Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, August 5, 2017

Guru Peyarchi Mahayagam 2017

தோஷங்கள் நீங்கி அற்புதங்கள் நிகழ்த்தும்

புதுமையான குருபகவான் நிவாரண ஸ்தலத்தில்

குரு பெயர்ச்சி மஹாயாகம்.

02.09.2017 முதல் 03.09.2017 வரை.

பெற்றோர்களை குருவாக ஏற்று ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியான கயிலை ஞானகுரு டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  75 சன்னதிகள், சிவலிங்கரூபமாக 468 சித்தர்கள், மற்றும் பெற்றோர்களுக்கும் ஆலயம் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். குரு பீடமாக  பக்தர்களால் போற்றும் விதத்தில் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்துள்ளார். இப்பீடம் வேலூர் வாலாஜாபேட்டையில் இருந்து  மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கலி காலத்தில் அழியாமல் இருக்க ஐம்பத்திநான்கு கோடி தன்வந்திரி மஹா மந்திர ஒலிகளுடன் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்த பீடம் ஒளஷத பீடமாக அமைந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள்  என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் அருகில் அமர்ந்த நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

468 சித்தர்கள் ஸ்தலம்:

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் , சித்தர்கள் ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் எட்டு திக்குகளிலும் திரு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி 9 அடி உயரத்தில் 46 லட்சம் பக்தர்கள் கைபட எழுதிய 54 கோடி தன்வந்திரி மந்திரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார். ஷண்மதங்களுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

இத்தலத்தில் உள்ள இறைவன் இரண்டு லட்சம் கிலோ மீட்டர் கரிக்கோலம் வந்து 63 திவ்ய தேச பெருமாளின் அபிமானத்தை பெற்றவர். மருத்துவ அவதாரம் என்பதால் பிணி தீர்க்கும் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். சக்ர பீடம், யந்திர பீடம், மந்திர பீடம், சஞ்சிவி பீடம், யக்ஞ பீடம், சித்தர்கள் பீடம், துர்கா பீடம், காயத்ரி பீடம் என்று பல பெயர்களில் பக்தர்கள் இப்பீடத்தை அழைப்பதுண்டு.

நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி:

குருபகவான் தன்வந்திரி ஆலயத்தில் வல்லலார், இராகவேந்திரர், காஞ்சி மஹா பெரியவர், சீரடி சாயிபாபா இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங் களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இவருக்கு இந்த பீடத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த ஆண்டு குரு பெயர்ச்சி ஆகஸ்டு 2-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அன்று காலை 9.30 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார் குரு பகவான். இதையொட்டி, இத்தல ராஜ குருவுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், யாகங்களும் நடைபெறுகின்றன. குரு பெயர்ச்சியை முன்னிட்டு 03.09.2017 - ந் தேதி மாலை வரை லட்சார்ச்சனை நடக்கிறது.
அமைவிடம்:

வேலூரில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் கீழ்புதுபேட்டை என்னும் கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது. வேலூரில்  இருந்து திருத்தணி-திருப்பதி செல்லும் சாலையில் தலங்கை கிராஸ் என்ற பகுதியில் இருந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு சாலை பிரிந்து செல்கிறது. வாலாஜாபேட்டையிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்.

அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டி அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம். மீனம். இராசி நேயர்கள் குருபுத்தி குருதிசை, நடைபெறும்  அன்பர்கள் பரிகாரம் செய்து கொள்வது மிகவும் சிறப்பு
இந்த யாகத்திலும் இலட்சார்ச்சனையிலும்  கலந்துகொள்வதற்கு ஒரு நபருக்கு/ஒரு ராசிக்கு  சங்கல்ப காணிக்கை ரூ 500/- வீதமும் செலுத்தி கலந்து கொள்பவர்களுக்கு மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற  குரு பகவான் யந்திரம் ,தன்வந்திரி பகவான் டாலர், மற்றும் புகைப்படம் ஹோம பிரசாதத்துடன் வழங்கப்படும்.இலட்ச்சார்னையில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரு நபருக்கு சங்கல்ப காணிக்கை ரூபாய் 200/- வீதம் செலுத்தி  கலந்து கொள்பவர்களுக்கு யாகத்தில் பூஜிக்கப்பட்ட தன்வந்திரி பகவான் டாலர் மற்றும் புகைப்படம் மற்றும் ஹோம பிரசாதம் வழங்கப்படும்.
இந்தப் பிரசாதங்கள் கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.வெளிநாட்டில் வாழ்பவர்கள் மேற்கண்ட குரு பெயர்சியில் பங்கேற்க  கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும் குருப்பெயர்ச்சி மகா யாகத்தில் பங்கேற்கும் ஆன்மிக ஆன்றோர்கள், ஜோதிட நிபுணர்கள், ஆலய அர்ச்சகர்கள், கிராமக் கோயில் பூசாரிகள் விழா மேடையில் கௌரவிக்கப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் 20.08.2017 க்குள் தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், 10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
வாலாஜாபேட்டை - 632513.

Ph: 04172- 230033, 9443330203
Web: www.danvantritemple.org |Email: danvantripeedam@gmail.com
Bank Details :Name : Sri Muralidhara Swamigal , Bank Name : State Bank of India,
Account Number : 10917462439, Branch : Walajapet Bank Code:0775, IFSC: SBIN0000775


Friday, August 4, 2017

Vara Mahalakshmi Yagam and Aadi Koozh Vaarthal....

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்

ஸ்ரீ வரமஹாலக்ஷ்மி யாகம்

கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடவும், திருமணம், குழந்தை பாக்யம் வேண்டியும், தொழில் வியாபாரம் சிறக்கவும், குழந்தைகள் கல்வியில் மேன்மை அடயவும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், மக்கள் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று ஆடி மாதம் 19ம் தேதி 04.08.2017 வெள்ளிக் கிழமை வரலக்ஷ்மி நோன்பு முன்னிட்டு காலை 9.00 மணிக்கு கோ பூஜை கணபதி பூஜையுடன் வரம் அருளும் வர மஹாலக்ஷ்மி யாகமும் நவ கன்னிகைக்கும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.















HAYAGREEVAR JAYANTHI 2017

HYGREEVAR JAYANTHI FESTIVAL – SPECIAL HOMAM – ABISHEKAM-ARCHANA.


Hayagrivar homam will be performed at Sri Danvantri Arogya Peedam, Walajapet,For the benefit of school- and college-going students and also for the welfare of the gurus and their families.
This homam, scheduled for 7th August, 2017. Monday, at 10 a.m., is being performed for the students to score good marks in the forthcoming examinations and also for them to obtain good knowledge, wisdom and intelligence.

Hayagrivar homam invokes divine blessings for the children for their success in their exams, and empowering them through vedic prayers. Hayagriva is worshipped as the God of Knowledge and Wisdom. His blessings are sought when beginning study of sacred and secular subjects. The benefits of performing this homam are - improvement in memory, concentration, success in knowledge ventures, studies, education and careers related to education, removal of ignorance, tamas, laziness, inertia. This homam is particularly recommended for students, teachers, researchers and spiritual seekers.

Donations can be sent by DD, cheque, money order in favour of Sri Muralidhara Swamigal to the address given below or funds can be transferred to S.B. Account No.10917462439 with State Bank of India, Walajapet Branch,IFSC Code SBIN0000775, Branch code 0775.

For more details, please contact:Sri Danvantri Arogya Peedam,Ananthalai Madhura, Kilpudupet,Walajapet – 632513, Vellore District.
Phones: 91-4172-230033/0-94433-30203

  

Thursday, August 3, 2017

Sri Raghavendrar’s 346th Aradhana festival

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ராகவேந்தரரின் 346-ஆவது ஆராதனை விழா

Sri Raghavendrar’s 346th Aradhana festival on 9th August 2017 Wednesday by 10.00 AM at Walajapet, Danvantri Peedam, Vellore District.

ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்த்ர தீர்த்த ஸ்வாமிகளின் 346-ஆவது ஆராதனை மஹோத்ஸவம். 09.08.2017 ஆடி மாதம் 24ம் தேதி புதன்கிழமை 10.00 மணி முதல் 12.00 மணிக்குள் துவிதியை திதி முன்னிட்டு பஞ்சாமிருத அபிஷேகம் அலங்காரம், ஆராதனை, அன்னதானம் நடைபெறும்.

தொடர்புக்கு:

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
வாலாஜாபேட்டை 632513
Ph: 04172- 230033,230274,9443330203

Guru Peyarchi Maha Yagam 2017

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
02.09.2017 சனிக்கிழமை, 3.09.2017 ஞாயிற்றுக்கிழமை
இரு தினங்கள் சிறப்பு இலட்சார்ச்சனையுடன்
குருவருள் சேர்க்கும் குருப் பெயர்ச்சி மகா யாகம்
 வேலூர்மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரிபீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 02.09.2017  சனிக் கிழமை காலை 10.30 மணிமுதல் 1.00 மணி வரை மாலை 5.30  மணிமுதல் இரவு 7.00 மணிவரை 03.09.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை இலட்சார்ச்சனையுடன் குருப்பெயர்ச்சி மஹாயாகம் மற்றும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது. மனித வாழ்க்கையின்
ஏற்றம் - இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை  அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்திஎன்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப்
பெறுகின்றது. குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு  ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் 2, 5,7,9,11, ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், 1,3,4,6,8,10,12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார்.


இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப
பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி  02.09.2017 சனிக்கிழமையன்று  கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.


அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டி அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம். மீனம். இராசி நேயர்கள் குருபுத்தி குருதிசை, நடைபெறும்  அன்பர்கள் பரிகாரம் செய்து கொள்வது மிகவும் சிறப்பு.  இந்த யாகத்திலும் இலட்சார்ச்சனையிலும் கலந்துகொள்வதற்கு ஒரு நபருக்கு/ஒரு ராசிக்கு  சங்கல்ப காணிக்கை ரூ 500/- வீதமும் செலுத்தி கலந்து கொள்பவர்களுக்கு மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற  குரு பகவான் யந்திரம் ,தன்வந்திரி பகவான் டாலர், மற்றும் புகைப்படம் ஹோம பிரசாதத்துடன் வழங்கப்படும்.இலட்ச்சார்னையில்

கலந்து கொள்பவர்களுக்கு ஒரு நபருக்கு சங்கல்ப காணிக்கை ரூபாய் 200/- வீதம்
செலுத்தி  கலந்து கொள்பவர்களுக்கு யாகத்தில் பூஜிக்கப்பட்ட தன்வந்திரி பகவான் டாலர் மற்றும் புகைப்படம் மற்றும் ஹோம பிரசாதம் வழங்கப்படும். இந்தப் பிரசாதங்கள் கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.வெளிநாட்டில் வாழ்பவர்கள் மேற்கண்ட குரு பெயர்சியில் பங்கேற்க விரும்பினால் கீழ்கண்ட முகவ்ரியில் தொடர்புகொள்ளவும் குருப்பெயர்ச்சி மகா யாகத்தில் பங்கேற்கும் ஆன்மிக ஆன்றோர்கள், ஜோதிட நிபுணர்கள், ஆலய அர்ச்சகர்கள், கிராமக் கோயில் பூசாரிகள் விழா மேடையில் கௌரவிக்கப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் 20.08.2017க்குள் தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்
 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
வாலாஜாபேட்டை 632513
தொலை பேசி. 04172- 230033,230274,9443330203
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775