Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, June 1, 2015

28.06.2015ல் தன்வந்திரி பீடத்தில் சுயம்வர கலா பார்வதி யாகம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 28.06.2015 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 சுயம்வர கலா பார்வதி யாகம் நடைபெற இருக்கிறது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் திருமணம் நடக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக சுயம்வரகலா பார்வதி ஹோமம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

அந்த வகையில் வருகிற 28.06.2015 ஞாயிற்று கிழமை காலை 10,00 மணி முதல் 1,00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு சுயம்வரகலா பார்வதி ஹோமம்  நடைபெற உள்ளது. மேலும் இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம்   செய்து அன்னதானமும் வழங்கப்படும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203


www.danvantritemple.org

www.danvantripeedam.blogspot.in

21.06.2015ல் தன்வந்திரி பீடத்தில் கந்தர்வராஜ யாகம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 21.06.2015 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 கந்தர்வராஜ யாகம் நடைபெற இருக்கிறது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் திருமணம் நடக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக கந்தர்வராஜ யாகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கந்தர்வராஜ யாகம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி விரைவில் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவி அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

அந்த வகையில் வருகிற 21.06.2015 ஞாயிற்று கிழமை காலை 10,00 மணி முதல் 1,00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு கந்தர்வராஜ யாகம்  நடைபெற உள்ளது. மேலும் இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம்   செய்து அன்னதானமும் வழங்கப்படும்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஆண்கள் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203


www.danvantritemple.org
www.danvantripeedam.blogspot.in


20.06.2015ல் தன்வந்திரி பீடத்தில் சந்தான கோபால யாகம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 20.06.2015 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 சந்தான கோபால யாகம் நடைபெற இருக்கிறது. குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக சந்தான கோபால யாகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த யாகம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான தடைகளும் நீங்கி  விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

அந்த வகையில் வருகிற 20.06.2015 சனிக்கிழமை காலை 10,00 மணி முதல் 1,00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு சந்தான கோபால யாகம்  நடைபெற உள்ளது. மேலும் இதில் பங்கேற்க்கும் தம்பதியருக்கு கலசாபிஷேகம்   செய்து வெண்ணெய் பிரசாதமும் வழங்கப்படும்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த யாகத்தில் கலந்து கொள்ள விரும்பும் தம்பதியர் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203


www.danvantritemple.org
www.danvantripeedam.blogspot.in

06-06-2015 ல் தன்வந்திரி பீடத்தில் சனிசாந்தி ஹோமம்…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 06.06.2015 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் சனிசாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த யாகத்தை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்த உள்ளார். இந்த ஹோமத்தில் 71/2 சனி, சனி புக்தி, சனி தசை, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற தசை, புக்தி நடப்பவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் விடுபடவும், திருமணம், குழந்தைபேறு, தொழில், உத்யோகம், வியாபாரம் போன்றவைகளால் ஏற்படும் தடைகள் நீங்கவும் சனி சாந்தி ஹோமம் நடைபெறுகிறது.

சனீஸ்வர பகவான் - நீதிமான்
சனீஸ்வர பகவானை பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை
ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான்சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லைஎன்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்என்று சொல்லப்படுவதும் உண்டு.

சனீஸ்வரரின் ஆதிக்கத் தன்மை
எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் தசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும், ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.

சனிக்கிரகத்தினால் ஏற்படும் சில தோஷங்கள்
நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும் சனிசாந்தி ஹோமத்திலும், சனிதோஷ நிவாரண பூஜைகளிலும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

யாகத்தில் சேர்க்கவுள்ள விசேஷ திரவியங்கள்
மேலும் இந்த ஹோமத்தில் கருப்பு நிறம், நீல நிறம் வஸ்த்திரங்கள், எள்ளு, நல்லெண்ணெய், வன்னி சமித்து, வன்னி இலை, எள்ளு சாதம், இரும்பு பாத்திரங்கள், நெல்பொறி, விசேஷ மூலிகைகள், வெல்லம், பால், தயிர், தேன், எலுமிச்சை போன்றவைகள் கொண்டு நடைபெற உள்ளது.

காலச்சக்கரத்தில் கலச தீர்த்தம்
யாகத்தின் முடிவில் கலச தீர்த்தத்தை நட்சத்திர விருட்சங்களுக்கும், 12 ராசி மண்டல விருட்சங்களுக்கும், 9 நவக்கிரக விருட்சங்களுக்கும் தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள காலச்சக்கரத்தில் சனீஸ்வர கிரகத்திற்குரிய வன்னி விருட்சத்தில் சேர்த்து விருட்ச பூஜையும் நடைபெற உள்ளது.

குறிப்பு : பிரதி ஆங்கில மாதம் முதல் சனிக்கிழமைதோறும் தன்வந்திரி பீடத்தில் சனிசாந்தி ஹோமம் நடைபெற்று வருகிறது.

மேலும் விபரங்களுக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை – 632513. வேலூர் மாவட்டம்.

Phone : 04172-230033 | Cell : 9443330203


www.danvantritemple.org
www.danvantripeedam.blogspot.in

ஜூன் 4ம் தேதி தன்வந்திரி பீடத்தில் வாஸ்து தோஷம் நீக்கும் வாஸ்து ஹோமம்…


ஸ்வாமிகள் பூஜித்து வரும் வாஸ்து பகவான்
வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்து பகவானுக்கென்று ஒரு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றியும், வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம் தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் எனும் வகையில் ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் காலை 10.00 மணியளவில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி ஆசீர்வதித்து வருகிறார்.

இந்த பிரசாதங்களை பெற்ற எண்ணற்ற மக்கள் பயனடைந்து, மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லி அவர்களும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து வாஸ்து பகவானையும், இதர பரிவார தெய்வங்களையும் தரிசித்து சுவாமிகளிடம் ஆசி பெற்று செல்கின்றனர்.

வாஸ்து பகவான் அமைப்பு
வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன், அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவ பெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி படுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வாஸ்து நாள் வாஸ்து ஹோமம்
வருகிற 04.06.2015 வியாழக்கிழமை அன்று வைகாசி மாத வாஸ்து என்பதால் காலை 10.30 மணியளவில் சிறப்பு வாஸ்து ஹோமமும், வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று குடியிருக்கும் இடத்தில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கி வளம்பெற ப்ரார்த்திக்கின்றோம்.

வாஸ்து தோஷத்தால் ஏற்படும் தொல்லைகள்
கணவன் மனைவிக்குள், சுற்றத்தாருக்குள், நண்பர்களிடத்தில், தொழில் செய்யும் இடத்தில், சக வியாபாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணப் பிரச்னை, பொருளாதார தடைகள், திருமணத் தடை, குழந்தையில்லாமை, ஆரோக்ய குறைவு, குழந்தைகள் பெற்றோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், தவறான பழக்க வழக்கங்கள், மன உளைச்சல்கள், நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் போன்ற எண்ணற்ற தோஷங்கள் ஏற்பட வழிவகை செய்யும்

இத்தகைய தோஷங்களை கண்டறிந்து நீக்கவும், தடைகள் விலகவும் வழிவகை செய்யும் என்பதை மனதில் கொண்டு மேற்கண்ட வாஸ்து ஹோமம் நடைபெற உள்ளது.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203


www.danvantritemple.org
www.danvantripeedam.blogspot.in

27.06.2015 அன்று தன்வந்திரி பீடத்தில் ஸ்வாதி ஹோமம் (ருண விமோசன-கடன் நிவர்த்தி ஹோமம்)…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன்கருதி 27.06.2015 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்வாதி ஹோமமும், ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது.

உலக மக்களின் பொருளாதார தடைகள் நீங்கவும், கடன் பிரச்னை அகலவும், வியாபாரம், தொழில்களில் ஏற்படும் பணப்பிரச்னைகள் விலகவும், வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான தடைகள் விலகி ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெறவும் மேற்கண்ட ருண விமோசன ஹோமம் நடைபெற உள்ளது.

ருணம் என்றால் கடன் என்று பொருள். கடன் என்றால் காசு மட்டும் கடன் என்று நினைக்காதீர்கள். அதாவது நாம் பூமியில் பிறக்கின்றபோதே மூன்று கடனுடன்தான்  பிறக்கிறோம்.

1. ரிஷி கடன்  திருமணம் ஆகும் வரை, பிரும்மச்சர்ய விரதத்தை கடை பிடிக்க வேண்டும். அப்போது இவரது கடனை நாம் தீர்த்துவிட்டோம் என்று பொருள்.
இதை கடை பிடிக்கவில்லை என்றால் இவரது கடன் தீராது. ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று வலியுறுத்துகிறது.

2. தேவ கடன்  அதாவது பிறந்த அனைத்து மனிதர்களும் தனது வாழ்க்கையில் வாழ்நாளில் ஹோமம், யாகம் வருடா வருடம் செய்யவேண்டும். அப்படி  செய்யவில்லை என்றால் அதுவே தேவ கடன் என்பதாகும்.

3. பித்ரு கடன் தெவசம் திதி, ஸ்ரார்தம் இவைகளை முறையாக சரியாக வருடாவருடம் செய்து வந்தால் பித்ருக்கள் ஆசிகளுடன் நமது பணக்கஷ்டம் தீரும். இல்லை என்றால் நமது பணக்கஷ்டம் தீராது.

இதுபோன்ற கடன்கள் தீர ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபாடு மிகவும் பலன் தரும். இதை மனதில் கொண்டு தன்வந்திரி பீடத்தில் ஸ்வாதி நட்சத்திரத்தில் மேற்கண்ட நாளில் ருண விமோசன ஹோமமும், ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ திருமஞ்சனமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான கடன்களும் நீங்கி மகிழ்ச்சி பெறலாம் என்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மேலும் விபரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203
e-Mail : danvantripeedam@gmail.com

19.06.2015 ல் தேய்பிறை அஷ்டமி யாகம்…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன்கருதி 19.06.2015 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பீடத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவருடன் மஹா பைரவருக்கு சிறப்பு பூஜையுடன் பைரவர் ஹோமமும் நடைபெற உள்ளது.

பைரவர் பூஜை மற்றும் ஹோமத்தின் சிறப்பு…

பைரவர் பூஜையிலும், ஹோமத்திலும் கலந்துகொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும். வறுமை ஒழியும், பகைவர்களின் தொல்லைகள் நீங்கும், பயம் நீங்கும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும், தன லாபமும் ஏற்படும், வியாபார முன்னேற்றம் கிடைக்கும், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கும், மனதில் மகிழ்ச்சியை பெறலாம்கண்திருஷ்டி, பொறாமைகள், பலவிதமான தோஷங்கள் நீங்கும். மேலும் வியாதிகள் அகலும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும், தொழில் மேன்மை அடையும்சரஸ்வதி அருள் கிடைத்து கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், நவகிரஹ தோஷம், ஜாதக தோஷம், அந்தர தோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், 7 ம் சனி, அஷ்டம சனி, அர்த்தாஸ்டம சனி, பிதுர் தோஷம் நிவர்த்தியாகி ஸ்ரீ அஷ்டபைரவர் சகித காலபைரவராக அருள்பாலிக்கின்ற நவபைரவருடன் சொர்ணபைரவர் திருவருள் பூரணமாக கிடைக்கும். மேற்கண்ட வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று வருமைகள் நீங்கி வலிமை பெற ப்ரார்த்திக்கின்றோம்.

குறிப்பு : இந்நாளில் கால பைரவருக்கு சிகப்பு அரளி கொண்டு விசேஷ ஆராதனையும், வெள்ளை பூசணிக்காயில் இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெயுடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும், மிளகுசாதம், உளுந்து வடை, மற்றும் முந்திரி திராட்சை கொண்டு நிவேதனம் செய்வதும், மஞ்சள், சந்தனம் போன்ற விசேஷ திரவியங்களால் பைரவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறந்த பலன்தரும்.

மேலும் விபரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203
e-Mail : danvantripeedam@gmail.com