Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, September 24, 2016

தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ துர்கா ஹோமம்


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 29.10.2016, சனிக் கிழமை அன்று காலை 10.00 மணியளவில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் சிறப்பு ஸ்ரீ துர்கா ஹோமமும் , சிறப்பு பூஜைகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவ சக்தி அருளால் கீர்த்தி புகழுடன் வாழவும், நம் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை நிவர்த்தி செய்வதற்காகவும், தீய மோகத்திலிருந்து விடுபடவும், உலக அமைதிக்காகவும் இந்த துர்கா ஹோமம் செய்யப்படுகிறது. தீபத் திருநாளான, தீபாவளித் திருநாளில் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது சிறப்பு வாய்ந்த பலன்களைத் தரும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த புனித ஹோமத்தில்  எண்ணற்ற சிகப்பு நிற பழங்கள், சிகப்பு மிளகாய் வத்தல், பல வகையான சிகப்பு புஷ்பங்கள், பூசனிக் காய்கள், நவ தானியங்கள், பட்டு பீதாம்பரங்கள் மற்றும் விஷேச திரவியங்கள்சேர்க்கப்பட உள்ளன. பக்தர்கள் மேற்கண்ட ஹோமத்தில் பங்கேற்று ஸ்ரீ துர்கா தேவியின் அருளையும், ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்று நலமாய் வாழ அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701

வங்கி விவரங்கள்:
Sri Muralidhara Swamigal
State Bank of India
Walajapet – 632513
A/C No. 10917462439
IFSC Code: SBIN0000775



தன்வந்திரி பீடத்தில் சங்கடஹர கணபதி ஹோமம்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 19.10.2016 புதன் கிழமை  சதுர்த்தியை முன்னிட்டு மாலை 5.00 மணியளவில், பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி சங்கடஹர கணபதி ஹோமம்  நடைபெற உள்ளது.


ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்து கணபதி ஹோமத்தில் கலந்து கொண்டால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களிலும் வெற்றி பெறலாம்.

மேலும், இந்த ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு  நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்களுக்கு,  சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.

இந்த ஹோமத்தில் விநாயகப் பெருமானுக்கு உரிய வெள்ளை எருக்கு, அருகம்புல் எண்ணற்ற பழங்கள், பல வகையான புஷ்பங்கள், பட்டு பீதாம்பரங்கள் மற்றும் அஷ்ட திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து,  ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது.

பக்தர்கள் மேற்கண்ட ஹோமத்தில் பங்கேற்று ஸ்தாபகர் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று நலமாய் வாழ அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு:

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701

வங்கி விவரங்கள்:
Sri Muralidhara Swamigal
State Bank of India
Walajapet – 632513
A/C No. 10917462439
IFSC Code: SBIN0000775



வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சந்தான கோபால கிருஷ்ண ஹோமம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 15.10.2016 சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு மேல் பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இறையருளுடன் குழந்தை செல்வம் பெற  சந்தான கோபால கிருஷ்ண ஹோமம்  நடைபெற உள்ளது.

சந்தான கோபால கிருஷ்ண ஹோமம்  என்பது திருமணமாகி வெகுநாட்களாக குழந்தை இல்லாத தம்பதியர் குழந்தை செல்வம் வேண்டி செய்யப்படும் ஹோமம் ஆகும்.

மேலும், கர்ப்பத்தில் உள்ள குழந்தை பாதுகாப்பாக வளரவும் இந்த ஹோமம் உதவுகிறது மற்றும் குழந்தை உறுதியாகவும், செழிப்பாக வளரவும் ஸ்ரீ நவநீத கிருஷ்னின் ஆசிர்வாதமும்ஸ்ரீ சந்தான லக்ஷ்மியின் அருளும் கிடைக்கிறது.

தம்பதியர்க்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்கள் நீங்கவும், உடல் ரீதியாக உள்ள குறைகள் அகலவும், மருத்துவ ரீதியாக உள்ள நோய்கள் விலகவும் தம்பதியர்களுக்கு ஒற்றுமை அதிகரிக்கவும் இந்த ஹோமம் பலன் தரும்.

இந்த ஹோமத்தை ஒரு குழந்தை இல்லாத தம்பதியினர் செய்வதினால் அவர்களை ஆசிர்வதித்து அவர்களுக்கு குழந்தை வரம் அருள்கிறார் இறைவன் கிருஷ்ணன்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த ஹோமத்தில் எண்ணற்ற பழங்கள், பல வகையான புஷ்பங்கள், பட்டு பீதாம்பரங்கள் 100க்கு மேற்பட்ட மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன. பக்தர்கள் மேற்கண்ட ஹோமத்தில் பங்கேற்று ஸ்தாபகர் பீடாதிபதி டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று நலமாய் வாழ அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு:

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701

வங்கி விவரங்கள்:
Sri Muralidhara Swamigal
State Bank of India
Walajapet – 632513
A/C No. 10917462439
IFSC Code: SBIN0000775



விஜய தசமியை முன்னிட்டு ஸ்ரீ விஜயலக்ஷ்மி ஹோமம் மற்றும் அட்சராப்யாசம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 11.10.2016, செவ்வாய் கிழமை அன்று திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டும், நவராத்திரி மற்றும் விஜய தசமியை  முன்னிட்டும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் சிறப்பு விஜயலக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு திருவோண அபிஷேகமும், குழந்தைகளுக்கான அட்சராப்யாசமும்  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயுதம் என்பதன் உண்மையான பயன்

உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம். ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.


ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணெய் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம் விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆயுத பூஜை நாள் அன்று வாழ்வில் மக்கள் அனைவரும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அஷ்டலக்ஷ்மிகளில் ஒருவரான ஸ்ரீ விஜயலக்ஷ்மியின் அருள் வேண்டி ஸ்ரீ விஜயலக்ஷ்மி ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் எண்ணற்ற பழங்கள், பல வகையான புஷ்பங்கள், பட்டு பீதாம்பரங்கள் 100க்கு மேற்பட்ட மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன. பக்தர்கள் மேற்கண்ட ஹோமத்தில் பங்கேற்று ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று நலமாய் வாழ அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு:

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701

வங்கி விவரங்கள்:
Sri Muralidhara Swamigal
State Bank of India
Walajapet – 632513
A/C No. 10917462439
IFSC Code: SBIN0000775



ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சரஸ்வதி ஹோமம்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 10.10.2016 திங்கட் கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மாபெரும் சரஸ்வதி ஹோமம் நடைபெற உள்ளது.
ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் நடைபெறும் இந்த ஹோமத்தில் பங்கு பெறுபவர்களுக்கு  கல்வி ஆற்றல் பெருகும். கலைத்துறை திறமைகள் அதிகரிக்கும். உங்கள் படைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். பேச்சாற்றல், திறன்பட செயல்பட இந்த சரஸ்வதி ஹோமம் பலன் தரும். மேலும் கல்வி, கலை, விவேகம், கற்றல் திறம், புத்தி, மனம், மனித அருமை இவை அனைத்தும்  ஸ்ரீ சரஸ்வதி அருளாசியும் கிடைக்க பெறுவர்..

ஸ்ரீ சரஸ்வதி ஹோமத்தினால் கிடைக்கும் நன்மைகள் மாணவர்களுக்கு பெரிய வர பிரசாதமாக இருக்கும். கல்வியில் வெற்றி பெற உதவும். கலைதுறையில் இருப்பவருக்கும் கண்டிப்பாக முன்னேற்றம் கிடைக்கும். நடிப்பு, பாடல், பேச்சு, எழுத்து இவை அனைத்துக்கும் சரஸ்வதி அருள் கிடைக்கும். ஆன்மீகம், பாசம், அன்பு   இவை அனைத்தும் முழுமையாக கிடைக்க பெற நாம் சரஸ்வதி ஹோமத்தில் பங்கு பெற வேண்டும்.

அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிரபலங்கள் இவர்கள் அனைவர்களுக்கும் சரஸ்வதி ஹோமம் முழுமையான பலனை தருகிறது. நாம் வேத முறைப்படி இந்த ஹோமம் செய்வதால் பல நினைத்த காரியத்தை அடைந்து முழுமையான தீர்வு பெறலாம் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

தொடர்புக்கு:

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701

வங்கி விவரங்கள்:
Sri Muralidhara Swamigal
State Bank of India
Walajapet – 632513
A/C No. 10917462439
IFSC Code: SBIN0000775