Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, April 30, 2015

தன்வந்திரி பீடத்தில் தொழிலாளர் தின சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை மற்றும் தன்வந்திரி யாகம்…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக தொழிலாளர்களின் உடல் நலம், மன நலம் கருதியும், அவர்களது குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டியும் நாளை (1.05.2015) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையும், தன்வந்திரி யாகமும் நடைபெற உள்ளது.

தொழிலாளர்கள் இந்நாட்டின் முதுகெலும்பாவார்கள். ஏனென்றால் எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் கண்டு உலகம் செழித்தோங்க வேண்டுமானால் தொழிலாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். எனவே அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்பதாற்காக சிறப்பு தன்வந்திரி யாகத்தை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்த உள்ளார்.

இந்த யாகத்தின் போது உலக தொழிலாளர்களின் நலன்கருதி தன்வந்திரி குடும்பத்தினரும், பீடத்திற்கு வரும் பக்தர்களும் இணைந்து கூட்டுப்பிரார்த்தனை செய்ய உள்ளனர். ஆகவே அனைவரும் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு ப்ரார்த்திக்கின்றோம். மேலும் சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
வாலாஜாபேட்டை, வேலூர் மாவட்டம்

Monday, April 27, 2015

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்கள் ஆத்ம சாந்தி பெற சிறப்புஹோமம்

தன்வந்திரி பீடத்தில் கூட்டு பிரார்த்தனை ஹோமம் நாளை 28.04.2015 காலை 10,00 மணிக்கு (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது,

நேபாளத்தில்சமீபத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் ஏராளமான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது,இதுரிக்டர் அளவில், 7.9 என,பதிவானதுஇந்த நிலநடுக்கத்தில்தலைநகர் காத்மாண்டு உட்பட,நேபாளத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த கட்டடங்கள்வீடுகள்,புராதன சின்னங்கள் தரைமட்டமாகினநேபாள நிலநடுக்கத்தில் இடிபாடுகளில்சிக்கிபலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறதுஇதுமிகுந்தகவலையையும்வேதனையையும் அளித்துள்ளது .,நேபாளத்தில் ஏற்பட்டஅழிவுபேரழிவாகும்இந்தியாமலேசியாசீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தமீட்பு குழுவினரும்.நா.,வைச் சேர்ந்த மீட்பு குழுவினரும் அங்கு முகாமிட்டு,மீட்பு பணியை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர், இறந்தவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையவும் அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தினர்களின் வேதனைகள் குறைந்து மனசாந்தி பெறவும் இது போன்று பேரழிவுகள் நடைபெறாமல் இருக்கவும் தந்வந்திரி பீடத்தில் கூட்டு பிரார்த்தனை ஹோமம் நாளை காலை 10,00 மணிக்கு (செவ்வாய் கிழமை)  டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது