Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, June 24, 2013

குறைவில்லாத செல்வம் பெற வேண்டுமா?

கயிலை ஞானகுரு டாக்டர் 
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 
நடத்தும் தச மகா யாகம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன் கருதியும், அனைத்து மக்களும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ்வில் வசந்தத்துடன் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அஷ்டலட்சுமியுடன் லட்சுமி நாராயண ஹோமம், குபேரலட்சுமியுடன் மகாலட்சுமி ஹோம என தச மஹா யாகமாக நடைபெற உள்ளது.


தயார் நிலையில் ஹோம குண்டங்கள்
இந்த தச மகா யாகத்தை 25.6.2013 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் ஸ்வாமிகள் நடத்த உள்ளார்கள். இந்த ஹோமத்திற்கான ஆயத்த பணிகளை தன்வந்திரி குடும்பத்தைச் சார்ந்தவர்கள் செய்து வருகிறார்கள். எனவே அனைத்து மக்களும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு ஆரோக்யத்துடன் செல்வ வளம் பெறவேண்டுமென்று அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in
E-mail : danvantripeedam@gmail.com

ஸித்திகள் பெற உதவும் சித்தர்கள் யாகம்...


த்ருஷ்டி துர்கா / சூலினி துர்கா ஹோமம்


Telugu News at Thiristy Durga / Sulini Durga Homam - Shakshi News Paper


Joint prayer for Uttarakhand flood victims


A joint prayer was held for the Uttarakhand flood victims at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on June 23, 2013.

Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal said the joint prayer by devotees and members of the Peedam and family members of the Peedam founder was aimed at praying for the welfare of the flood victims and for the souls of the deceased to rest in peace.

The Peedam founder also thanked Tamil Nadu Chief Minister 
J Jayalalithaa for taking steps to bring some of the stranded devotees, belonging to Tamil Nadu, in Uttarakhand safely to the State and for undertaking relief efforts.

The gathering invoked the blessings of Moolavar Sri Danvantri and the other 64 deities at the Peedam.

The joint prayer was conducted during the special Sulini Durga homam held on June 23.

Sunday, June 23, 2013

ஸ்ரீ ராகு, கேதுவுக்கு அன்னாபிஷேகம்

கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர சுவாமிகளின் ஆக்ஞைபடி 23.6.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஸ்ரீ ராகு, கேதுவுக்கு அன்னாபிஷேகமும், கூட்டு ப்ரார்த்தனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் ஆசி பெற்று சென்றனர்.



த்ருஷ்டி துர்கா / சூலினி துர்கா ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

உலக நலன் கருதி த்ருஷ்டி துர்கா / சூலினி துர்கா ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஹோமத்தின் பொழுது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளுரையாற்றினார். அப்போது அவர் ஹோமத்தைப் பற்றியும், ஹோமத்தில் பங்கேற்பதின் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் உத்தர்கான்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அனைத்து மக்களும் அவரவர் இல்லங்களுக்கு நலமுடன் திரும்ப வேண்டும் எனவும், மேலும் இயற்கை சீற்றங்கள் நிகழாமல் இருக்கவும் வேண்டி கூட்டுப்பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

பின்னர் பீடத்தில் அமைந்துள்ள மகிசாசுரமர்த்தினிக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு அந்த அபிஷேக தீர்த்தமானது ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் வருகிற 25.6.2013 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் தச மகா யாகமும், 30.6.2013, 7.7.2013 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணியளவில் த்ருஷ்டி துர்கா / சூலினி துர்கா ஹோமமும் நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றும், பின்னர் நடைபெறும் சிறப்பு அன்னதானத்திலும பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.




தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
E-mail : danvantripeedam@gmail.com