ஸ்ரீ தன்வந்திரி
யோகா மையத்தில்
இலவச யோகா பயிற்சி இனிதே ஆரம்பமானது…
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் நடத்தும் ஸ்ரீ தந்வந்திரி யோகா
மையத்தில் 5.5.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இலவச யோகா வகுப்பு துவக்க விழாவின்
போது பயிற்சிக்கு வந்திருந்த பெரியோர்களையும், மாணவ, மாணவியர்களையும் மற்றும் அனைவரையும்
பீடத்தின் யோகா மைய ஒருங்கிணைப்பாளர் திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் வரவேற்று உரையாற்றினார்.
| வேலூர் மாவட்ட காவல் பயிற்சி கல்லூரியின் துணை கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் அவர்களை ஸ்வாமிகள் வரவேற்றபோது எடுத்தப்படம் |
பின்னர் இந்த விழாவை அனந்தலை ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.எம். வெங்கடேசன்
அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். மேலும் இவ்விழாவில் உலக சமாதான ஆலயத்தின் நிகழ்ச்சி
தொகுப்பு அதிகாரி மெய்ஞானச் செல்வர் திரு.எஸ்.வி.கிரி அவர்கள் முன்னிலை வகித்தார்.