கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Monday, April 24, 2017
Akshayathrithiya Special Homams at Sri Danvantri Arogya Peedam, Walajapet
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
அட்சயதிருதியை முன்னிட்டு பயன் தரும்
16 ஹோமங்கள்.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அட்சயதிருதியை முன்னிட்டு வருகிற 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை இந்துக்களின் புனித மாதமான சித்திரை மாதத்தை முன்னிட்டு
பக்தர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாக வேண்டி ஏகோபித்த பக்தர்களின்
வேண்டுகோளுக்கிணங்க கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பயன் தரும் 16 ஹோமங்கள் மேற்கண்ட தேதிகளில் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கீழ்கண்ட 16 ஹோமங்களை நடத்த உள்ளார்.
பக்தர்கள் அனைவரும் குலதெய்வங்களின்
அருள்பெறவும், குரு மகான்களின் ஆசி பெறவும், வாழ்வில் ஏற்படும் பலவிதமான தடைகளும் நீங்க கீழ்கண்ட 16 யாகங்கள் 3
நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
யாகம் செய்வதினால்
ஏற்படும் நன்மைகள் : ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த
ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும்
சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான
கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார். மேலும் தேக ஆரோக்கியம்,
செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப்
பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.
யோகம் தரும் யாகங்கள்…
யாகங்களின் பெயர்கள் -
பலன்கள் : 1.மகா கணபதி ஹோமம்
– காரியத்தடை நீங்க. 2.ஆயுஷ்ய ஹோமம் – ஆயுள் பலம்பெற. 3.சரஸ்வதி 4.லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் – கல்வி கேள்வி ஞானம்பெற்று அதிக மதிப்பெண்கள் பெற. 5.சுயம்வரகலாபார்வதி யாகம் – பெண்களின்
திருமணத்தடை நீங்க. 6.கந்தர்வராஜ ஹோமம் – ஆண்களின் திருமணத்தடை நீங்க. 7.சொர்ண
ஆகர்ஷ்ண பைரவர் யாகம் – தொழில், உத்தியோகம் பெற. 8.தன்வந்திரி
ஹோமம் – நோய்கள் நீங்கி ஆரோக்யம் பெற.9.குபேர லட்சுமி
யாகம் – ஐஸ்வர்யம் பெற்று குடும்பம் ஷேமம்
பெறவும். 10.நவக்கிரஹ சாந்தி ஹோமம் – நவக்கிரஹங்களால்
ஏற்படும் தோஷங்கள் அகல. 11.சனிசாந்தி ஹோமம் – சனிக்கிரஹத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய. 12.கார்த்த வீர்யார்ஜூனர் ஹோமம் – இழந்ததை மீண்டும் பெற. 13.வாஸ்து சாந்தி
ஹோமம் – வாஸ்து தோஷங்கள் நீங்கி வளமான வாழ்வு
பெற. 14.நட்சத்திர சாந்தி ஹோமம் – நட்சத்திர தோஷங்கள் நீங்கி நன்மைகள் பல பெற. 15.சந்தான கோபால யாகம் – குழந்தைபாக்யம் பெற. 16.மஹா காலபைரவர் ஹோமம் – அனைத்து
கவலைகளும், தடைகளும் நீங்க., முக்தி பெறவும் மேற்கண்ட 16 வகையான ஹோமங்கள் சிறந்த வேத விற்பன்னர்களைக்
கொண்டு ஆகம முறைப்படி முறையாக செய்யப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பால ஜோதிட
வாசகர்கள், ஜோதிடர்கள் மற்றும் பலரும் பயன்படுத்தி
பலன்பெற ப்ரார்த்திக்கின்றோம்.
குறிப்பு : நாள் ஒன்றுக்கு தாங்கள்
விரும்பிய ஒரு ஹோமத்தில் பங்கேற்க ரூ. 2200/- வீதமும், ஐந்து ஹோமங்களில் பங்கேற்க ரூ.3000/-வீதமும், அனைத்து ஹோமங்களிலும் பங்கேற்க ரூ.16,000/-
மட்டுமே செலுத்தி பங்கு பெற விரும்பும்
ஹோமத்தின் பெயர், தங்கள் பெயர், கோத்திரம், நட்சத்திரம் மற்றும் முகவரியுடன்,
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பெயருக்கு MO அல்லது DD (வாலாஜாபேட்டையில் மாற்றத்தக்க வகையில்)
அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
S. Muralidaran (A) Sri Muralidhara Swamigal Srinivasan
State Bank of India
Walajapet Branch
A/C No. 10917462439
IFSC : SBIN0000775
மேலும் விபரங்களுக்கு…
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை – 632513.
வேலூர் மாவட்டம்.
Ph : 04172-230033 / 230274
Cell : 9443330203
email : danvantripeedam@gmail.com
Sunday, April 23, 2017
Vasthu Homam at Sri Danvantri Arogya Peedam, Walajapet
தன்வந்திரி பீடத்தில் வாஸ்து நாளை
முன்னிட்டு
வாஸ்து ஹோமம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை
தன்வந்திரி பீடத்தில் வாஸ்து
நாளை முன்னிட்டு இன்று 23.04.2017
ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையும்
ஹோமமும்,
நிவர்த்தி பூஜையும் பஞ்சபூதங்களால் ஏற்படும்
அஷ்ட்டதிக் பாலகர் பூஜையும் நடைபெற்றது.
மக்கள் வாஸ்து பகவானை பற்றியும், வாஸ்து
சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள்
அமைத்துக் கொள்ளவும்,பழைய வீடுகளை
புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனைகள், இருப்பிடங்கள், நிலங்கள், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள்,
பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி
குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக்
கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் பிரார்த்தனை செய்யப்பட்டது,
இதில் வாஸ்து ஹோமம், பஞ்சபூதம் அஷ்டதிக் பாலகர் பூஜையும் நடைபெற்று. ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து
யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் வாஸ்து தேங்காய்,வாஸ்து
பொம்மை மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை
விரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தனர் தெரிவித்தனர்
Saturday, April 22, 2017
Thursday, April 20, 2017
Special Abhishekams at Sri Danvantri Arogya Peedam, Walajapet
Sri Danvantri Arogya Peedam, Walajapet conducted Thursday Special abhishekams for Sri Ashtanaga Garudar, Sri Sudarsanaazhwar, Sri Vaani Saraswathi, Sri Shirdi Soorya Baba, Sri Shirdi Thanga Baba, Sri Medha Dakshinamurthy, Sri Mahaveer and Sri Maha Avathar Babaji. Conducting Special Milk Abhishekam Sri Lakshmi Kuberar and Ari Bala Ranganathar on Tomorrow 21.03.2017 Friday and Saturday 22.03.2017 Maha Abhishekam for Sri Sanjeevi Anjaneyar and Sri Senthura Anjaneyar. All the Abhishekams are performed in between 10.00AM to 12.00 Noon. For more details contact: 04172-230033/9443330203.
Wednesday, April 19, 2017
Subscribe to:
Posts (Atom)
































