கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Saturday, October 7, 2017
Friday, October 6, 2017
Thursday, October 5, 2017
ஸ்ரீ வள்ளளார் 195 ஆவது அவதார தினம்
ஸ்ரீ வள்ளளார் 195 ஆவது ஆண்டு அவதார தின விழாவும்
உலக ஒருமைப்பாட்டு தின உறுதி மொழியும் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில் இன்று 05.10.2017 வியாழக்கிழமை உலக நலன் கருதி ஸ்ரீ வள்ளளார் அவர்களின் 195 ஆவது அவதார தின விழாவும் உலக
ஒருமைப்பாட்டு தின உறுதி மொழியும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற்றது.
புலால் உண்ணாமையையும்,
ஜோதி வழிபாட்டினையும் வளியுருத்தி வந்த வடலூர் வள்ளளார் என்ற இராமலிங்க அடிகளார். கடலூர்
மாவட்டம் மருதூர் கிராமத்தில் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பிறந்தார். இவர் சுத்த
சன்மார்க சங்கம் என்ற அமைப்பை தொடங்கி அதன் கொள்கைகளை பரப்பி வந்தார். ‘ வாடிய பயிரை
கண்டப்போதெல்லாம் வாடினேன்” என்று கூறியவர்.
பசியால் வருபவர்கள்
உணவருந்திச் செல்வதற்காக வடலூரில் சத்திய ஞானசபை, தருமசாலை போன்ற அமைப்புகளைத் தொடங்கினார்.
அங்கு அணையா அடுப்பு
மூலம் உணவு தயாரிக்கப்பட்டு சபைக்கு வருவோருக்கும், ஆதரவற்றோருக்கும் உணவு வழங்கப்பட்டு
வருகிறது.
இவரது பிறந்த 195-ஆவது அவதாரத் தினம் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
இன்று சிறப்பு பூஜைகளுடன், அன்னதானமும், நலதிட்ட உதவிகளும் உலக ஒருமைப்பாட்டு உறுதிமொழி
நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் வருகைத்தந்த பக்தர்கள் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம்
ஆசிபெற்று சென்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Wednesday, October 4, 2017
Tuesday, October 3, 2017
ஸ்ரீ வள்ளளார் அவதார தினம்
ஸ்ரீ வள்ளளார் 195 ஆவது ஆண்டு அவதார தின விழாவும்
உலக ஒருமைப்பாட்டு தின உறுதி மொழியும்
நடைபெறவுள்ளது.
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 05.10.2017 வியாழக்கிழமை பௌர்ணமி அன்று உலக நலன் கருதி ஸ்ரீ வள்ளளார் அவர்களின் 195 ஆவது அவதார தின விழாவும் உலக
ஒருமைப்பாட்டு தின உறுதி மொழியும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
“
அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி,
தனிப்பெருங்கருணை,
அருட்பெருஞ்ஜோதி “
என்ற வாசகத்தை அருளியவர்
ஸ்ரீ வள்ளளார் பெருமான். புலால் உண்ணாமையையும், ஜோதி வழிபாட்டினையும் வழியுருத்தி வந்த
வடலூர் வள்ளளார் என்ற இராமலிங்க அடிகளார். கடலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தில்
1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பிறந்தார். இவர் சுத்த சன்மார்க சங்கம் என்ற அமைப்பை
தொடங்கி அதன் கொள்கைகளை பரப்பி வந்தார். ‘ வாடிய பயிரை கண்டப்போதெல்லாம் வாடினேன்”
என்று கூறியவர்.
பசியால் வருபவர்கள்
உணவருந்திச் செல்வதற்காக வடலூரில் சத்திய ஞானசபை, தருமசாலை போன்ற அமைப்புகளைத் தொடங்கினார்.
அங்கு அணையா அடுப்பு
மூலம் உணவு தயாரிக்கப்பட்டு சபைக்கு வருவோருக்கும், ஆதரவற்றோருக்கும் உணவு வழங்கப்பட்டு
வருகிறது.
இவரது பிறந்த 195-ஆவது அவதாரத் தினம் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வருகிற 05.10.2017 வியாழக்கிழமை சிறப்பு
பூஜைகளும், அன்னதானமும், நலதிட்ட உதவிகளும் உலக ஒருமைப்பாட்டு உறுதிமொழி நிகழ்ச்சிகளும்
நடைபெறவுள்ளது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ருண விமோசன பிரதோஷ வழிபாடு
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று ருண விமோசன
பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று மாலை 03.10.2017 செவ்வாய்
கிழமையில் வரும் பிரதோஷம் ருண
விமோசன பிரதோஷம் என்பதால் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக அனுஷ்டிக்கப்பட்டு பிரதோஷ பூஜை நடைபெற்றது.
ருணம் எனில் கடன் என்று பொருள்.
பொதுவாக
ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும்
பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.
ஸர்ப தோஷம் ( உட்பட
) சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம்.
உலகை காப்பதற்க்காக ஆலகால விஷத்தை அருந்திய
காலம்.நந்தி பகவான் அன்றைய
தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு
மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய
காதில்
தங்கள் ப்ரார்தனைகளை ரகசியமாக சொல்வார்கள்.
பிரதோஷ
தினத்தன்று சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பாகவும்
சிவன் அபிஷேகப் பிரியன். ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு கறந்த பசும்பால் இளநீர், மற்றும் தயிர், சந்தனம், விபூதி
போன்ற விசேஷ திரவியங்களை கொண்டு வலம்புரி சங்குடன் மஹாபிஷேகம் நடைபெற்று வில்வ
இலை, தும்பைப் பூ அருகம்புல் மாலை
சாற்றி, நெய் தீபம் ஏற்றி, பிரதோஷ
பூஜை நடைபெற்றது.
இதனை
தொடர்ந்து சகல தோஷங்கள் நீங்கவும், ஏழு
ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள் அகலவும், பிரம்மஹத்தி தோஷம் விலகவும், கடன் பிரச்சனை தீரவும், துன்பங்கள் தொலையவும், ருண
விமோசன பிரதோஷம் நாளான இன்று பிராத்தனை செய்யப்பட்டது.
ருணம் என்பது கடனை குறிக்க
கூடியது. வேறு விதமாக கூறினால்
தோஷங்களை குறிக்கும் எனலாம். பணமாக பெறப்படும்
கடன் மட்டுமல்ல. தேவ, பூத,பித்ரு,ஆசார்ய, மனுஷ்ய தோஷம்
என்ற வகைப்படும் இவைகளை களைய, இந்நாளில்
நந்தியெம்பெருமானை பக்தர்கள்
வேண்டி வணங்கி சென்றனர்.
இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.


Monday, October 2, 2017
ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 1008 இளநீர் அபிஷேகம்
வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு
1008 இளநீர் அபிஷேகம்
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில் 30.09.2017,01.10.2017
மற்றும் 2.10.2017 திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி
வரை தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள 9 அடி
மூலவருக்கு 1008 இளநீர்கள் மற்றும் நல்லெண்ணெய், மாப்பொடி,
நெல்லிமுள்ளி,
பஞ்சகவ்யம்,
பஞ்சாமிருதம்,
பால்,
தயிர்,
நெய்,
தேன்
கரும்பின்
சாறு,
பழவர்க்கம்,
வாசனைச்
சந்தனம்
மற்றும் சிருங்கநீர், ஆகியனவற்றை கொண்டு வரிசையாக தன்வந்திரி ஹோமத்துடன்
மஹாபிஷேகம் நடைபெற்றது.
மேற்கண்ட
அபிஷேகம் உலக மக்களின் விருப்பங்கள் நிறைவேறவும்,
சுகத்தை பெறவும், பாவத்தைப் போக்கவும், உடல் திடம் பெறவும். யம பயத்தைப் போக்கவும்
நன்மக்களைப் பெறவும்.
கடன் தொல்லை நீங்கி நல்வாழ்வு பெறவும்,
ஆரோக்கியம். சுகம். செல்வப் பெருக்கு
பயிர்கள் வளர்ச்சி பெறவும், கோபத்தைப் போக்கி சாந்தத்தை பெறவும்,
ஒழுக்கத்தை பெறவும். பயம், பகை அகன்று போகங்களை பெறவும். அரச
வாழ்வு. இலட்சுமி கடாட்சம் கிடைக்கவும் தீர்க்க ஆயுள்
கிடைக்கவும்.மன துக்கம் நீங்கவும், இனிய
கானம் பாடும் திறமையும், குயிலினும்
இனிய குரலும் கிடைக்கவும். அஞ்ஞானம்
நீங்கிவிடும். வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு
பெற்று பேரானந்தம் பெறவும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து புரட்டாசி திருவோணத்தை முன்னிட்டு
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ பால ரங்கநாதர், ஸ்ரீ பட்டாபிஷேகம்
ராமர், ஸ்ரீ சத்யநாரயண பெருமாளுக்கு நவ கலச திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட
சுகாதார இயக்குனர் திரு சுரேஷ், வாலாஜாபேட்டை கண்மணி ரெடிமேட் உரிமையாளர், திருச்சி
நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி திரு பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த தகவலை
ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



Subscribe to:
Posts (Atom)




























