கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Sunday, May 12, 2013
ஸ்ரீ ப்ரத்யங்கரா தேவி யாகம் - நிகும்பல யாகம் நடைபெற்றது
ஸ்ரீ தன்வந்தி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும்.
ஸ்ரீ ப்ரத்யங்கரா தேவி யாகம் - நிகும்பல யாகம்
பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்ப்பவள் பிரத்யங்கரா தேவி.
இவள் பத்ரகாளியின் சொரூபம்.
தேவி சிங்க முகத்துடனும், கரிய உடலுடனும், சிறிய கண்களுடனும், கைகளில் சூலம், கபாலம், டமருகம், பாசம் போன்ற ஆயுதங்கள் ஏந்தியும், நீல நிற ஆடை உடுத்தி, தனது வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து சிங்கத்தின் மீது சிம்மவாகினியாய் வீற்றிருந்து அருள்பாளிக்கின்றாள். அகோர ரூபம் என்றாலும், தேவிக்கு இங்கு மங்களம் அருளும் சாந்த வடிவம், பயம் நீக்குபவள், பயம் கொண்டோர் தனது நாமத்தை சொல்ல பயம் தீர துணையிருப்பவள், கேட்டவர்க்கு கேட்டதை அருளும் இவள் பக்தருக்கு என்றும் துணையிருப்பவள்.
Saturday, May 11, 2013
| கல்லால், வேலூர் மாவட்ட துணை ஆட்சியர் திரு.தங்க நடராஜன் அவர்கள் |
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு
உதவி
துணை ஆட்சியர் வருகை…
வாலாஜாபேட்டை,
மே 11, 2013
கல்லால், வேலூர்
மாவட்ட துணை ஆட்சியர் திரு.தங்க நடராஜன் அவர்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு
வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானை ப்ரார்த்தனை செய்தார். பின்னர் பீடத்தில் அமைந்திருக்கும்
65 பரிவார தெய்வங்களையும் வழிபட்டார். மேலும் பீடத்தில் நடைபெற்று வரும் இலவச யோக பயிற்சி
மையத்தை பார்வையிட்டார். பின்னர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளைப்
பெற்று மனம் மகிழ்ந்தார்.
Friday, May 10, 2013
திருமதி. ராஜலட்சுமி, வேலூர் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் அவர்கள் வருகை
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்திற்கு
திருமதி. ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர்
அவர்கள் வருகை
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்திற்கு 9.05.2013 வியாழக்கிழமை அன்று திருமதி. ராஜலட்சுமி, வேலூர் மாவட்ட
சிறப்பு பெண்கள் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அவர்கள் வருகை தந்து, அமாவாசை தினத்தையொட்டி
நடைபெற்ற ராகு,கேது ப்ரீத்தி ஹோமத்துடன், சூலினி துர்கா ஹோமத்திலும் பங்கேற்றார். ஸ்ரீ
தன்வந்திரி பகவானிடம் சிறப்பு பிரார்த்தனையுடன், பீடத்தில் அமைந்துள்ள இதர 65 பரிவார
தெய்வங்களையும் வழிபட்டார். பின்னர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
அருளாசியையும் பெற்று மனம் மகிழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து
பீடத்தில் நடைபெற்று வரும் இலவச யோகா பயிற்சியை பார்வையிட்டு பயிற்சி பெறும் மாணவ,
மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Anaicut MLA hails Yoga Camp of Peedam
Anaicut constituency
MLA, Mr Kalaiarasu, visited the Yoga Camp of the Sri Danvantri Arogya Peedam,
Walajapet, on Monday, May 6, 2013, and urged the school students participating
in the camp to seize the opportunity and learn Yoga practices which will help
them in all walks of life.
The Yoga Camp was
launched on May 5 in the presence of Peedam founder, Kayilai Gnanaguru Dr Sri
Muralidhara Swamigal, at the Peedam. The camp is an initiative of Sri
Muralidhara Swamigal.
Subscribe to:
Posts (Atom)



