Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, December 21, 2013

சாந்தி துர்கா ஹோமத்துடன் சரப ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது

தொடர்ந்து மூன்றாவது நாளாக 5000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு சாந்தி துர்கா ஹோமத்துடன் சரப ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற்றது.

டிசம்பர் 21.12.2013 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் 3வது நாளாக சாந்தி துர்கா ஹோமத்துடன் சரப ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் காலையும், மாலையும் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V.K.R. சீனிவாசன், ஒன்றிய கழக உறுப்பினர்கள் மற்றும் இராணிப்பேட்டை கோட்டாட்சியர் டாக்டர் மு.பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த ஹோமத்தில் ஆயிரம் கிலோ மிளகாய், பூசணிக்காய், மஞ்சள், குங்குமம், நவதான்யங்கள், வேப்பெண்ணெய், பட்டு வஸ்த்திரங்கள் மற்றும் மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட்டன.

இதில் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டு கூட்டு ப்ரார்த்தனை செய்தனர். பின்னர் நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர். பிரசாதமும் வழங்கப்பட்டது.

மேலும் 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் த்ருஷ்டி துர்கா ஹோமத்துடன் ராஜ ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற உள்ளது. இதில் புதுவை மாநில முதல்வர் ந.ரங்கசாமி மற்றும் புதுவை மாநில சபாநாயகர் V.சபாபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

அன்றைய தினம் பீடத்திற்கு வரும் பக்தர்களுக்கும், தன்வந்திரி குடும்பத்தினருக்கும், தீ தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படும் வகையில் வேலூர், உதவி மாவட்ட அலுவலர் அவர்கள் முன்னிலையில் இராணிப்பேட்டை நிலைய அலுவலர் மற்றும் தீ தடுப்பு குழு ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்த ஹோமத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

5000 kg dried red chilly yagam danvantri peedam 21 12 2013

Telugu News (Thanks to Sakshi News Paper)











Friday, December 20, 2013

20 12 2013 5000 Kg Dried Red Chilly Yagam Evening Pooja

தன்வந்திரி பீடத்தில் இரண்டாம் நாள் சூலினி துர்கா ஹோமத்துடன் ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது…







டிசம்பர் 20.12.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் 2வது நாளாக சூலினி துர்கா ஹோமத்துடன் ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் காலையும், மாலையும் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் திருவலம் சாந்தா ஸ்வாமிகள், யோகி சங்கரகுருஜி, வேலூர் சகஸ்ர ஆஞ்சநேய கோயில் ஸ்வாமிகள் மற்றும் கே.எஸ்.உதயசங்கர், ஸ்ரீ துர்காபவன், வேலூர்; எஸ்.வி. கோபாலாகிருஷ்ணன், மாயவரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த ஹோமத்தில் ஆயிரம் கிலோ மிளகாய், பூசணிக்காய், மஞ்சள், குங்குமம், நவதான்யங்கள், பட்டு வஸ்த்திரங்கள் மற்றும் மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட்டன.

இந்த ஹோமத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டு கூட்டு ப்ரார்த்தனை செய்தனர். பின்னர் நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர். பிரசாதமும் வழங்கப்பட்டது.

மேலும் 21.12.2013 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சாந்தி துர்கா ஹோமத்துடன் சரப ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற உள்ளது. இதில் இராணிப்பேட்டை கோட்டாட்சியர் டாக்டர். மு. பிரியதர்ஷினி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

இந்த ஹோமத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

19 12 2013 5000 kag Chilly Yagam Part 5