கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Friday, May 27, 2016
Thursday, May 26, 2016
தன்வந்திரி பீடத்தில் நாளை தங்கஅன்னபூரணிக்கு அன்னபடையல் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் நாளை 27.05.2016 வெள்ளிக் கிழமை நண்பகல் 12.30 மணி அளவில் உலக மக்களுக்கு உணவு பஞ்சம் வராமலிருக்கவும்
உணவினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும் பசி பிணியை போக்கவும் விவசாயிகள் வியாபாரிகள் வளர்ச்சி
பெறவும் மழை வேண்டியும் இயற்கை வேளாண்மை செழிக்கவும் கயிலை ஞானகுரு டாக்டர்: ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்ட்டை ஆகியுள்ள அன்னம் அளிக்கும் ஸ்ரீ
தங்க அன்னபூரணிக்கு
மகா அபிஷேகம் செய்து அலங்கார சமையலான சாதம் பருப்பு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் வடை
அப்பளம் பாயாசம் போன்ற பலவகையான சமையல் வகைகளை அன்ன படையலிட்டு வழிபாடு செய்து வருகிற
பக்தர்களுக்கு அன்ன பிரசாதமாக வழங்க உள்ளார்.
அன்னபூரணி
நமக்கு அன்னமூட்டும் தாயாக விளங்குபவள். காசியில் இருக்கும் அன்னபூரணி இவளது கையில் பால் அன்னம் நிறைந்த
பாத்திரமும், கரண்டியும் இருக்கும். தம்மை
நாடிவருவோருக்கு வயிற்றுப்பசியை மட்டுமல்லாமல் ஆன்மபசியையும் போக்கி அருள்கிறாள்.
இந்த அன்பையும், அறிவையும் நமக்குத் தருபவள் அன்னபூரணி என்று ஆதிசங்கரர் காசி
அன்னபூரணி மீது பாடிய ஸ்தோத்திரத்தில் கூறியுள்ளார்.
அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே! ஞான
வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி!!
என்று அன்னத்தை மட்டுமல்லாமல், தேவியிடம் ஞானத்தையும் பிச்சையிடும்படி
வேண்டுகிறார்.
எனக்குப் பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே
அப்பா! பக்தர்கள் அனைவரும் சொந்த
பந்தங்கள்! மூவுலகமும் என் வீடு! அன்னபூரணியாகிய அம்பிகை அருளும் யாசகத்தை
மூவுலகமும் (உயிர்கள் அனைத்தும்) பெறவேண்டும், என்று
உயிர்கள் மீது கொண்ட கருணையால் வேண்டுகிறார்.
வள்ளலார் சொல்வதைக் கேளுங்க
அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டில் அன்னதானத்திற்கு
மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஜீவ காருண்யத்துடன் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
உள்ளம் வாடிய அருளாளர் வள்ளலார். இவர் தொடங்கிய சத்திய தருமசாலை ஆல்போல் தழைத்து
அருகு போல எங்கும் வியாபித்திருக்கிறது. இவர் ஏற்றிய அணையா அடுப்பு இன்றும்
பலருடைய பசியை போக்கி வருகிறது. அன்னதானத்தின் பெருமைகளை குறிப்பிடும்போது,சக மனிதனின் பசியைப் போக்குபவன்
கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது
பாய்ந்து கொல்லும் தருணத்தில், உணவிட்டுக்
காப்பதே ஜீவகாருண்யமாகும்.அன்னதானம் இடுபவரை வெயில் வருத்தாது. வறுமை தீண்டாது.இறையருள்
எப்போதும் துணை நிற்கும்.மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். என்று
குறிப்பிட்டுள்ளார்.
அன்னாபிஷேகம் செய்வது ஏன்?
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு
உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம்
உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்லி
பெருமைப்படுவதுண்டு. அன்னையோடு அறுசுவை உண்டிபோம் என்று அறுசுவை உணவுக்கும்
அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக்
காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி
பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை
நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள். சிதம்பரம் தில்லைச் சிற்றம்பலத்தில்
ஸ்படிகலிங்கத்துக்குத் தினமும் அன்ன அபிஷேகம் நடை பெறுகிறது. இதனாலேயே சிதம்பரத்திற்கு அன்ன ÷க்ஷத்திரம் என்ற பெயரும் உண்டு. இதே
போல் அனைத்து சிவ ஆலயங்களிலும் தினமும் அன்ன அபிஷேகம் செய்து நம் ஊர்களை எல்லாம்
வளமுள்ளதாக்குவோம்.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ
எரிகிறது. தீயில் நீரும்,
நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில்
விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின்
சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும்
அனைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும்
பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும், அவற்றின்
உள்ளிருந்து இயங்கும் ஆண்டவனே பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன.வழிபாட்டு
முறைகள் எத்தனையோ இருந்தாலும், இறையருளைப்
பெற எளியவழியாக இருப்பது அன்னதானம் மட்டும் தான். தானத்தில் சிறந்தது அன்னதானம்
சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாத சுவாமி உப்பிட்டவரை உள்ளளவும் நினை அன்னம்
இட்டவீடு சின்னம் கெட்டுப் போகாது போன்ற சுலவடைகள் இதன் பெருமையை
எடுத்துக்காட்டுவதாகும். பொன்,பொருள்
எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் கொடுக்கக் கூடாதா என்று
எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால்,ஒருவன்
வேண்டும் என்று கேட்ட அதே வாயால் போதும் என்று சொல்லி மனநிறைவோடு எழுவது
சாப்பிடும் போது மட்டுமே.
சோறு கண்ட இடம் சொர்க்கம்
இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம்
கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள்.
பிற்காலத்தில், இந்த சுலவடையை, நீண்டநாள் தங்கும் விருந்தாளிகளைக்
கேலி செய்வதற்கு பயன்படுத்தி விட்டார்கள்.
தர்மம் தலைகாக்கும்
பாடுபட்டு தேடிய செல்வத்தை சேமிக்க ஆயிரமாயிரம்
வழி முறைகளை இன்று நாம் பின்பற்றுகிறோம். ஆனால், தெய்வப்புலவர் திருவள்ளுவர் செல்வத்தை சேமிக்க காட்டும் வழியைத்
தெரிந்து கொள்ளுங்கள். திருக்குறள் ஈகை
அதிகாரத்தில், அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றார் பொருள் வைப்புழி என்கிறார். ஏழைகள் பசியால் வாடும்போது, அன்னமிட்டு அப்பசியைப் போக்குபவன்
இறையருளைப்பெறுவது உறுதி. இந்த புண்ணியபலன், சரியான
சந்தர்ப்பத்தில் நம் உயிரையும் காக்கும், என்பது
அவரது கருத்து. இதையே செய்த தர்மம்
தலைகாக்கும் என்று குறிப்பிட்டனர். இறையருள் என்னும் வட்டியைப் பெற, இதை விட பாதுகாப்பான முதலீடு
வேறொன்றும் கிடையாது.
மேலும் தொடர்புக்கு
ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்பதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை.632513
தன்வந்திரி பகவானே போற்றி
தன்வந்திரி
பகவானே போற்றி:நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல்நலத்துடன் திகழ இந்த போற்றியை
தினமும் விளக்கேற்றி பக்தியுடன் பாடுங்கள்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே
அமிர்த கலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ
அமுதத்தை
ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி
மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள்
நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே
தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.
தன்வந்திரி 108 அஷ்டோத்திரம்
1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி
2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி
3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி
4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி
5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி
6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி
8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி
9. ஓம் அமரர் தெய்வமே போற்றி
10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி
11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி
12. ஓம் அருளை வழங்குபவரே போற்றி
13. ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி
14. ஓம் அழிவற்றவரே போற்றி
15. ஓம் அழகுடையோனே போற்றி
16. ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி
17. ஓம் அமைதியின் வடிவே போற்றி
18. ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி
19. ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி
20. ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி
21. ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி
22. ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி
23. ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி
24. ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி
25. ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி
26. ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி
27. ஓம் ஆனந்த ரூபனே போற்றி
28. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
29. ஓம் ஆற்றலின் வடிவே போற்றி
30. ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி
31. ஓம் உலக ரட்சகரே போற்றி
32. ஓம் உலக நாதனே போற்றி
33. ஓம் உலக சஞ்சாரியே போற்றி
34. ஓம் உலகாள்பவரே போற்றி
35. ஓம் உலகம் காப்பவரே போற்றி
36. ஓம் உயிர்களின் காவலரே போற்றி
37. ஓம் உயிர் தருபவரே போற்றி
38. ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி
39. ஓம் உண்மை சாதுவே போற்றி
40. ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி
41. ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி
42. ஓம் எழிலனே போற்றி
43. ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி
44. ஓம் எல்லாம் தருபவரே போற்றி
45. ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி
46. ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி
47. ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி
48. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
49. ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி
50. ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி
51. ஓம் கருணைக் கடலே போற்றி
52. ஓம் கருணை அமுதமே போற்றி
53. ஓம் கருணா கரனே போற்றி
54. ஓம் காக்கும் தெய்வமே போற்றி
55. ஓம் காத்தருள் புரிபவரே போற்றி
56. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
57. ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி
58. ஓம் குருவே போற்றி
59. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
60. ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி
61. ஓம் சகல நன்மை தருபவரே போற்றி
62. ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி
63. ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி
64. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
65. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி
66. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி
67. ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி
68. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
69. ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி
70. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
71. ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி
72. ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி
73. ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி
74. ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
75. ஓம் சித்தமருந்தே போற்றி
76. ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவரே போற்றி
77. ஓம் சுகம் அளிப்பவரே போற்றி
78. ஓம் சுகபாக்யம் தருபவரே போற்றி
79. ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி
80. ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி
81. ஓம் தசாவதாரமே போற்றி
82. ஓம் தீரரே போற்றி83. ஓம் தெய்வீக மருந்தே போற்றி
84. ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி
85. ஓம் தேகபலம் தருபவரே போற்றி
86. ஓம் தேவாதி தேவரே போற்றி
87. ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி
88. ஓம் தேவாமிர்தமே போற்றி
89. ஓம் தேனாமிர்தமே போற்றி
90. ஓம் பகலவனே போற்றி
91. ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி
92. ஓம் பக்திமயமானவரே போற்றி
93. ஓம் பண்டிதர் தலைவரே போற்றி
94. ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி
95. ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி
96. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
97. ஓம் புருளஷாத்தமனே போற்றி
98. ஓம் புவனம் காப்பவரே போற்றி
99. ஓம் புண்ணிய புருஷரே போற்றி
100. ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி
101. ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி
102. ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி
103. ஓம் மகா பண்டிதரே போற்றி
104. ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
105. ஓம் முக்தி தரும் குருவே போற்றி
106. ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி
107. ஓம் சக்தி தருபவரே போற்றி
108. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி!
Monday, May 23, 2016
வாலஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திற்கு நடிகர் திரு .வையாபுரி அவர்கள் தன்வந்திரிபீடத்திற்கு வருகைபுரிந்து தமிழக முதலமைச்சர் மீண்டும் முதல்வராக ஆவதற்கு ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் பிரார்த்தனை செய்து சென்றார். தமிழக முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 6 வது முறையாக முதலமைச்சர் ஆனதை முன்னிட்டு திரு.வையாபுரி அவர்கள் 20.05.2016 அன்று தங்கள் குடும்பதுடன் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திற்கு மீண்டும் வந்திருந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானையும் இதர 73 பரிவார தெய்வங்களையும் வணங்கி தன்னுடைய நேர்த்தி கடனை செலுத்தி விட்டு சென்றார்.
Sunday, May 22, 2016
JUNE-4 ல் தன்வந்திரி பீடத்தில் சனி சாந்தி ஹோமம்…
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் உலக மக்களுடைய
அனைத்து விதமான உடற்பிணி மற்றும் உள்ளத்துப் பிணி நீங்க பல்வேறு ஹோமங்கள் மற்றும்
மாதம் தோறும் சிறப்பு ஹோமங்கள் பக்தர்களின் தேவைகள் பூர்த்திக்காக நடந்து
வருகிறது.அந்த வகையில் சனி தசை, சனி புக்தி, சனி அந்தரம் நடைபெறும் பக்தர்களுக்காகவும், பித்ரு தோஷங்கள், முதியோர் சாபங்கள், கர்மவிணை போன்றவைகளால் ஏற்படும் பாதகங்கள் குறைவதற்காக வருகிற 04.06.2016 ,சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை சனி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் கலந்து
கொண்டு விரைவில் திருமணம், நல்ல தொழில் அமைதல், விபத்து ஏற்படாமல் தடுத்தல், ஆரோக்ய குறை
நீக்குதல், பொருளாதார தடை நீங்குதல் ,குடும்பத்தில்
கஷ்டநஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு
கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும்
சனிசாந்தி ஹோமத்திலும், சனிதோஷ நிவாரண பூஜைகளிலும் கலந்து
கொண்டு பயன் பெறலாம் போன்ற பல்வேறு பலன்கள் பெறலாம்.
சனீஸ்வர பகவான் - நீதிமான்
சனீஸ்வர பகவானை பாகுபாடு இல்லாத
தர்மவான், நீதிமான் என்று சொல்லலாம். ஒருவருக்கு
அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை,
தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ
முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே
நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில்
தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம்
எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக்
காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம்
சனியாகும்.
சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை
ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால்
அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது
என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில்
சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த
உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி
பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’என்று சொல்லப்படுவதும் உண்டு.
சனீஸ்வரரின் ஆதிக்கத் தன்மை
எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் தசா,
புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன்,
கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த
ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது
ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில்
வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது
கண்ட சனியாகவும், ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது
அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.
யாகத்தில் சேர்க்கவுள்ள விசேஷ
திரவியங்கள்
மேலும் இந்த ஹோமத்தில் கருப்பு நிறம்,
நீல நிறம் வஸ்த்திரங்கள், எள்ளு, நல்லெண்ணெய், வன்னி சமித்து, வன்னி இலை, எள்ளு சாதம், இரும்பு பாத்திரங்கள், நெல்பொறி, விசேஷ மூலிகைகள், வெல்லம், பால், தயிர், தேன், எலுமிச்சை போன்றவைகள் கொண்டு நடைபெற உள்ளது.
காலச்சக்கரத்தில் கலச தீர்த்தம்
யாகத்தின் முடிவில் கலச தீர்த்தத்தை
நட்சத்திர விருட்சங்களுக்கும், 12 ராசி மண்டல விருட்சங்களுக்கும்,
9 நவக்கிரக விருட்சங்களுக்கும் தன்வந்திரி
பீடத்தில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள காலச்சக்கரத்தில் சனீஸ்வர கிரகத்திற்குரிய
வன்னி விருட்சத்தில் சேர்த்து விருட்ச பூஜையும் நடைபெற உள்ளது.
குறிப்பு : பிரதி ஆங்கில மாதம் முதல்
சனிக்கிழமைதோறும் தன்வந்திரி பீடத்தில் சனிசாந்தி ஹோமம் நடைபெற்று வருகிறது.
நிறைவாக தன்வந்திரி பீடத்தில் உள்ள
வன்னி விருட்சத்திற்கு சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில்
நல்லெண்ணெய், எள்ளு, பச்சரிசி போன்றவைகளை அளித்து சனிதோஷ நிவர்த்தி பெறலாம். இதனைத்
தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெறும் என்று பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
தொடர்புக்கு.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலஜாபேட்டை – 632513. வேலூர் மாவட்டம்.
போன் : 04172-230033, 230274.
Subscribe to:
Posts (Atom)








