கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Sunday, October 5, 2014
Saturday, October 4, 2014
Friday, October 3, 2014
ஸ்ரீதன்வந்தரி ஆரோக்கிய பீடத்திற்கு சுற்றுப்புற சூழலுக்கான சர்வதேச தரச் சான்றிதழ் தூய்மை இந்தியா நாளில் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் மூலம் வழங்கினார்
அந்த வகையில் பிணிகளை குணப்படுத்துதல் எனும் [Healing service]சேவைக்காக ISO 9001- 2008ம் சுற்றுப்புற சூழலுக்காக{கிரின் பீல்டு} ALTERANATIVE HEALING SERVICES என்ற முகப்பில் இரண்டாவது 3 ஆண்டுகளுக்கான சுற்றுப்புற சூழலுக்கான சர்வதேச தரச்சான்றிதழை 14001;2004 என்ற சான்றிதழ் அமெரிக்காவை முதன்மையாக கொண்டு செயல்படும், BMQR சர்வதேச தரச்சான்றிதழ் நிறுவனம் தூய்மை இந்தியா நாளான இன்று வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் மூலம் டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தது. உடன் BMQR அதிகாரி திரு தட்சிணாமூர்த்தி மற்றும் வாலாஜா தாசில்தார் வி,ஏ,ஓ, பழனி உடன் இருந்தார்.
Thursday, October 2, 2014
தன்வந்திரி பீடத்தில் கூட்டுப்பிரார்த்தனை ஹோமங்கள்…
இன்று
காலை 10.00 மணியளவில் (02.10.2014) தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதியும், மக்களின்
முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் விரைவில் ஜாமினில் வெளிவந்து குற்றமற்றவர் என்ற
தீர்ப்பு கிடைத்து மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டி வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்,
திரு. ஏழுமலை, ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.முகமதுஜான் ஆகியோர் முன்னிலையில்,
நகரமன்ற தலைவர் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு
உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 51 சக்தி பீட தீபம்
ஏற்றி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம், சரப ப்ரத்யங்கிரா யாகம், அஷ்ட பைரவர் யாகம் நடத்தினர்.
இதில் ஏராளமான மூலிகை திரவியங்கள், பழங்கள், புஷ்பங்கள், பலகார வகைகள், சித்ரா அன்னங்கள்,
பூசணிக்காய், மிளகாய் வற்றல் சேர்க்கப்பட்டது.
நிறைவாக
பட்டு வஸ்த்திரங்கள் பூர்ணாஹூதியில் சேர்க்கப்பட்டு சர்வமத கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஹோம பிரசாதம்
பெற்று அன்னதானத்தில் பங்கேற்றனர்.
Wednesday, October 1, 2014
தன்வந்திரி பிடத்தில் 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜையுடன் ஸ்ரீ வராகி ஹோமம்.
தன்வந்திரி பிடத்தில்
வேலூர் கிழக்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில் 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜையுடன்
ஸ்ரீ வராகி ஹோமம் காலை 10.00 மணியளவில் துவங்கப்பட்டது கலச பூஜை, யாகசால பூஜை, புண்யாவதனம்
ஆகிய பூஜைகள் நடைபெற்று 468 சித்தர்களுக்கு
பன்னீர் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது,
இதில் மக்கள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா ஆரோக்யத்துடன் நிண்ட நாள் வாழவும். குற்றமற்றவர்
என்று விரைவில் தீர்ப்பு கிடைக்க வேண்டி வேலூர் கிழக்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில்
ஆற்காடு
நகர மன்ற தலைவர் புருஷோத்தமன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கழக உடன் பிறப்புகள் மற்றும்
பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், இதற்கான ஏற்பாடுகளை ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினர்
திரு.ஆர்.சீனிவாசன் செய்து இருந்தார்.
Subscribe to:
Posts (Atom)



