கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Friday, August 2, 2013
Spl prayers for Aadiperukku on Aug 3
Special prayers would be held at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on August 3, 2013, to celebrate Aadiperukku (the 18th day of the month of Aadi).
Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal said at the special prayers, devotes would seek copious rains so that all the rivers so that farmers can have enough water and people have enough drinking water. Farmers are also known to sow seeds and take steps hoping for a good harvest later. Similarly, women also conduct sumangali pooja.
On this auspicious day, special prayers would be held at the Danvantri Peedam also for world peace.
Adi Pooram fest at Peedam on Aug 9
Bangles will be presented to the Ambikai idols at the Sri Danvantri Arogya Peedam, Walajapet, on the occasion of Adi Pooram on August 9, 2013, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.
The bangles offered to all the goddesses at the Peedam would be given as prasadam to pregnant women and to couples who seek progeny.
The function would take place at 10 a.m. on Friday, August 9. Peedam founder Sri Muralidhara Swamigal has asked devotees to attend the function, collect the prasadam and attain the benefits by paying obeisance to the idols of all the goddesses at the Danvantri Peedam.
Thursday, August 1, 2013
ஆகஸ்ட் 6, 2013 செவ்வாய்க்கிழமை அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
அமிர்த சஞ்சீவினி ஹோமம் மற்றும் சண்டி யாகம்…
சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.
ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், அரிசி, தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து பிறகு ஆலயங்களுக்கு சென்று வருதல் நல்லது. பித்ருக்கள் மனம் மகிழ்ந்தால்,நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும். ஆடி அமாவாசை தினத்தில் தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது.
இதனை முன்னிட்டு கயிலை ஞானகரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சிறப்பு ஹோமமாக அமிர்த சஞ்சீவினி ஹோமம் மற்றும் மஹா சண்டி யாகத்தையும் விசேஷ திரவியங்களை கொண்டு காலை 10.00 மணியளவில் நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும்
|
|
|
|
ஆகஸ்ட் 9, 2013, வெள்ளிக்கிழமை அன்று ஆடி
பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள அம்பிகைகளுக்கு முளைப்பயிருடன்
வளையல் சாற்றும் விழா..
ஆடிப் பூரம் - அம்பிகை கருவுற்று
இருப்பதையொட்டி முளைப்பயிற்றை
அம்பிகையின் வயிற்றில் பிணைத்து, கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி பிரார்த்தனை செய்வார்கள்.
முளைப்பயிறின் வடிவமும், நுண்ணோக்கியில் தெரியும் உயிரணுவின் வடிவமும் ஒன்று போலவே இருப்பதைக் காணுங்கள்.
|
|
ஆன்றோர்கள், இவற்றை அறிந்திருந்ததால், இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்திருப்பார்களோ?
நூற்றுக்கணக்கான
முளைப் பயிற்றை ஒரு துணியில்
கட்டி, அதை அம்பிகையின் வயிற்றில்
பிணைப்பார்கள். முளைப் பயிறு கட்டுவது,
வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுவது ஆகும்.
அம்பிகைக்கு
வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும்.அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள்
ஆடி மாதத்தில், பூரம் நக்ஷத்திரம் இணையும்
நாள் ஆகும்.
வளைகாப்பு
நிகழ்ச்சி என்பது கர்ப்பமான பெண்ணுக்கு
மகிழ்ச்சியூட்டும் விதமாக, உறவினர்கள் புடைசூழ
வாழ்த்துவார்கள். கர்ப்ப
காலத்தில் பெண்ணுக்கு எவ்வித (உடல் & மனம்)
கஷ்டங்களும் உண்டாகதவாறு பார்த்துக்கொள்வார்கள்.
கருக்கொண்ட
காலம் பிள்ளைப் பேற்றுக்கு பூர்வ (முந்தைய) காலம்.
ஆடி மாதத்தில், பூர்வ பல்குனி எனும்
பூரம் நக்ஷத்திரம் இணையும் நாள் ஆடிப்
பூரம்.
இந்த ஆடிப் பூர தினத்தில்
தான் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அம்பிகை
வளையல் அலங்காரத்தில் மனம் மகிழ்ந்து, நெஞ்சம்
நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும்
அருள் பாலிப்பாள் என்பது ஐதீகம்.
அகிலாண்ட ஈஸ்வரியான
பார்வதி தேவி ருதுவான தினம்தான் ஆடி பூரமாக கொண்டாடப்படுவது என்பது மற்றொரு சிறப்பாகும்.
மேலும் ஆடிப் பூர தினத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய
தமிழை ஆண்ட கோதை ஆண்டாள்
இந்த ஜகத்தில் துளசிச் செடியின் கீழ்
உதித்தாள்.
ஆழ்வார்களில்
ஒருவரான ஆண்டாள் விதைத்த ஆன்மீக
விதை, பிற்காலத்தில் சமயம் காக்கும் பெரும்
விருக்ஷமாக வளர்ந்தது. ஆடிப் பூர தினத்தில்
பெண் தெய்வங்களை தரிசனம் செய்வோம் ! ஆனந்தமான
நல்வாழ்வு பெற்றிடுவோம் !!
![]() |
| ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள நவகன்னிகைகள் |
இதனை முன்னிருத்திதான்
தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழக மக்களுக்கு கொண்டுவந்துள்ள
சீரிய திட்டமாக ஏழை மக்களுக்கு பயன்படும் விதமாக தமிழக அரசால் நடத்தப்பெறும் சமத்துவ
வளைகாப்பு நிகழ்ச்சி எனலாம். சமத்துவ பீடமான ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் சார்பில் சமயப்பணி மட்டுமல்லாமல்
சமுதாய பணிகளும் செய்துவரும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆடி பூரத்தை
முன்னிட்டு பீடத்தில் அமைந்துள்ள பெண் தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்து சாற்றிய வளையல்களையும்,
சௌபாக்ய பொருட்களையும், கர்ப்பிணி பெண்களுக்கு சுகபிரசவம் நடைபெறவும், தம்பதிகள் மகிழ்ச்சி
அடையவும் வம்ச அபிவிருத்திக்காகவும்,
நற்குழந்தைப் பேற்றுக்காகவும் பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த வைபவத்தில் அனைவரும் கலந்து
கொண்டு பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் சம்பிரதாயங்களும்,
பாரம்பரியங்களும் மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்திலும், அதனால் ஏற்படும் நன்மைகளை
எடுத்துக்கூறும் விதத்திலும், இந்து சமயத்தில் உள்ள அரிய பொக்கிஷங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் என்ற வகையிலும் இந்த ஆடி பூர விழா காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில்
நடைபெற உள்ளது.
இம்மாதிரியான பிரார்த்தனைகள்
வாழ்வியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கும், அறிவியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கும்
பயன்படும் வகையில் அமையும் என்று ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
|
|
|
|
ஆடிப்பெருக்கு – பதினெட்டாம் பெருக்கு
ஆடிப்பெருக்கு - பதினெட்டாம் பெருக்கின் சிறப்பை தெரிந்துகொள்ளும்
விதத்திலும், போற்றிடும் விதத்திலும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
நடத்தும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆகஸ்ட் 3, 2013 ல் சிறப்பு பிரார்த்தனைகள்…
வேலூர் மாவட்டம்
வாலஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டையில் அமைந்திருக்கும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில் பாரம்பரியங்களின் சிறப்பை மக்கள் அறிந்திடும் விதத்திலும், சமய பூஜைகளைப்பற்றி
தெரிந்திடும் விதத்திலும், இயற்கையை துதித்திடும் விதத்திலும், மாங்கல்யத்தின் மகிமையை
உணர்ந்து போற்றிடும் வகையிலும், வருண பகவானின் கருணை உலக மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திடும்
விதத்திலும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சிறப்பு பிரார்த்தனை நடத்த
உள்ளார்.
ஆடிப்பெருக்கின்
சிறப்பு
ஆடிப்பெருக்கு
என்பது ஆடி மாதம் 18ஆம்
நாள் ஆகும். இந்நாளில், இம்மாதத்தில் தமிழக நீர்நிலைகளில்
நீர் பெருக்கெடுத்து
ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு
என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடிப்பு இடங்களில்
பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்.
இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை
விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு சோளம்
போன்ற தானியங்களை விதைத்தால் தான்
அவர்கள் தை மாதத்தில் அறுவடை
செய்ய முடியும். மேலும் உழவர் திருநாளை ஒவ்வொரு உழவரும் றிப்பாக
நடத்த முடியும். அதற்கு வற்றா
நதிகளை தங்கள் கடவுளாக போற்றி
மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின்
உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே
ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது
எனலாம்.
மக்கள்
ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக்
கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் மற்றும்
உழவர்கள் கோயில்களில் சென்று
வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள்
ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு
இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம்
செய்து, பசு சாணத்தால் மெழுகி
அதன் மேல் வாழை இலையை
விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன்
முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில்
வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து,
ஊதுபத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத
விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை
மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில்
விடுவார்கள். இப்படி செய்தால், நீர்
வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும்
மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில்
இச்சடங்குகளை செய்வார்கள். இது கங்கா வழிபாடு எனலாம். அது மட்டும் அல்லாமல் அன்று
தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு
சாதங்கள் – சித்ரா அன்னங்களான
(தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல்,
எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி
சாதம், தயிர் சாதம்) செய்து
அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து
குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
மேலும் கணவர்கள்
ஆரோக்யத்துடன் வாழ திருமாங்கல்யத்தை வைத்து சுமங்கலி பூஜை செய்து, மஞ்சள்
சரடு அணிந்து கொள்வர். நாட்டில்
சுபிட்சமாக மழை பெய்து விவசாயம்
செழிக்கவேண்டியும் சிறப்பு பூஜைகளையும் நடத்துவர்.
இத்தகைய சிறப்பு
வாய்ந்த ஆடிபெருக்கன்று ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்று
நடைபெரும் விசேஷ பிரார்த்தனையில் மக்கள் ஆரோக்யமாகவும், இயற்கை வளத்துடனும், தீர்க்க
சௌபாக்யங்களுடனும், தீர்கக ஆயுளுடனும் வாழசிறப்பு பிரசாதம் வழங்கபட உள்ளது. மேலும்
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை உலக வாழ்வியல் மையமாக அமைத்து உலக மக்களின் நலனுக்காக பலவிதமான
ஆராய்ச்சிகளை செய்து வருகிற கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பாரம்பரியங்களை
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விதத்தில் இந்த பிரார்த்தனை நடத்த உள்ளார்.
இந்த இனிய வைபவத்தில்
அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)


















