கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Thursday, July 21, 2016
Wednesday, July 20, 2016
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஜீலை 26 ம் தேதி வாஸ்துசாந்தி ஹோமம்
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஜீலை 26 ம் தேதி ஸ்ரீ வாஸ்துநாளை
முன்னிட்டு வாஸ்துசாந்தி ஹோமம் நடைபெறுகிறது.
, வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரிபீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு
வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில்,
பஞ்ச பூதங்களுடன் அஷ்டதிக் பாலகர்களுடன் தலை
பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும்,திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி
படுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வாஸ்து பகவானுக்கு ஜீலை 26,செவ்வாய் கிழமை காலை 7.30 மணி முதல் 8.30 வரை வாஸ்துநாள் என்பதால் வாஸ்துசாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் பஞ்ச திரவிய அபிஷேகமும் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம்
கணவன் மனைவிக்குள், சுற்றத்தாருக்குள்,நண்பர்களிடத்தில், தொழில் செய்யும் இடத்தில், சக
வியாபாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பணப் பிரச்னை, பொருளாதார தடைகள், திருமணத் தடை,குழந்தையில்லாமை, ஆரோக்ய குறைவு, குழந்தைகள் பெற்றோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள்,தவறான பழக்க வழக்கங்கள், புது
வீடு மனை பாக்கயம் அமைய வும்மனஉளைச்சல்கள்,நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் போன்ற எண்ணற்ற தோஷங்கள் நீங்கவும். இந்த ஹோமத்தில் பங்கேற்று ப்ரார்த்தனை செய்து பலன் பெறலாம்.
இந்த ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல்,
வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்துமண், வாஸ்து சாம்பிராணிமற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும்
பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை-632513.
வேலூர் மாவட்டம்
தொலைபேசி : 04172-230033
செல் : 9443330203
ஜீலை 28 ல். வியாழக்கிழமை தன்வந்திரி பீடத்தில் சிறப்பு சத்ரூசம்ஹாரயாகம்
ஜூலை 28 ம் தேதி 2016, வியாழக்கிழமை ஆடிகிருத்திகையை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு ஹோமங்கள்.
கந்த புராணத்தில் முருகப் பெருமானின்
வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெறுபவர்கள் கார்த்திகை பெண்கள்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து
தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக முருகப் பெருமான்
அவதரித்தார். அந்த ஆறு குழந்தைகளையும் பேணி வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள்
அறுவர். பின்னர் ஆறு குழந்தைகளும் பார்வதி தேவியால் ஒருங்கிணைக்கப்பட்டு ஆறுமுகனாக
மாறினார். கார்த்திகை பெண்கள் பராமரித்ததால் முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற
பெயரும் உண்டு.
கார்த்திகை பெண்கள்
கார்த்திகை பெண்கள் பற்றி நாம் அறிந்த
செய்தி, அவர்கள் ஆறு குழந்தைகளாக இருந்த
முருகனைப் பேணி வளர்த்தனர் என்பதுதான்.
ரிஷி பத்தினிகளான கார்த்திகை பெண்கள் அறுவர் பெயர்கள் நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா என்பவனவாகும். (மேலும் பரணி, கிருத்திகை, ரோகிணி, பூசம், உத்திரம், விசாகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு).
இந்தக் கார்த்திகை பெண்கள்
அஷ்டமாசித்திகளை உபதேசிக்குமாறு சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் சற்று
யோசித்தார். அருகிலிருந்த பார்வதிதேவி கார்த்திகைப் பெண்களுக்கு ஆதரவாக
அவர்களுக்கு அஷ்டமாசித்திகளை உபதேசிக்குமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டாள்
இதனை ஏற்றுக்கொண்ட சிவபெருமான்
அஷ்டமாசித்திகளை அப்பெண்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். ஆனால், அப்பெண்டிரோ அதைக் கேட்பதில் கவனக் குறைவாக இருந்தனர்.
இதனால் சினமுற்ற சிவபெருமான் அவர்கள்
அறுவரையும் பட்டமங்கை என்னும் தலத்தில் கற்பாறைகளாகுமாறு சபித்தார்.
தங்கள் தவறை உணர்ந்த கார்த்திகை மகளிர்,
சாபத்தை நீக்கியருளும்படி சிவபெருமானிடம்
வேண்டினர். அதற்குச் சிவபெருமான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மதுரையிலிருந்து
குருவாக வந்து சாபவிமோசனம் அளிக்கிறேன் என்றார்.
சொன்னபடியே ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்
சிவபெருமான் மதுரையிலிருந்து வந்து கார்த்திகைப் பெண்களுக்கு சாபவிமோசனம்
அளித்தார்.
இது பட்டமங்கை சிவத்தல வரலாறு கூறும்
செய்தி. அந்தப் பட்டமங்கை இப்போது பட்டமங்கலம் என அழைக்கப்படுகிறது. இது சிவகங்கை
மாவட்டத்தில் காரைக்குடிக்கு அருகில் உள்ளது. இங்கு உள்ள தக்ஷிணாமூர்த்தி கல்லால
மரத்தின் கீழ் அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட கார்த்திகைப் பெண்களுக்கு
வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
பெற்ற தாய் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வளர்ப்புத்தாய் என்று
அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்திலும், வளர்ப்புத்தாய்க்கு
முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் முருகப்பெருமானே பார்வதி தேவிக்கு மேலாக
கார்த்திகை பெண்களை நேசித்தார் என்ற வகையிலும் உலகில் எங்கும் இல்லாதவாறு ஆறு
பெண்களுடன் தாமரை பீடத்தில் முருகருக்கே உரிய மயில், பால்கிண்ணம், சேவல், வேல், சூரியன், சந்திரன் என்ற பொருள்களுடன் மலர்ந்த முகத்துடன் ஞானக்குழந்தையாக 468 சித்தர்களுக்கும் ஞானகுருவாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
புதுமையான முறையில் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து சஷ்டி, கிருத்திகை, விசாகம், போன்ற நாட்களில் சிறப்பு ஹோமங்களை செய்து வருகிறார்.
மேலும் வருகிற, 28.07.2016 ஆடி கிருத்திகையை முன்னிட்டு
வியாழக் கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெறும் சுப்ரமணிய
ஹோமத்திலும், சிறப்பு பிரார்த்தனையிலும் பக்தர்கள்
அனைவரும் கலந்து கொண்டு கார்த்திகை குமரனையும், கார்த்திகை பெண்களையும், 468 சித்தர்களையும்
ஒரு சேர தரிசித்து, உடல் மற்றும் மனரீதியான
நோய்களிலிருந்து நிவாரணம் பெறவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 –
230033, 230274. செல் – 9443330203.
Subscribe to:
Posts (Atom)





















