Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, May 5, 2017

Vasavi Jayanthi Special Homam and Abhishekam Conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

தன்வந்திரி பீடத்தில் வாசவி ஜெயந்தி விழா

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால்  பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாசவி தேவிக்கு.இன்று மே மாதம் 05.05.2017. வெள்ளிக் கிழமை ஸ்ரீ வாசவி ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ வாசவி ஹோமம் மற்றும் மங்கள கௌரி  ஹோமம் நடைபெற்று 10 விதமான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆரியவைசியர்களின் குலதெய்வமாகும்.வாசவியை வழிபடுவதால் குல தெய்வ அருள்பெற்று அனைவரும்  சகல சம்பத்துக்களும் பெற்று சௌபாக்கியத்துடன் வாழலாம்.திருமணம்,குழந்தைபேறு,தொழில், வியாபாரம் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.என்பது பக்தர்களின்மாபெரும் நம்பிக்கையாகும்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




Wednesday, May 3, 2017

Sri Vasavi Jayanthi Special Homam at Sri Danvantri Arogya Peedam, Walajapet...

தன்வந்திரி பீடத்தில் வாசவி ஜெயந்தி விழா


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் ஆரியவைசியர்களின் குலதெய்வமாக விளங்குகின்ற ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரிக்கு வருகிற மே மாதம் 05.05.2017. வெள்ளிக் கிழமை அவதார தினத்தை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாசவி தேவிக்கு. நல்லெண்ணைய், சீக்காய் பவுடர், வாசனை பவுடர், மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பன்னீர், பஞ்சாமிரதத்துடன் மஹா அபிஷேகம் செய்து ஸ்ரீ வாசவி மூலமந்திர ஜப ஹோமமும், மங்கள கௌரி ஹோமமும் நடைபெற உள்ளது. இதில் அனைத்து குடும்பங்களிலும் சுப காரியங்கள் நடைபெறவும்,சகல சம்பத்துக்களும் பெற்று சௌபாக்கியத்துடன் வாழ பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது.

Tuesday, May 2, 2017

தன்வந்திரி பீடத்தில் நாளும் நன்மை தரும் நான்கு ஹோமங்கள்.

சூலினி சத்ரு சம்ஹார ப்ரத்தியங்கிரா யாகம்
பித்ரு தோஷ நிவர்த்தி யாகம்
பணம் தரும் பைரவர் யாகத்துடன், கால பைரவர் யாகம் சந்தான கோபால யாகம்,

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி மே மாதம் 18.05.2017, 23.05.2017, 25.05.2017, 29.05.2017 மற்றும் 31.05.2017 ஆகிய ஐந்து நாட்கள் தன்வந்திரி பீடத்தில் சிறப்பு யாகங்கள் உலக நலன் கருதியும், கோடை வெய்யிலின் தாக்கம் குறையவும், மழைவேண்டியும், வாழ்வில் வளம் பெறவும்ஆண் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை வேண்டியும், மாணவ மாணவிகள்  ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், ஆயுள்பலம் கூடவும்வியாபாரம் தொழில் சிறக்கவும், சத்ருக்கள் மற்றும் எதிரிகள் தொல்லை அகலவும், பயம் விலகவும், இயற்கை வளங்கள் பெறுகவும், தம்பதி ஒற்றுமைகள் கூடவும், பில்லி சூன்யம் செய்வினை போன்றவைகளால் ஏற்படும் மாயை அகலவும், வாக்கு பலிதம் ஏற்படவும், கலைகளில் சிறந்து விளங்கவும், பட்சி தோஷம், நாக தோஷங்கள், பித்ரு தோஷங்கள் பிரேத தோஷம், பூமி தோஷம் போன்ற தோஷங்கள் விலகவும், கோ சாபம், ஸ்ரீ சாபம்,சுமங்கலி சாபம்,மூதாதையர் சாபம்,போன்ற சாபங்கள் அகலவும்,. மனநோய் நீங்கவும், மரண பயம் அகலவும் குலதெய்வ அருள் கிடைக்கவும், ஜாதகரீதியான தோஷங்கள் கிரக ரீதியான தோஷங்கள் குடும்ப ரீதியான தோஷங்கள் அகலவும், கண் திருஷ்டி அகலவும், ஆண் பெண் வாரிசு கூடவும், குடும்ப ஒற்றுமை ஏற்படவும், நிலம் வீடு மனை மண் பாக்கியம் ஏற்படவும், தடைபட்ட காரியங்களில் வெற்றி பெறவும், நீண்ட நாள் வழக்குகளில் சுமூக தீர்ப்பு ஏற்படவும், அகால மரணம் நிகழாமல் இருக்கவும், வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும், தற்கொலை எண்ணங்களை தடுக்கச் செய்யவும் இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், வாஸ்து தோஷங்கள் விலகவும்,போன்ற பல்வேறு காரணங்களுக்காக வருகிற 18.05.2017 வியாழக் கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு மஹா மிருத்தியஞ்சய ஹோமத்துடன் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கு மஹா அபிஷேகமும் அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு  பணம் தரும் சொர்ணகால பைரவருக்கும் மஹா பைரவருக்கும் தேய்பிறை அஷ்டமி யாகமும் மஹா அபிஷேகமும் அர்ச்சனையும் நடைபெற உள்ளது.  23.05.2017 செவ்வாய் கிழமை  பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு 108 சங்குகளை கொண்டு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு சங்காபிஷேகமும் 25.05.2017 வியாழக் கிழமை அமாவாசையை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமமும் பகல் 12.00 மணியளவில் நெய் மிளகாய் கொண்டு சூலினி சத்ரு சம்ஹார ப்ரத்தியங்கிரா யாகமும் ப்ரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். 29.05.2017 திங்கட் கிழமை மாலை 5.00 மணிக்குசங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீவிநாயக தன்வந்திரிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறும். 31.05.2017 புதன் கிழமை வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் ஸ்ரீ முருகப்பெருமான் அருளால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பத்தல் மகிழ்ச்சி ஏற்படவும் குடும்ப வாரிசு எற்படவும் வம்ச விருத்தி அடையவும் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகம் நடைபெற்று சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது.. அவ்வமையம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணைய் சாற்றி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பம் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க  சிறப்பு  கூட்டு பிரார்த்தனையும் நடைபெறும்


மேலும் விபரங்களுக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை – 632513.
வேலூர் மாவட்டம்.
Ph : 04172-230033 / 230274
Cell : 9443330203

Sri Kuzhandayananda Maha Swamigal Jayanthi Festival at Sri Danvantri Peedam, Walajapet.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
குழந்தையானந்த சுவாமிகள் ஜெயந்தி விழா

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளின் ஜெயந்தியை முன்னிட்டு இன்று 02.05.2017 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணிவரை ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளின் மூலமந்திர ஜப ஹோமமும் மஹா அபிஷேகமும் நடைபெற்றது. குழந்தையானந்த மஹா ஸ்வாமிகள் மதுரையில் பிறந்தவர். மதுரை மீனாட்சியால் அரவணைக்கப்பட்டு வளர்ந்தவர். பலமாநிலங்களுக்கு சென்று ஆன்மீகத்தை பரப்பியவர். பலவிதமான சித்துக்களை செய்துவந்தவர். காசியில் உள்ள காலபைரவர் கோயிலில் பல நாட்கள் தவம் செய்தவர்.

ஒரே நாளில் நான்கு இடத்தில் ஜீவசமாதிஆனவர்.


ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளின் குருநாதராகவும் விளங்கியவர். மஹாராஜாக்களால் பூஜிக்கப்பட்டவர். த்ரைலிங்கேஸ்வரர் என்ற நாமத்துடனும் வாழ்ந்து வந்தவர். அவதூதர்,இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீ மஹா ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளுக்கு தன்வந்திரி பீடத்தில் 5 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் தனி சந்நிதி அமைத்து ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பூஜித்து வருகிறார்.அத்தகைய சித்தபுருஷரின் ஜெயந்தி விழா  விசேஷ ஹோமம், அபிஷேகம்ஆராதனையுடன் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது இந்த பூஜையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் திரு.பாஸ்கர் மற்றும் திரு.சேகர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Monday, May 1, 2017

Sri Sathyanarayana Pooja at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

Sri Danvantri Arogya Peedam, Walajapet Inviting You All For Sri Sathyanarayana Pooja. Conducting On 9th and 10th MAY 2017.




Sri Ramanujar's 1000th Jayanthi Festival at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

தன்வந்திரி பீடத்தில்
ஸ்ரீ ராமானுஜர் 1000 வது ஜெயந்தியை விழா

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று காலை 10.00 மணிமுதல் 1.00 மணி வரை ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி,தொழிலாளர் தினம்,மற்றும் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
ஸ்ரீ ராமானுஜரின் 1000 வது ஜென்ம தினத்தை முன்னிட்டும், உலக தொழிலாளர்களின் உடல் நலம், மன நலம் கருதியும், அவர்களது குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டி தொழிலாளர் தினத்தை முன்னிட்டும், வளர் பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டும்,  குருஅருள் கிடைக்கவும் குடும்பம் தழைக்கவும் நோயின்றி மக்கள் நலமுடன் வாழவும் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ முருகப்பெருமான் அருளால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பத்தல் மகிழ்ச்சி ஏற்படவும் குடும்ப வாரிசு எற்படவும் வம்ச விருத்தி அடையவும் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகம் நடைபெற்று சந்தான கோபால யாகம் நடைபெற்றது. அவ்வமையம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணைய் சாற்றி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பம் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க  சிறப்பு  கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது. மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்பதாற்காக சிறப்பு பூஜைகளை ஸ்ரீ ராமானுஜரின் 1000 வதுஜெயந்தி விழாவை முப்பெரும் விழாவாக  நடைபெற்றது..பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்