ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 19.08.2019 திங்கள்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சங்கடஹர மஹா கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற உள்ளது.

விநாயகப்பெருமான் வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர். இவரை வழிபடுவதற்கு மிகவுன் விசேஷமான நாள் சதுர்த்தி ஆகும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. இந்நாளின் மேற்கொள்ளும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு விநாயகப்பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு எந்த குறையும் இருப்பதில்லை என்றே புராணங்களில் சொல்லப்படுகிறது. இன்றைய தினம் விநாயகருக்கு நடைபெறும் ஹோமம், அபிஷேகம், பூஜைகளில் பங்கேற்று வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் தீரும், நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும்.

சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

ஆவணி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே  அங்காரகன் என்ற செவ்வாய், நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர்.   சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான்.  பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம்.

இத்தகைய சிறப்புகள்  வாய்ந்த மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் ஸ்ரீ விநாயக தன்வந்திரியை வேண்டி நடைபெறும் ஹோமத்தில் கொழுக்கட்டை, மோதகம், நவசமித்துகள், அறுகம்புல், கரும்பு, விசேஷ மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள், நெய், தேன், புஷ்பங்கள், பழங்கள், நிவேதனங்கள், சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் மஹா அபிஷேகம் நடைபெற்று மஹாதீபாராதனை நடைபெற உள்ளது. மேலும் பங்கேற்கும் பக்தர்களும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகள் வழங்கி பிரசாதங்கள் வழங்க உள்ளனர்.

மேலும் இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், நெய், தேன், மூலிகைகள், சமித்துகள், மஞ்சள், குங்குமம், சந்தனம், அபிஷேக திரவியங்கள், மளிகை பொருட்கள் போன்ற பொருட்களை அளித்து குடும்பத்தினருடன் இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203