Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, February 7, 2018

கல்வி மணம் கமழும் ஏலக்காய் ஹோமம்!


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
மாணவ, மாணவியர்களின் கல்வித்தரம் உயர
 கல்வி மணம் கமழும்  ஏலக்காய் ஹோமம்!

ஸ்ரீ வித்யா கணபதி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீ வித்யா லக்ஷ்மி, ஸ்ரீ மேதா சூக்தம், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஹோமங்கள் இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.

'நோயற்று வாழட்டும் உலகு' என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு தன் தாய்க்கு  கொடுத்த சத்தியத்தின்படி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் ஸ்தாபனம் செய்யப்பட்டது, வேலூர் வாலாஜா அருகே உள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம். ஸ்ரீதன்வந்திரி பகவான்தான் இங்கே பிரதான தெய்வம்.

எத்தனை செல்வம் இருந்தாலும், வசதி இருந்தாலும், அவற்றை ஒருவர் அனுபவிப்பதற்கு தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் அல்லவா? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்? அதன்படி நாம் நம் உடலை நோய் நொடிகளில் இருந்து காக்க வேண்டுமானால், இந்த பிரபஞ்சத்தின் ஆதி மருத்துவரான ஸ்ரீதன்வந்திரியை ஆராதித்து ஆசிகளைப் பெறுவது அவசியம்.

ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு வாலாஜா கீழ்புதுப்பேட்டையில் அனந்தலை மதுராவில் தனி சந்நிதியோடு சக்தி வாய்ந்த பீடம் அமைந்து இன்றைய தினத்தில் 73 சந்நிதிகளும், 468 சித்தர் சந்நிதிகளும் கொண்டு பிரமாண்ட வாழ்வியல் மையமாக மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு வருகிறது.
இதுவரை  ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்ரீதன்வந்திரி ஹோமங்கள் இங்கே நடந்துள்ளன. அது மட்டுமா? இது தவிர எத்தனை எத்தனை யாகங்கள்!
உலகில் வேறு எங்கும் நடந்திராத  ஆன்மிக அன்பர்கள் பலரும் கேள்விப்பட்டிராத விதம் விதமான பிரமாண்ட ஹோமங்களை அடிக்கடி நடத்தி, இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் நலனுக்காக ஸ்ரீதன்வந்திரி பகவானை ஆராதித்து வருகிறார் கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

1000 சண்டி யாகம், 365 நாள் 365 யாகம், 10 லட்சம் ஏலக்காய் ஹோமம், 1,32,000 கொழுக்கட்டை ஹோமம், 1,10,000 லட்டு ஹோமம், 15 ஆயிரம் வாழைப்பழ ஹோமம், 10 ஆயிரம் மாதுளம்பழ ஹோமம், ஒரு லட்சம் நெல்லிக்கனி ஹோமம், 2014 பூசணிக்காய் ஹோமம், 6 ஆயிரம் கிலோ மிளகாய் ஹோமம், 11 ஆயிரம் வில்வப் பழம் ஹோமம் போன்ற பல்வேறு விதமான ஹோமங்கள் நடைபெற்று வருகின்ற ஸ்ரீ தன்வந்த்ரி பீடத்தில் வருகிற 25ஆம் தேதி அன்று ஞாயிற்று கிழமை ஏலக்காய்களைக் கொண்டு விசேஷ ஹோமம் நடக்க உள்ளது. இயற்கை அறிவியல்படி பூமியில் விளையக் கூடிய ஒவ்வொரு தாவரத்துக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. அதன்படி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான மூலிகைப் பொருட்களைக் கொண்டு இந்த பீடத்தில் நடக்கின்ற ஒவ்வொரு ஹோமமுமே விசேஷமானது.

உதாரணத்துக்கு மேலே சொல்லப்பட்ட சிறப்பு ஹோமங்களில் 15 ஆயிரம் வாழைப்பழ ஹோமம் ஸ்ரீஆஞ்சநேயரையும், விநாயகப் பெருமானையும் முன்னிறுத்தி நடத்தப்பட்டது.

இதையே எடுத்துக் கொண்டால், வாழைப்பழம் என்பது மலச் சிக்கல், குடற்புண் போன்ற உடல் ரீதியிலான நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. பொதுவாக, எந்த ஒரு தெய்வத்துக்கு ஆராதனை என்றாலும், எந்த ஒரு ஹோமம் என்றாலும் வாழைப்பழம் அங்கே நிச்சயம் இடம் பிடித்து விடும். அதுவும் விநாயகர் மற்றும் ஆஞ்சநேய பெருமானுக்கு வாழைப்பழம் ரொம்பவும் இஷ்டம். எனவே 15 ஆயிரம் வாழைப்பழங்களைக் கொண்டு இந்த ஹோமம் நடந்தது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறப் பெற்று, ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளையும், ஸ்வாமிகளின் ஆசியையும் ஒருங்கே பெற்றார்கள்.

இந்த வரிசையில் வருகிற 24ஆம் தேதி சனிக் கிழமை அன்று துவங்கி 25ஆம் தேதி ஞாயிற்று கிழமை வரை நடக்க இருக்கிற ஏலக்காய் ஹோமம் மாணவ, மாணவியர்களின் கல்வித்தரம் உயர அதி முக்கியத்துவம் பெறுகிறது.

24 மற்றும் 25 தேதிகளில் காலை 10 மணியில் இருந்து பகல் ஒரு மணி வரை டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் ஏலக்காய் கொண்டு ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் கல்வி ஹோமங்கள் மாபெரும் அளவில் நடக்க உள்ளது. இதில் ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஸ்ரீசரஸ்வதி ஹோமம், ஸ்ரீ வித்யா லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ மேதா சூக்த ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஹோமங்கள் ஆகியவையும் நடைபெற உள்ளன.
வருகின்ற 10, 11, 12 பொது தேர்வில் மாணவ மாணவியர்கள் கல்வியில் மேம்படவும் ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், பள்ளி கல்லூரிகளின் கல்வித்தரம் உயரவும் இந்த ஹோமம் நடைபெற உள்ளது.
கல்விதான் அனைத்துக்கும் பிரதானம். இன்றைக்குக் குடும்ப ஒற்றுமை, வேலையின்மை, தாம்பத்தியத்தில் பிரிவு, குழந்தைப் பேறின்மை, தேவையில்லாத வழக்குகள், விவகாரங்கள் போன்றவற்றுக்குப் போதிய கல்வியறிவு இல்லாததுதான் காரணம். மனிதனைப் பக்குவப்படுத்துவது கல்வி. அது இல்லை என்றால், அனைத்திலும் தோல்விதான் கிடைக்கும். எனவே, இந்த உலகில் உள்ள அனைவரும் போதிய கல்வியறிவு பெற வேண்டும், கல்வித் திறன் மேம்பட வேண்டும், பெற்ற கல்வியால் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஹோமங்கள் நடைபெற உள்ளன. ஸ்ரீவித்யா, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி போன்ற தெய்வங்கள் கல்வியோடு தொடர்புடையவை. ஆகவே, இந்த தெய்வங்களை முன்னிறுத்திச் செய்யப்படும் இந்த ஹோமங்களில் ஜாதி மதம், ஏழை பணக்காரர், கற்றவர் கல்லாதவர் என்கிற பேதம் இன்றி பெற்றோர் மற்றும் குரு ஆசியுடன் அனைவரும் கலந்து கொண்டு பலன் பெற வேண்டும்.
இன்றைய மாணவர்கள் துர் சகவாசத்தாலும், போதிய வழிகாட்டுதல் இல்லாததாலும், தவறான பாதையின் பக்கம் திரும்புகிறார்கள். மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்துப் பள்ளிக்கூடங்களின் தரமும் உயர வேண்டும்... மாணவர்கள் - ஆசிரியர் ஒற்றுமை ஓங்க வேண்டும்... மாணவர்கள் & பெற்றோர் இடையே இருக்கின்ற உறவு முறை ஓங்க வேண்டும் என்பதால் தேர்வுகள் துவங்க உள்ள இந்த நேரத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெரும் முயற்சியில் இத்தகைய ஹோமம் நடத்தப்படுவது மிகவும் பொருத்தமானது.

''இதையே ஒரு அழைப்பிதழாகக் கொண்டு அனைத்துப் பள்ளி, கல்லூரி நிர்வாகிகளும், ஆசிரியர்களும், சக ஊழியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த பிரமாண்டமான ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும்'' என்று அழைப்பு விடுக்கிறார் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்.
ஏலக்காய் தவிர ஹோமத்தில் தேன், நெய், தாமரை மற்றும் பல விதமான புஷ்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தங்களின் குடும்பத்தில் உள்ள வாரிசுகள் கல்வியில் நன்றாக மேம்பட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு இதில் கலந்து கொள்ள பக்தர்களை அன்புடன் அழைக்கின்றோம். மேலும் கல்வித் தடையினால் ஏற்படக்கூடிய நோய்களும், தேவையற்ற பழக்கவழக்கத்தினால் ஏற்படும் நோய்களும், மன அழுத்தங்களால் ஏற்படும் நோய்களும் நீங்குவதற்காகவும் மக்கள் நோயின்றி ஆரோக்யமாக வாழ ஏலக்காயை கொண்டு தன்வந்திரி ஹோமமும் நடைபெற உள்ளது.
அருள் உள்ளமும், பொருள் வசதியும் கொண்ட பக்தர்கள் தங்களால் இயன்ற ஏலக்காய்களையும், ஹோம திரவியங்களையும் வாங்கிக் கொடுத்தால் இந்த அருட்பணி மேலும் சிறக்கும்.

ஒற்றை ஏலக்காயே தன் அபார மணத்தால் ஊரைக் கூட்டி விடும். வாசனைப் பொருட்களின் தாய் என்று வர்ணிக்கப்படும் ஏலக்காய் இந்த ஹோமத்தில் சேர்க்கப்படும்போது இந்த சூழலே தெய்வீக மணம் நிறைந்து காணப்படும்.
தெய்வத் திருவுருவங்களுக்கு பூமாலை, சந்தன மாலை அணிவிப்பது போல் ஏலக்காய் மாலையும் விசேஷம். புரதச் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, சோடியம், வைட்டமின்கள் , பி, சி போன்றவை ஏலக்காயில் அடங்கி உள்ளன. வாதம், பித்தம், கபம் போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணியான இந்த ஏலக்காயைக் கொண்டு நடத்தப்படும் ஹோமத்துக்கு அனைவரும் வாருங்கள்! வாருங்கள்... நோயின்றி வலிமையான கல்வியில் சிறந்த உலகத்தை உருவாக்க அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


மஹா சிவராத்திரி 2018..


வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 13.02.2018 செவ்வாய் கிழமை
மஹா சிவராத்திரி தினத்தில் ஸ்ரீ ருத்ர ஹோமமும் 468 சித்தர்கள் பூஜையும், 108 சங்காபிஷேகமும்,
கொடிய நோய்கள் நீங்கவும் விவசாயிகள் வலம் பெறவும், நட்சத்திர தோஷங்கள் அகலவும் நடைபெறுகிறது.


இறைவனிடம் வைக்கப்பட்ட எப்படிப்பட்ட ஒரு பிரார்த்தனைக்கும், வேண்டுகோளுக்கும், கோரிக்கைக்கும் நம் வழிபாட்டு முறையில் நிச்சயம் ஒரு தீர்வு உண்டு... அதன் பலன் நமக்குக் கிடைத்தே தீரும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அனைவருக்கும் வர வேண்டும்.

இந்த நம்பிக்கைத் தாரக மந்திரத்தை முன்வைத்துதான் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தினமும் எண்ணற்ற ஹோமங்களும் வழிபாடுகளும் நடந்து வருகின்றன. அதைப் போலவே இந்த நம்பிக்கையைத் தங்கள் மனதில் சுமந்துதான் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்குத் தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தங்களுக்கு என்ன பிரார்த்தனையோ, அதை முன்வைத்து ஹோமம் செய்கிறார்கள்.

நம் பிரார்த்தனை மூலம் சம்பந்தப்பட்ட தேவதையை நாம் குளிர வைக்க வேண்டும். நமக்கு அனுக்ரஹம் செய்ய வைக்க வேண்டும். இதுதான் ஹோமம் செய்வதன் முக்கிய குறிக்கோள் என்பதை உணர வேண்டும்.
இப்போது ஒரு நபரால் உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்று தெரிகிறது. அடுத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவரது இருப்பிடத்துக்கு வெள்ளையும் சொள்ளையுமாகப் புறப்பட்டுச் செல்கிறீர்கள். அப்படிப் போகும்போது அவருக்கு என்ன பிடிக்குமோ, அதை வாங்கிச் செல்கிறீர்கள் அல்லவா? சம்பந்தப்பட்ட அன்பருக்கு ஸ்வீட் பிடிக்கும் என்றால், ஸ்வீட்டும், பழங்கள் சாப்பிடுவதில் விருப்பம் என்று தெரிந்தால் பழங்களும் வாங்கிச் செல்வது இல்லையா? அதுபோல் தேவதைகளும்!

உங்களுக்குக் கல்வி வேண்டுமா? ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உள்ள ஸ்ரீஹயக்ரீவரை வந்து துதியுங்கள். அவருக்கு ஒரு ஹோமம் செய்யுங்கள்.
உங்களது வீடு கட்டும் பிரச்னை சுமுகமாக முடிய வேண்டுமா? வாஸ்து பகவானுக்கு ஒரு ஹோமம் செய்யுங்கள்.

இப்படி இந்த பீடத்தில் ஒவ்வொன்றையும் செய்து அதனால் பலனடைந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இருந்து வருகின்றன. தங்களது பிரார்த்தனை நிறைவேறிய பின் அடுத்த முறை இங்கு வரும்போது பீடத்தில் உள்ள குறிப்பேட்டில் எழுதி விட்டுப் போகிறார்கள். சிலர் என்னிடம் போனில் தங்கள் நன்றியைத் தெரிவிக்கிறார்கள். என்கிறார் இப்பீடத்தின் நிறுவனர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

365 நாள்கள் 365 விதமான ஹோமங்கள் நடைபெற்ற ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அவ்வப்போது புதுப் புது ஹோமங்கள் தொடங்கி, நடந்து வருவது வாடிக்கை. உலக நலனையும், பக்தர்கள் நலனையும், பல்வேறு ஆராய்ச்சிகளையும் முன்னிறுத்தியே இந்த ஹோமங்கள் இங்கே நடந்து வருகின்றன என்பதை பக்தர்கள் அறிவார்கள்.

அந்த வகையில் வருகிற 13.02.2018 செவ்வாய் கிழமை மஹாசிவராத்திரி மற்றும் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ருத்ர ஹோமமும் 468 சித்தர்கள் பூஜையும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகமும் மஹா பீடமாக பக்தர்களால் அழைத்து வரும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.

மழை வேண்டியும், விவசாயிகளின் நலம் வேண்டியும், பஞ்ச பூதங்களின் ஆசி வேண்டியும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்னைகள், குடும்ப நலன், நோயில்லா வாழ்க்கை, செல்வ வளம், கல்வி, திருமணம், குழந்தைப் பேறு, உத்தியோகம் இப்படிப்பட்ட அனைத்துக்கும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மேற்கண்ட ஹோமமும் பூஜையும் நடைபெற உள்ளது. வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்குள் வந்து விட்டால், உங்களது கவலைகளையும் பிரச்னைகளையும் மூட்டை கட்டி வீட்டில் வைத்து விட்டு மன நிம்மதியுடன் இங்கே வந்து கலந்து கொள்ளுங்கள். அதன் பின் கிடைக்கிற மன நிம்மதியை  மன மகிழ்ச்சியை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203






Saturday, February 3, 2018

சனி சாந்தி ஹோமம்....

வாலாஜா தன்வந்திரி பீடத்தில்
சனி சாந்தி ஹோமத்துடன் சனி தோஷ நிவர்த்தி பூஜை நடைபெற்றது.

சனிசாந்தி ஹோமத்துடன், சனிதோஷ நிவர்த்திபூஜை வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 03.02.2018 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது.

சனிக்கிரகத்தினால் ஏற்படும் குடும்ப கஷ்ட நஷ்டங்களும், உடல்நல குறைவும், விபத்துகளும், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம் ஏற்பட்டலும், அலுவலகத்தில் ஏதாவது பிரச்னையும், பித்ரு தோஷமும், திருமணத் தடையும், புத்திர பாகியம் இன்மையும் போன்ற தோஷங்களும் இடமாற்றம், வீட்டில் பிள்ளைகள் சொல்பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தலும், தொழில், உத்யோகம், வியாபாரம் போன்றவைகளில் ஏற்படும் தடைகள் நீங்கவும் சனிசாந்தி ஹோமத்துடன் சனிதோஷ நிவாரண பூஜை நடைபெற்றது.

பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்சனி சாந்தி ஹோமம் சனிக் கிழமை, சனி ஹோரை, பௌர்ணமி மற்றும் அமாவசையில் செய்வது மிகவும் உத்தமம், சனீஸ்வரரால் துன்பங்கள் ஏற்படின் அதை தடுத்து நிறுத்தி நம்மை உடனடியாக காத்து அருளும் சக்தி கலியுகத்தில் காளிதேவி, ஆஞ்சநேயர், யமதர்மராஜர் மற்றும் விநாயகருக்கே அதிகம். ஆஞ்சநேயர் பூஜைக்கு உகுந்த நாளான சனிக் கிழமை சனிசாந்தி ஹோமம் செய்வது மிகவும் சிறப்பு என்பதால் இன்று 03.02.2018 சனிக் கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்ற சனி சாந்தி ஹோமத்திலும் பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அவரின் பரிபூரண ஆசியை பெற்று ஆயுள் தோஷம் நீங்கி அனைத்து செயல்களிலும் வெற்றிபெற பிரார்த்தனை செய்தனர்.

மேலும், ஹோமத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பூஜையில் வைத்த சனீஸ்வர ரக்ஷையுடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டதுஇந்த ஹோமத்தில் கருப்பு நிறம், நீல நிறம் வஸ்த்திரங்கள், எள்ளு, நல்லெண்ணெய், வன்னி சமித்து, வன்னி இலை, எள்ளு சாதம், இரும்பு பாத்திரங்கள், நெல்பொறி, விசேஷ மூலிகைகள், வெல்லம், பால், தயிர், தேன், எலுமிச்சை போன்றவைகள் சேர்க்கப்பட்டது.


யாகத்தின் முடிவில் கலச தீர்த்தத்தை நட்சத்திர விருட்சங்களுக்கும், 12 ராசி மண்டல விருட்சங்களுக்கும், 9 நவக்கிரக விருட்சங்களுக்கும் தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள காலச்சக்கரத்தில் சனீஸ்வர கிரகத்திற்குரிய வன்னி விருட்சத்தில் சேர்த்து விருட்ச பூஜையும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







Friday, February 2, 2018

வாலாஜா தன்வந்திரி பீடத்

வாலாஜா தன்வந்திரி பீடத்: சனிசாந்தி ஹோமத்துடன், சனிதோஷ நிவர்த்திபூஜை வேலூர் மாவட்டம�