Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, March 21, 2015

மாந்தி நின்ற பாவங்களின் பலன்கள் மற்றும் பரிகார முறைகள்...

முதல்பாவம் :
ஜென்மத்தில் மாந்தி நிற்கும் ஜாதகன் முகலட்சணம் குறைவாக இருப்பான் அவன் முகத்தில் பிறரை கவரும் ஒளி குறைவாக இருக்கும்.முக்கிய பதவிகளில் அவன் அமர்ந்தாலும் கீழே பணிபுரிபவர்கள் மத்தியில் பயம் , மரியாதை அவனுக்கு பூரணமாக கிடைக்காது. விளையாட்டு மற்றும் வீரச்செயல்களில் ஈடுபடும் அளவு கட்டுமஸ்தான உடலமைப்பு அமையாது. மன ரீதியாக எப்போதும் சற்று வாட்டத்துடன் காணப்படுவான் . பொது இடங்களில் பெயர், புகழ், கெளரவம் கிடைக்காது . முகத் தோற்றத்தில் கவர்ச்சியும் , அழகான வடிவமைப்பும் மிகவும் குறைவாகவே இருக்கும். தெய்வீக பக்தியும் , பெரியோரிடத்தில் பணிவும் , மரியாதையும்  மற்றும் நற்குணங்களும் குறையும். மன மகிழ்ச்சி குறையும். பலருக்கு எப்போதும் நோய் இருந்து கொண்டே இருக்கும் . ஊனம் இருந்து ஜெனனம் ஆனாலோ பின்னர் ஊனம் பெற்றாலோ மேலே கண்ட குணாதியசங்கள் மாறும்.

இரண்டாம் பாவம் :
குடும்ப ஸ்தானத்தில் நின்ற மாந்தி குடும்பத்தின் ஒற்றுமையையும் , மகிழ்ச்சியையும் பெரிதும் பாதிக்கும். கெட்ட பெயர் பெற நேரிடும், இலக்கனத்திற்கு நான்காம் ஐந்தாம் பாவ அதிபதிகள் சேர்ந்து இருந்தாலோ அல்லது நான்காமிட அதிபதி மறைவு பெற்றாலோ தாயாரின் தேக ஆரோக்கியம் கெடும். வாக்கு சுத்தம் இருக்காது . தனலாபம் மிகவும் குறைவாக இருக்கும். யோகம் மற்றும் முன்னேற்ற நிலைக்கு செல்லும் வாய்ப்பு , ஆபரணம் அணியும் யோகம் , குடும்ப சந்தோஷம் , பூரண செல்வம் ஆகியவை மிக மிக குறைவாக இருக்கும் . சிலருக்கு கண்பார்வைக் குறையும், மாரகத்துக்கு சமமான கண்டங்களை அடிக்கடி எதிர் கொள்ளவும் நேரிடும். கல்வி தடைபடும். பெரும் பாக்கியங்களை அடைய முடியாது. பெற்றோரை பிரிந்து வாந்தால் மேற்கண்ட கெடு பலன்களிலிருந்து விடுபடலாம்.

மூன்றாம் பாவம் ;
சகோதர ஸ்தானத்தில் மாந்தி அமர ஜாதகருக்கு இளைய சகோதரம் அமையும் யோகம் குறையும். அப்படியே அமைந்தாலும் இளைய சகோதரமும் நிலைக்காது. நிலைத்தாலும் துளியளவும் பயனில்லை . தைரியம் , பராக்கிரமம் , முதலியவைகளை நினைத்துக் கூட பார்க்க முடியாது. வீரதீர செயல்கள் அனைத்தும் படு தோல்வியையும் மிகுந்த கஷ்டத்தையும் தரும். காரிய தடை ஏற்படும், வெற்றி கிடைக்காது . அறுசுவை உணவு உண்ணும் வாய்ப்பு குறைவு . ஆபரண யோகம் , கலைகளில் ஈடுபாடு மற்றும் திருப்தி இருக்காது . பணியாட்கள் வைத்து நடத்தும் யோகம் குறைவு . மாரக திசைகளில் சுய புத்திகளில் மாரகம் தரும். ஆயுள் குறைவு.


நான்காம் பாவம் :
சுக ஸ்தானத்தில் மாந்தி அமர்ந்தால் தாயாருக்கு எந்த யோகமும் கிடையாது. தாயாருக்கு குடும்பத்தில் முக்கியத்துவம் மற்றும் அதிகாரம் செய்யும் நிலை குறைவாகும். தாயாரிடத்தில் தந்தைக்கு அன்பு, பாசம் குறையும் . மேற்கல்வி கற்கும் வாய்ப்பும், வாகன யோகமும் மிகவும் குறைவாக இருக்கும் . தாய்வழி உதவி கிடைக்காது. விவசாயம் எதிர் பார்த்த பலனை தராது. கிணறு வெட்டுதல் , ஆழ்துளை கிணறு அமைப்பதிலும் யோகம் கிடைக்காது. கால்நடைகள் வைத்து வாழும் நிலை இருக்காது. நல்ல நண்பர்களும் , நண்பர்களினால் உதவியும் இருக்காது, மேலும் அவர்களால் சிரமங்களும், விரயங்களும் ஏற்படும். நிம்மதியற்ற வாழ்கை அமையும், மன சங்கடம் நிறைய இருக்கும். சுகம் குறைவும்.

ஐந்தாம் பாவம் :
புத்திர ஸ்தானத்தில் மாந்தி நிற்க குரு துரோகம் செய்யும் நிலை ஏற்படும். பிராமண பெண் சாபம் பெற நேரிடும். புத்திர தோசத்தை தரும். எப்படியும் ஒரு புத்திரத்தையாவது இழக்க நேரிடும் . முன் ஜென்மத்தில் செய்த தீவினைகளை அனுபவிக்க நேரிடும். சுற்றங்கள், சொந்தங்களின் பகையும் தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் தொடர்பும் விட்டுப் போக நேரிடும். அறிஞர் பெருமக்களின் நற்பெயரில் களங்கம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் நிலைத்த பயன் தராது. பக்தி பகல் வேஷமாகவும், பதவி பயன் தராமலும் இருக்கும்.

ஆறாம் பாவம் :
மாமன் ஸ்தானத்தில் மாந்தி நிற்க உற்றார் , உறவினருடன் கூடி வாழ முடியாது. தனித்து வாழ்வதே பெருமை, நிம்மதி கிடைக்கும். எந்த வகையிலும் கடன் வந்து சேரும் . நோய் தரும், நிறைய எதிரிகளை வாழ்வில் சந்திக்க நேரிடும். ஆனால் எதிரிகளால் பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டி இராது. எதிரிகள் தானாக விலகுவார்கள் ஆயின் புதிய எதிரிகளும் தோன்றுவர், மாமன் உறவு பெயரளவில்தான் இருக்கும். மாமன்மார்களும் யோகம், செல்வம் பெற முடியாது . தம்பதிகளுக்குள் வழக்கு , சண்டை நீண்ட காலம் இருக்கும். வாழ்வில் பயம் இருந்து கொண்டே இருக்கும். சர்ப்பம், தண்ணீர், பெண்கள் இவர்களால் துன்பமும், பீடையும் ஏற்படும். வெளி தேகத்தில் நோய் இருக்கும்.

ஏழாம் பாவம் :
களத்திர ஸ்தானத்தில் மாந்தி நிற்க களத்திர தோசம் தரும். நல்ல களத்திரமும், சுக வாழ்வும் இருக்காது. களத்திரத்தை இழந்து பிரிந்து வாழவும் நேரும். வியாபாரம் பலன் தராது . அலங்காரம் செய்து கொள்ளும் யோகம், சுப யோகம் மிகவும் குறைவு. அரசு சன்மானம் பெறும் யோகம் குறைவு . யாத்திரையின் மூலம் நன்மை பெற வாய்பு இல்லை. தொழிலில் நல்ல கூட்டாளி அமைய மாட்டார்கள். களத்திர தோஷம் காரணமாக கண்டம் ஏற்படலாம், இருதாரம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உண்டு , நிரந்தர தொழில், போதுமான வருமானம் அமையாது.

எட்டாம் பாவம் :
மாரக ஸ்தானத்தில் மாந்தி நிற்க தன விரயம் மிகவும் அதிகமாக இருக்கும். தாய் , தந்தை உறவில் விரிசல் அதிகம் ஆகும். பிரியாமல் பிரிந்து வாழும் நிலை, பீடை ஏற்படும். காரியங்களில் ஜெயம் கிடைப்பது மிக மிக அரிது. மனவருத்தம் அதிகமாக இருக்கும். பெற்றோர் அல்லது ஜாதகர் விஷம் மற்றும் ஆயுதத்தினால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எவ்வளவு வருமானம் வந்தாலும் தரித்திரம் தாண்டவமாடும். விபத்து மாரகத்துக்கு நிகரான கண்டம் ஏற்படும். வில்லங்கமான நிலை ஏற்படும், பங்காளி வகையில் மிகுந்த பீடை தரும். எடுத்த காரியம் முடியாமல் போகும். பகை வழக்கை எதிர்கொள்ள நேரிடும், ஜாதகர் பெண் ஆனால் மாங்கல்ய பலம் குறையும். கணவனுக்கு உயிர் சேதத்திற்கு ஒப்பான கண்டத்தை தரும்.

ஒன்பதாம் பாவம் :
பிதா ஸ்தானத்தில் மாந்தி அமந்தால் தந்தைக்கு கடும் பீடை ஏற்படும். தந்தைக்கு மன சஞ்சலத்தை அதிகமாக்கி அவர் எந்த சுய முடிவும் எடுக்க முடியாமல் தவிப்பார். இதனால் பலரிடத்தில் அவமானமும் , குதர்க்கவாதி என்ற பெயரும் பெறுவார். தந்தை நம்பிக்கைக்கு பாத்திரமாக இல்லாமல் எவரும் உதவி செய்ய முன் வராத நிலையை தரும் . தந்தை பெரும் தவிப்புடன் வாழ்கை நடத்துவார் . நிலையான நிம்மதியை இழப்பார் , தருமம் செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. பொது நல சேவையில் நல்ல பெயர் கிடைக்காமல் கெட்ட பெயரையே சம்பாதிக்க நேரிடும். பொது நலன் வேண்டி செய்யும் காரியங்கள் தோல்வி அடையும் . ஆலயம் அமைக்கும் யோகம் மிக மிகக் குறைவு . இருக்கும் செல்வத்தையும் சுகமாக அனுபவிக்க முடியாத நிலை தோன்றும் . குரு உபதேசம் பயன் தராது. தீர்த்த யாத்திரை முழுமை அடையாது. புதிய முயற்சிகள் வெற்றியை தராது . அதிர்ஷ்டம் என்பது மருந்துக்கு கூட இருக்காது . வழி நடத்தி செல்ல தகுந்த நபர் அமையாமல் போவார். பாக்ய யோகம் குறைவு.

பத்தாம் பாவம் :
ஜீவன ஸ்தானத்தில் மாந்தி அமர சுப பலன்களை தருவார். தெய்வ வழிபாடு பூஜை புனஸ்காரங்களில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். அரசு பதவி கிடைக்கலாம் . வியாபாரம் மற்றும் தொழில் நிரந்தரமாகும், பொருள் தேடி வரும். முன்னோர்களின் பிதுர் கடன் பெருகி பலரை தனது தயவுக்காக காத்திருக்க வைக்கும் யோகம் கிடைக்கும். பராக்கிரம செயல்களால் புகழ் கிடைக்கும். அறுசவை உணவு உண்ண வாய்ப்பு  ஏற்படும் . விதவிதமான ஆடைகள் ஆபரணங்கள் மேல் விருப்பம் ஏற்படும் . பூமி , வீடு , வாகன யோகம் உண்டு . பிரபலம் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் . பொது சேவையில் புகழும் கிடைக்கும் . ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால் ஆளும் பதவியும், புதன் பலம் பெற்றிருந்தால் நாடறிந்த வித்யாகாரன் ஆகும் நிலை ஏற்படும். உயர்ந்த கல்வி அல்லது உயர்ந்த நிலை உண்டாகும். செயல்திறன் அதிகம் இருக்கும் . தொழில்ஞானமும் செயல் ஆர்வமும் மிகுதியாக இருக்கும். பெற்றோர்கள் பெருமை அடைவர்.

பதினொன்றாம் பாவம் :
இலாப ஸ்தானத்தில் மாந்தி நிற்க நிறைந்த இலாபம் தருவார். சிலர் மிக மிக சாதாரணமாக வாழ்கை நடத்தி வந்து மாந்தி நின்ற ராசி அதிபதியின் திசா புத்தி காலத்தில் திடீரென்று பாதை மாறி புதிய பாதை அமைத்து உயர்ந்த நிலைக்குச் செல்வர். கல்வி சுமாராக இருந்தாலும் அதை வைத்து உயரும் யோகம் கிடைக்கும் . ஜாதகரால் மூத்த சகோதர்கள் நன்மை , பெருமை அடைவர். வெளியூர் செல்லும் வாய்ப்பும், பொருள் தேடி வரும் நிலையும் தரும். ஆடை , ஆபரணம், பொன் , பொருள் சேர்க்கை தரும். சிலருக்கு புதையல் போன்றவற்றால் திடீர் லாபம் தேடி வரும். சிலருக்கு மனைவி மூலம் உயர்ந்த நிலை ஏற்படும். இருப்பிட மாறுதல் நன்மையைத் தரும்.

பன்னிரண்டாம் பாவம் :
விரய ஸ்தானத்தில் மாந்தி நிற்க மிகுந்த விரயங்களைத் தரும். நிம்மதியான உறக்கம் இன்றி தவிக்கும் நிலை ஏற்படும். திருமண சம்பந்தமாக மிகுந்த விரயம் தரும். பிற தேச வியாபாரம் அமைந்தாலும் பயன் தராது. சிலருக்கு ஐந்தாம் பாவம் பலம் குறைந்தால் இது நேரிடுகிறது.

இவ்வாறு மாந்தி தான் நின்ற பன்னிரண்டு பாவங்களிலும் மேற்கண்ட பலன்களை தருகிறார். சுபர் பார்வை . ஸ்தான அதிபதி பலன் பெறுதல் போன்றவை மாந்தியின் கடமைகளில் குறுக்கிட்டு பெரும் பாதிப்பு செய்வதில்லை . பெரும்பான்மை பலம் மாந்தியின் பலமாகவே இருக்கிறது.

மாந்தி சாந்தி பரிகாரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்...

மாந்தி கிரகம் மிகவும் ஒரு கொடுமையான கிரகம் என்பார்கள், இந்த கிரகம், யாருடைய பாவத்தில் சேருகிறதோ அந்த பாவக் காரருக்கு மேலும் பல தோஷங்களை ஏற்படுத்தும் என்பது பொதுவான ஜாதக விதி.

ஒருவருக்கு மாந்தி கிரகத்தினால் பலவகையான தோஷங்கள் ஏற்படும் என்பார்கள். இவற்றுக்கு மாந்தி சாந்தி பரகார ஹோமம் மிகவும் பலன் தரும்.  இந்த ஹோமத்தில் கருப்பு கடுகு, எள், வெல்லம, நெற்பொறி, நல்லெண்ணெய், கருப்பு வஸ்திரம், வன்னி சமித்து, நெய் சாதம் ஆகியவை கொண்டு மாந்தி கிரகத்திற்கு உரிய தியான சுலோகங்களையும், மூல மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரம் கொண்டு நம்பிக்கையுடன் குலதெய்வம், குடும்ப தெய்வத்தை ப்ரார்த்தித்துக் கொண்டு பித்ருக்களை தியானித்து அதிக எண்ணிக்கயில் ஜபம் செய்து முறையாக ஹோமம் செய்தால்  சர்வ ஹரிஷ்ட தோஷங்கள் விலகி நன்மை ஏற்படும்.

பூத, பிரேத பிசாசுகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கவும், கமன், தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஏற்படும் தடைகள் அகலவும், ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவைகளால் ஏற்படும் கஷ்டங்கள் விலகவும், அகால மரணம், துர் சொப்பணம், கொடிய வியாதிகள், நிகழாமல் இருக்கவும் வழிவகை கிடைக்கும்.

மேற்கண்ட ஹோமம் தன்வந்திரி பீடத்தில் சாஸ்த்திர முறைப்படி செய்துதரப்படும்.

குளிகன் (என்கிற) மாந்தி தோஷமும், சாந்தி பரிகாரமும்...

*மாந்தி என்பவர் சனி பகவானின் புதல்வன் ஆவார். இவருக்கு இவருக்கு குளிகன் என்ற பெயரும் உண்டு.

*பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் ஒரு குழந்தை பிறந்தால் மாந்தி என்று அழைக்கப்படுகறது.

*தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாந்தி என்ற கிரகம் இருப்பதை நன்கு அறிந்திருந்தாலும், பெரும்பாலும் அது பஞ்சாங்கங்களில் குறிப்பிடப் படுவதில்லை. மிக அபூர்வமாக ஒரு சில ஜோதிடர்கள் மாந்தியை ராசிக்கட்டத்தில் குறிக்கின்றனர்.

*கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜாதகத்தில் குறிப்பார்கள். மாந்தியினால் விளையும் நன்மை, தீமைகளையும் கூறுவார்கள். குருவாயூர் தேவஸ்தான பஞ்சாங்கத்தில், பாலக்காடு ரேகாம்சத்தைக் கணக்கிட்டு மாந்தியின் உதய நேர விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.

*ஸ்ரீ சனிபகவான் கும்ப ராசியை ஆட்சி வீடாகப் பெற்றவர்தான். மாந்தி இவருக்கு உச்ச வீடு, நீச்ச வீடு இல்லை. மாந்தி தான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 2, 7, 12 ஆகிய இல்லங்களைப் பார்ப்பார்.

*குளிகன் காலத்தில் பூமி, மனை, வாகனம் வாங்கலாம். ஆடை, ஆபரணங்கள் வாங்கி அணிந்து மகிழலாம். புதுவீட்டிற்குக் குடிபோகலாம். கல்வி பயிலலாம். பயிர் அறுவடை செய்யலாம். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். வங்கியில் புதிய கணக்கு துவங்கி சேமிக்கலாம். வெகுமதி கொடுக்கலாம். பதவியேற்கலாம். பொதுவாக நமக்கு முன்னேற்றம் தரும் மகிழ்ச்சிக்குரிய சுபகாரியங்கள் அனைத்தையும் குளிகன் காலத்தில் செய்தால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.

*அதேபோல் நமக்குத் துன்பம் தரக்கூடியக் காரியங்களை (மரண இறுதி காரியம் போன்றவை) குளிகன் காலத்தில் செய்தால் அவை பன்மடங்கு அபிவிருத்தியாகி துன்பங்கள் எல்லையில்லாமல் காணப்படும்.

*பொதுவாக மாந்தி இருக்கும் கிரகத்தின் பலன் எட்டாம் வீட்டோன் பலன்போல் அசுபப் பலனாக அமையும். மாந்தி ஜாதகத்தில் எந்த பாவத்தில்- எந்த காரகர்களுடன் இருந்தாலும், சேர்ந்தாலும், பார்த்தாலும் அந்த காரகத்துவப்படி தீய பலனாகும். மாந்தியைப் பொறுத்தவரை ஜாதகத்தில் ஓரிரு இடங் களைத் தவிர, தான் இருக்கும் இடங்களில் தீய பலன்களையே கொடுப்பார். பொதுவாக மாந்தி எந்த கிரகத்துடனும் சேராமல் இருப்பதே சிறந்த பலனாகும்.

*மாந்தியின் துன்பங்களில் விடுதலைபெற மாந்தி சாந்தி பரிகார ஹோமம் செய்து ஈஸ்வரனுக்கும், ஆஞ்சநேயருக்கும், ப்ரத்யங்கிரா தேவிக்கும் சனிக்கிழமை மற்றும் உகந்த நாட்களில் விளக்கேற்றி வழிபட்டால் மாந்தி தோஷங்கள் விலகி துன்பங்கள் நீங்கும்.

Friday, March 20, 2015

அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா ஹோமம் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று நடைபெற்றது



வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா ஹோமம் நடைபெற்றது.

தன்வந்திரி பீடத்தில் உள்ள யக்ஞ ஸ்வரூபிணி ஐஸ்வர்ய பிரத்யங்கிரா தேவி சன்னதியில் 20.03.2015 அமாவாசையன்று எதிரிகளை அழிக்கக்கூடிய, "நிகும்பலா' ஹோமம் நடைபெற்றது.
தன்வந்திரி பீடத்தில் பலவகையான தெய்வங்களுக்கு பலவகையான சன்னதிகள் அமைத்து ஒவ்வொரு தெய்வங்களுக்கும்  ஒவ்வொரு விதமான ஹோமங்கள்  பரிகாரமாக நடைபெற்று வருகின்றது. உதாரணமாக திருமண தடை நீங்கும் வகையில் பரிகாரம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் வகையில் பரிகாரம், படிப்பு நன்றாக வர வேண்டும் என்ற பரிகாரம், என பல ஹோமங்கள் நடைபெற்று வருகிறது. 20.03.2015 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் எதிரிகளை அழிக்கக்கூடிய வகையில், நிகும்பலா ஹோமம் நடைபெற்றது.
இந்த ஹோமத்தின் மூலம், 64 வகையான சாபங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. பல்வேறு கிரஹங்களால் வரக்கூடிய தடைகளும் நீங்கி விடும். "நிகும்பலா' ஹோமம் நடத்துவோருக்கு ராகு, கேது தோஷம், அகால மரணம், கண்டம் நிவர்த்தி தோஷம் போன்றவை நீங்கி விடும்.கடந்த, 2014ல் உலக நன்மை ஏற்படவும், இயற்கை வளம் செழிக்கவும், அமாவாசை தினத்தன்று நடந்த, "நிகும்பலா' ஹோமத்தில், 6000 கிலோ வர மிளகாய்வத்தல் ஹோமத்தில் பயன்படுத்தப்பட்டது. வர மிளகாய் வைத்து ஹோமம் நடத்தப்படும் போது, கண்களில் கண்ணீர் வராது. இன்று அமாவாசை தினத்தன்று நடந்த "நிகும்பலா' ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

யுகாதி பண்டிகையை முன்னிட்டு (தெலுங்கு வருடப்பிறப்பு) சிறப்பு ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நாளை நடைபெற உள்ளது.

தன்வந்திரி பீடத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு என்று அழைக்கப்படும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு நாளை 21.03.2015 சனிக்கிழமை சிறப்பு ஹோமங்கள்.

ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வட மாநிலங்களில் வாழும் க்ள்  ங்களது புத்தாண்டுபிறப்பை யுகாதி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். ஆண்டின் தொடக்கத்தையே யுகாதி என்று அழைக்கிறார்கள்.
மிழர்கள் மிழ் புத்தாண்டை கொண்டாடுவது போலவே           ந்திர, ர்நாடக க்களும் ங்களது புத்தாண்டை கொண்டாடுகின்றனர். ன்று அதிகாலையில் எழுந்து வாசலில் ண்ணக் கோலமிட்டு, எண்ணை தேய்த்துக்குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை ழிபடுவார்கள்.
தில் ஒருசிறப்பம்சம் ன்னவென்றால் வாழ்க்கையின் த்துவத்தை உணர்த்தும்விதமாக யுகாதி ச்சடி ன்ற ஒரு உணவை தயாரிப்பார்கள். அதாவது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு டையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள். மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் நாளை அனைத்து மக்களும் ஆரோக்யமாக வாழ சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் விசேஷ திரவியங்களுடன் பல வகையான புஷ்பங்கள், பழங்கள் சேர்க்கப்பட உள்ளன.
இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.