Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, June 10, 2017

Kaala Dosha Nivarthi Homam

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
 சனிசாந்தி ஹோமத்துடன் காலதோஷ நிவர்த்தி ஹோமம்

வாழ்வில் முன்னேற்றமடைய பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் பலவிதமான தடைகள் வந்து அநத முயற்சியை தடுக்கிறது. அந்த தடைகளை வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது பித்ருதடை, ஜாதகத்தடை, கிரகத்தடை, வாஸ்துதடை, நவகிரகத்தடை, கர்மவினை, ஊழ்வினைதடை, போன்ற பல்வேறு விதமான தடைகள் நம்முன் வந்து நிற்கின்றன. அதில் பெரிதும் பங்கேற்பது நவகிரகங்களில் ஒன்றான சனிகிரகத்தினால் ஏற்படும் தடைகள் பெரிதும் பாதிக்கிறது. பெரும்பாலான ஜாதகருக்கு சனிதிசை, சனிபுக்தி, சனி அந்தரத்தினாலும் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.


அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளச்சளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைதன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 10.06.2017  சனிக்கிழமை சனி ப்ரீத்தியுடன் காலதோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமம் பித்ரு தோஷ நிவர்த்திக்காகவும், ஆயுள் அபிவிருத்திக்காகவும் நடைபெற்றது. இந்த யாகத்தில்  கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நெல்பொரி, ல்லெண்ணைய், வெல்லம் வன்னி, சமித்து போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டது. ஹோமத்தின் நிறைவாக காலசக்கர பூஜையுடன், பைரவர் பூஜையும் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் ஈஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Sudarsana Jayanthi 2017 - Maha Sudarsana Homam

ஜீலை 02.07.2017ல்  வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு
மகா சுதர்சன ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில்அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பாக வருகிற ஜீலை மாதம் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நவமி அன்று காலை 10.00 மணியளவில் ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு கீழ்கண்ட பலன்களை பெற்று உலக மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ மாபெரும் சுதர்சன ஹோமம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் சுதர்சன பெருமாளுக்க 16 விதமான  அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் விஷேச அர்ச்சனையும் தன்வந்திரி பீடாதிபதி கயிலை  ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.

ஸ்ரீசுதர்சன ஹோம பலன்கள் :

வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம். பொதுவாக, பல வகையான ஹோமங்கள், ஏதோ குறிப்பிட்ட ஒரு நற்பலனை உத்தேசித்து மட்டுமே செய்யப்படுபவை.
ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களைக் கொடுக்க வல்லது. தீர்க்கஆயுசு பெறவும் பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும், பசுவிருத்தி ஏற்படவும் வீட்டில் உள்ள பசு அதிகம் பால்சுரக்கவும், பசுவை எந்த நோயும் அண்டாது இருக்கவும், சுகப்பிரசவம் ஆகவும், சுபிட்சங்கள்பெறவும், பசுவிருத்தியாகவும், எதிரிகள்தொல்லை நீங்கவும், மன நலம் குணமாகவும், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறவும், விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கவும் கோபம் தனியவும், குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம், சுதர்சன ஹோமத்தில் கீழ்கண்ட பொருட்கள் விஷேசமான முறையில் சேர்க்கப்பட உள்ள்து.
 வெண்கடுகு, எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம், அருகம்புல், சர்க்கரை பொங்கல், தயிர், நாயுருவி, ஆலமரசமித்து, நெய், பஞ்சகவியம், கருநொச்சி, இருமுள், நீல ஊமத்தபூ, வெள்ளை புலாச்சு, குக்கிலு, சம்மதபூ, வெண்பட்டு போன்ற பொருட்கள் ஹோமத்தில் சேர்க்கப்பட உள்ளது. பக்தர்கள் அனைவரும் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹோமத்தில் பங்பேற்று சுதர்சன பெருமாளின் அருள் பெற்று நலம்பேற ப்ரார்த்திக்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு,

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை.632513
PH: 04172-230033/230274/09443330203

Navagraha Homam

"Navagraha Homams" 

Thanks to 'BALAJOTHIDAM' 16.06.2017 VOL:33 ISSUE:25


Thursday, June 8, 2017

Kanchi Maha Periyava Jayanthi 2017

தன்வந்திரி பீடத்தில்

 காஞ்சி ஸ்ரீ மகாபெரியவா ஜெயந்தி விழா  நடைபெற்றது.  

வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 08.06.2017 காலை 10.00 மணிக்கு ஸ்ரீ மகா பெரியவா ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மஹா அபிஷேகம் நடைபெற்றது. ஜகத்குரு” என்ற அடைமொழிக்குஇந்த ஜகமே எனக்கு குருஎன்று விளக்கமளித்த எளிமை காஞ்சி  ஸ்ரீ மகாபெரியவர்.

கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில்  அழைத்து  மகிழலாம்அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள் இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற நினைப்பே நம்மைப் புனிதமாக்கிவிடும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Wednesday, June 7, 2017

Viswa Santhi Maha Thiru Kalyanam for NANDINI DEVI (COW) and NANDIKESAN (BULL)

NANDINI DEVI (COW) weds NANDIKESAN (BULL)

For VISWA SANTHI Vellore District, Walajapet, Ananthalai Mathura, Kilpudupet, Sri Danvantri Arogya Peedam’s Founder and Peedathipathi Dr. Sri Muralidhara Swamigal conducting Maha Thiru Kalyana Vaibhavam of NANDIKESAN (alias) Rishabha Raja and NANDINI DEVI (alias) Go-Matha on Friday 21st July 2017 by 9.15 AM to 10.15 AM at Sri V.S DESIKACHARI ARANGAM, DANVANTRI PEEDAM, WALAJAPET.
Muhurtham - Friday 21st JULY 9.15 AM to 10.15 AM.
Marriage Reception – Thursday 20th  JULY 5.30PM to 7.30PM.
Panthakal Muhurtham - Sunday 16th  JULY  5.30AM
Sumangali Pooja - Sunday 16th  JULY 8.30AM .
Maha Prasadam on the above days.
For more Details, contact;
PH : 04172-230033/230274/09443330203

Vaikasi Visakam 2017 - Sri Subramanya Sathru Samhara Homam

தன்வந்திரி பீடத்தில்
ஸ்ரீ சுப்ரமண்ய சத்ரு சம்ஹார ஹோமம்
நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று 07.06.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஸ்ரீ சுப்ரமண்ய சத்ரு சம்ஹார ஹோமமும் தன்வந்திரி பீடத்தில் கார்த்திகைப் பெண்களுடன் உள்ள கார்த்திகை  குமரனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

 மக்களின் துன்பங்களை போக்க இறைவன் ஏதோ ஒரு உருவில் உலகில் அவதரிப்பதையே அவதாரம் என்பர். அவதாரம் என்ற வடமொழி சொல்லுக்கு கீழே இறங்கி வருதல் என்று பொருள்.

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். இந்த நாளில் நடைபெறவுள்ள ஹோமத்திலும் அபிஷேகத்திலும் பங்கேற்று முருகனை வணங்கினால் சத்ருதொல்லை நீங்கும், பகை விலகும், துன்பம் நீங்கும், கல்வி, ஞானம் தரும் துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும், திருமண பேறு கிட்டும், குழந்தைபேறு உண்டாகும், குலம் தழைத்து ஓங்கும், ஆபத்துக்கள் அகலும், நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.

உலகில் அதர்ம செயல்கள் தலைதூக்கி, தர்மம் தடுமாறும் போது நல்லவர்களை காப்பதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும் யுகங்கள் தோறும் அவதாரம் செய்வதாக பகவான் கிருஷ்ணன் கூறுகிறார்.

முருகன், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன்என்றும், பக்தர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் குகன்ஆகவும், சரவண பொய்கையில் இருந்து வந்ததால் சரவணபவன்என்றும், ஆறு முகங்களை கொண்டவராக இருப்பதால் ஆறுமுகன்என்றும் அழைக்கப்படுகிறார்.


முருகப்பெருமான் பாலபருவத்தில் லீலைகள் பல செய்தார். பிரம்மாவுக்கு ஓம்என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தார். தந்தைக்கு பாடம் சொல்லி தகப்பன் சாமிஎன்ற பெயரை பெற்றார். தீமைகளை அழித்து, நன்மைகளை காப்பதற்காகவே ஏற்பட்டது முருகனின் தோற்றம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவத்தனர்.