Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, June 24, 2021

SPECIAL RAHU KETU HOMAM ON 24.06.2021


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 
ராகு கேது சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம்






 

Sunday, June 20, 2021

SUDARSHANA HOMAM FOR SRI SUDARSHANA PERUMAL ON 20/06/2021@ DANVANTRI AROGYA PEEDAM

 

வாலாஜா தன்வந்திரி பீடத்தில்

20.06.2021, ஞாயிற்றுக்கிழமை சுதர்சன ஜெயந்தியை

முன்னிட்டு சங்கடங்கள் தீர்த்து சுந்தர வாழ்வு தரும்

ஸ்ரீ சுதர்சன ஹோமம் நடைபெறுகிறது

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற ஆனி மாதம் 6ம் தேதி சித்திரை நட்சத்திரம் 20.06.2021 ஞாயிற்றுக்கிழமை சுதர்சன ஜயந்தியை முன்னிட்டு சங்கடங்களையும்தீமைகளையும் அழித்து சுந்தர வாழ்வு தரும் சுதர்சன ஹோமம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்ப்டி நடைபெறவுள்ளது. இந்நாளில் சக்கரத்தாழ்வார்க்கு நடைபெறும் ஹோமங்களிலும், பூஜைகளிலும், அபிஷேகங்களிலும் பங்கேற்று வணங்கி வழிபட எண்ணியவை நிறைவேறும்.

 சுதர்சன ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொண்டு சுதர்சன ஆழ்வாரை வழிபடுபவருக்கு அச்சங்கள் விலகும், ஞாபகம் சக்தி பெருகும், செல்வம் சேரும், உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவர், கண்ணுக்குத் புலப்படாத நோய்களுக்கு தீர்வு உண்டாகும், சகல பாவங்களும், தோஷங்களும் நீங்கி, தடைபட்ட சுபகாரியங்கள் நிறைவேறும்.

சுதர்சன ஆழ்வார் எனும் சக்கரத்தாழ்வாரை வழிப்பட்டு சங்கடங்களையெல்லாம் தீர்த்து, வாழ்வில் சகல சந்தோஷங்களையும் செளபாக்கியங்களையும் பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

 சுதர்சனர் என்றால் நல்ல வழியைக் காட்டி அருளுபவர் என்று பொருள். இனியவர் என்று அர்த்தம். திருமாளின் திருக்கரங்களில் ஆயுதமாகத் திகழ்பவர். சுதர்சனம் என்றால் சக்கரம் என்று அர்த்தம். இந்த சக்கரம், நல்வழி காட்டக்கூடியது. உலகை உய்விக்கக் கூடியது. மகாவிஷ்ணுவின் வலது திருக்கரத்தில் இருந்தபடி, இந்த உலகத்து ஜீவராசிகளையெல்லாம் வாழ்வதற்கு அருள் செய்யக்கூடிய வலிமை மிக்கது என்கிறது விஷ்ணு புராணம்.

பக்தர்களைக் காக்கின்ற கடமையும் பொறுப்பும் பகவானுக்கு உண்டு என்ற வகையில் சுதர்சன ஆழ்வார், எதிரிகளையும் தீயவர்களையும் துஷ்ட சக்திகளையும் அழித்து பக்தர்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு எனலாம்.

சுதர்சன பெருமாளை புதன்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் அமாவாசை நாட்களிலும் வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும். தமிழகத்தில் பெரும்பான்மையான பெருமாள் கோயில்களில், சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சந்நிதி உண்டு என்ற வகையில் தன்வந்திரி பீடத்தில் சுதர்சன ஆழ்வாருக்கு என்று தனிச்சந்நதி உண்டு.

சுதர்சனரை வழிபடுவதால் மனோபலம் பெருகும். எதிரிகள் தொல்லை அகலும், பயங்கள் விலகும், தடைகளை தகர்த்து வெற்றிபெறச் செய்பவர். மங்களங்கள் அனைத்தும் தந்தருள்வார்.

ஸ்ரீ சுதர்சனர் அனல் தெறிக்கும் கேசமும், மூன்று கண்களும் கொண்டு ருத்திர அம்சமாக விளங்குபவர். தீயவர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்பவர், நல்லவர்களுக்கு அரனாக இருந்து காப்பவர். உயிர்கள் மீண்டும், மீண்டும் ஜனித்து மரணிக்கும் செயல்கள் யாவும் ஸ்ரீ சுதர்சனரை ஆதாரமாகக் கொண்டே நடக்கின்றன என்று வேதங்கள் கூறுகின்றன.

சுதர்சன ஹோமம் பலன்கள்

விரைவில் நன்மை தரும் மிக சிறந்த ஹோமம் சுதர்சன ஹோமம் எனலாம். நல்ல ஆரோக்கியமும், வளமான வாழ்க்கையும் தரக்கூடிய ஹோமமாகும். மேலும் நவக்கிரக தோஷங்கள், திருஷ்டி தோஷங்கள், வழக்குகள், சத்ரு பயம், சோம்பல், காரியத்தடைகள், பொருள் நஷ்டம், விரயம், உறவுகளில் சிக்கல், தீய சக்தி குறித்த பயம், கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், உடல் நலக் கோளாறுகள், பசுவிற்கு ஏற்படும் நோய்கள் போன்ற பலவேறு அச்சங்களை தீர்க்கும் உன்னத ஹோமம் சுதர்சன ஹோமமாகும்.

சுதர்சன ஹோமத்துடன் ஶ்ரீ லஷ்மி நரசிம்ம ஹோமம், ஶ்ரீ மகாலட்சுமி ஹோமம், ஶ்ரீ தன்வந்திரி ஹோமம், ஶ்ரீ லஷ்மி வராகர் ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்று சக்கரத்தாழ்வருக்கு நவக்கலச திருமஞ்சனம் நடைபெறவுள்ளது. இதில் பங்கு பெறும் நபர்களுக்கு ஹோம பூஜையில் வைத்த மஹா சுதர்சன யந்திரம் மற்றும் சுதர்சன ரக்ஷ்சை வழங்கப்பட உள்ளது.

                                      ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்ப்புதுபேட்டை, வாலாஜாபேட்டை,

இராணிபேட்டை மாவட்டம்,

தொலைபேசி எண் 04172 – 230033 செல் 94433 – 30203.

Web: www.danvantritemple.org, Email: danvantripeedam@gmail.com

Saturday, June 19, 2021

HOMAM AND THIRUMANJANAM & GHEE DEEPAM FOR LORD SRI DANVANTRI BAGHAVAN

                          ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு                 ஹோமம், திரவிய திருமஞ்சனம் மற்றும் நெய்                         தீபம் கொண்டு சிறப்பு பூஜை

வாலாஜாபேட்டை  தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு யக்ஞஸ்ரீ டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு ஹோமம் , அபிஷேகம் மற்றும் திரவிய திருமஞ்சனம் நடைபெற்றது

                                                





Wednesday, June 16, 2021

பஞ்சமுக வாராகிக்கு வளர்பிறை பஞ்சமி ஹோமம் மற்றும் அபிஷேகம்

                       ஸ்ரீ பஞ்சமுக வாராகி அம்மனுக்கு 

                          ஹோமம் மற்றும் அபிஷேகம்

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன்  வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு 15.06.2021 அன்று மாலை 6.00 மணிக்கு  பஞ்சமுக வாராகிக்கு பஞ்சமி ஹோமத்துடன் குங்கும், மஞ்சள்  அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

             

                           



Tuesday, June 15, 2021

ஆஷாட நவராத்திரியில் அன்னை வாராஹிக்கு 1000 தாமரை மலர்கள், 1000 தீபங்கள் கொண்டு சிறப்பு வழிபாடு

 ஆஷாட நவராத்திரியில் அன்னை வாராஹிக்கு

1000 தாமரை மலர்கள், 1000 தீபங்கள் கொண்டு சிறப்பு வழிபாடு

 

1000 கிலோ குங்குமத்தால் பஞ்சமுக வாராஹிக்கு அபிஷேகம் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி வருகிற 10.07.2021, சனிக்கிழமை முதல் 18.07.2021, ஞாயிற்றுக்கிழமை வரை ஆஷாட நவராத்திரி வைபவம் வாராஹி சந்நதியில் 1000 தீபங்கள் ஏற்றி 1000 தாமரை மலர்களைக் கொண்டு ஹோமங்களும், பூஜைகளும் காலை, மாலை இருவேளையும் நடைபெறவுள்ளது.

 

ஸ்ரீ சாக்த வழிபாடு அம்பிகையை முதற்கடவுளாகக் கொண்டு வழிபடுவதாகும். ஆதி அன்னையே சகல சக்தியாகவும் திகழ்ந்து சகல உலகங்களையும் காப்பவள். தேவி வழிபாடுகளில் நவராத்திரி மிகவும் முக்கியமானது. பொதுவாக நவராத்திரி என்றதும் நமக்கு புரட்டாசி மாதம் கொண்டாடும் ஆயுதபூஜைக் காலமான மகாநவராத்திரியே நினைவுக்கு வரும். ஆனால் அந்தக் காலத்தில் பன்னிரண்டு மாதங்களிலும் பன்னிரண்டு நவராத்திரிகளைக் கொண்டாடும் வழக்கத்தை நம் முன்னோர் கொண்டிருந்தனர். காலப் போக்கில் அந்த வழக்கம் குறைந்து முக்கியமான நான்கு நவராத்திரிகளைக் கொண்டாடும் வழக்கமே உள்ளது.

 

நான்கு நவராத்திரிகள்

 

ஆனி மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் `ஆஷாட நவராத்திரிஎன்றும்

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் `சாரதா நவராத்திரிஎன்றும்

தை மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் சியாமளா நவராத்திரி எனும் `மகா நவராத்திரி என்றும்

பங்குனி மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் `வசந்த நவராத்திரி’ என்றும் அழைக்கப்படுகின்றன.

 

வாராஹியின் சிறப்புகள்

வாராகியின் இருசெவிகள் கோமளமாகவும் திருவடிகள் புஷ்பராகமாகவும் இரண்டு கண்கள் நீல கல்லாகவும், கரங்கள் கோமேதகமாகவும், நகம் வைரமாகவும், சிரிப்பு முத்து ஆகவும், பவளம் இதழாகவும், திருமேனி உடலோ மரகதம், பச்சை மாணிக்கம் போன்றதாகவும் போற்றப்படுகிறது.

வாராஹி வாலை திரிபுர சுந்தரியாக இருந்து நமக்கு அட்டமா சித்திகளை வழங்குகிறாள். வாராஹி தீயவைகளையும், எதிரிகளின் தொல்லைகளையும், துன்புறுத்தல்களும் அழித்து நம்மை காப்பவள். பக்தரைக் காக்கும் பேரரணாக இருப்பவள் வாராஹி.

மனதில் ஏற்படும் பயத்தை போக்குபவளும், பகைமை நீக்குபவளும் வாராஹி. நோய்களை தீர்த்து உடல்நலத்தை தருபவள் வாராஹி.

வார்த்தாளி – வாராஹி – ஆஷாட நவராத்திரி

 

ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக்கொண்ட மாதங்களில் ஒன்று. இந்த மாதம் ஆனிமாத அமாவாசையோடு தொடங்கி ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடிவடையும். ஆனிமாத அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி அடுத்த ஒன்பது நாள்களும் ஆஷாட நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நவராத்திரிக்கு உரிய தேவி வார்த்தாளி என்கிற வாராஹி அம்மன் ஆகும்.

 

வாராஹி அம்மன் சப்த மாதர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். கிராமங்கள் தோறும் அனைத்துக் கோயில்களிலும் சப்த மாதர்களுக்கு என வழிபாட்டுமுறை இருக்கும். காரணம் சப்த மாதர்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அருள்பவர்கள் என்பது நம்பிக்கை. பொதுவாகவே ஆனி - ஆடி மாதங்கள் விவசாயத்துக்கு உகந்தவை. இந்த மாதங்களில்தான் புதிய மழை பெய்து நிலம் விதைப்புக்கு உகந்ததாக இருக்கும். எனவே இந்தக் காலத்தில் நாம் வழிபட வேண்டிய தெய்வம் வாராஹி அம்மன். அன்னை கைகளில் ஏர்க் கலப்பையும் உலக்கையும் கொண்டு காட்சி தருகிறாள். இதுவே இவள் உழவுத் தொழிலைக் காத்து அருள்பவள் அதனால்தான் தன்வந்திரி பீடத்தில் விவசாய பெருமக்களுக்காகவும், உழவுதொழிலை மேம்படுத்தவும், இயற்கை வளங்கள் சுபிச்சைமாக இருக்கவும், நீர் நிலை ஆதாரங்கள் பெருகவும் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பஞ்சமுக (காளி, வாராஹி, சூலினி, திரிபுர பைரவி, பகளாமுகி) வாராஹிக்கு ஆலயம் அமைத்து அவ்வப்பொழுது வாராஹி ஹோமங்களும், சக்தி ஹோமங்களும் பஞ்சமி மற்றும் அஷ்டமி நாட்களில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி நடைபெற்று வருகிறது. இங்கு பிரதி பஞ்சமி நாட்களிலும் ஆஷாட நவராத்திரி தினங்களிலும் வாராஹிக்கு சிறப்பு பூஜைகள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

 

பஞ்சம் போக்கும் பஞ்சமி

 

ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாராஹிக்குரிய அர்ச்சனை மந்திரங்களில், `ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ என்று ஒரு வரி வரும். ஆஷாட மாத பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் பிரியமுடன் ஏற்பவள் அன்னை என்பது இதன் பொருள். நவராத்திரியில் பஞ்சமி திதி நடு நாயகமான தினம். அதனாலேயே அவளுக்குப் பஞ்சமி வழிபாடும் ஏற்பட்டது. அன்னைக்கே பஞ்சமி என்ற திருநாமம் உண்டு. அதற்குப் பஞ்சமி திதிக்கு உரியவள் என்றும் பஞ்சம் போக்குபவள் என்றும் பொருள் கொள்ளலாம். தானியங்கள் கொண்டு அன்னை வாராஹியை வழிபட்டால் வீட்டில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

 

பயங்களைப் போக்கி வெற்றியைத் தருபவள் வாராஹி

 

`சதுரங்க சேனா நாயிகா என்றொரு திருநாமம் அன்னைக்கு உண்டு. அதாவது லலிதாம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் என்பது இதன் பொருள். எனவே அன்னையை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளால் உண்டாகும் பயங்களும் பிரச்னைகளும் இல்லாமல் போகும். `வாராஹிகாரனிடம் வாதாடாதே என்று ஒரு சொல்லாடலே முன்பு இருந்தது. காரணம் வாராஹியை வழிபடுபவர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

 

பஞ்சமி அன்று வாராஹி நாமத்தை சொல்லி பிரார்த்தனை செய்து வந்தால் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

 

ஸ்ரீ வராஹி தேவிக்கு பிரியமான பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, தயிர் சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேன் கலந்த சாதங்கள் தன்வந்திரி பீடத்தில் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.

 

பிலவ ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி  10.07.2021, சனிக்கிழமை அன்று தொடங்கி 18.07.2021, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. 14.7.2021 அன்று பஞ்சமி திதி முன்னிட்டு அன்னை வாராஹிக்கு 1000 தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது. இந்நாளில் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி அன்னை வாராஹி தேவியை வழிபட்டு. நம்மைப் பிடித்திருக்கும் துன்பங்கள் எல்லாம் நீங்கி செல்வ வளங்களுடன் இன்பங்கள் பெற பிரார்த்திப்போம் பஞ்சமுக வாராஹியை என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

 

வார்த்தாளி என்று அழைக்கப்படக்கூடிய வராஹிஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவி களில் ஒருவராக விளங்கக் கூடியவள்அளப்பரியா சக்தி கொண்டவள்வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.

 

வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள்விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள்வீடுநிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள்இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள்மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.

 

ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும்ஸப்த மாதா தெய்வங்களையும்அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும்வழிபாடு செய்வதும்எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.

 

முதலாம் நாள் இந்திரா தேவி (இந்திரானி), இரண்டாம் நாள் ப்ரம்ம தேவி (ப்ராஹ்மி), மூன்றாம் நாள் விஷ்ணு தேவி (வைஷ்ணவி), நான்காம் நாள் சிவ தேவி (மகேஸ்வரி), ஐந்தாம் நாள் குமார தேவி (கௌமாரி), ஆறாம் நாள் ருத்ர தேவி (காளி சாமுண்டா), ஏழாம் நாள் சாகம்பரி தேவி, எட்டாம் நாள் வராஹி தேவி, ஒன்பதாம் நாள் லலிதா பரமேஸ்வரி அன்னைக்கு இந்த நாள்களில் நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்கும அலங்காரம் வாராஹி ஹோமம், வாராஹி அபிஷேகம் பல்வேறு மலர்களால் பூஷ்பாஞ்சலி எனத் தினமும் ஒரு பொருளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற உள்ளது. ஆஷாட நவராத்திரியில் அன்னை பராசக்தியை வழிபாடு செய்துஆனந்தமான நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம் என்கிறார்     ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

மேலும் தொடர்பு கொள்ள முகவரி

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்ப்புதுபேட்டை, வாலாஜாபேட்டை,

இராணிபேட்டை மாவட்டம்,

தொலைபேசி எண் 04172 – 230033 செல் 94433 – 30203.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தீர்த்தகுளம் அமைப்பதற்கான பூமி பூஜை

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தீர்த்தகுளம் அமைப்பதற்கான பூமி பூஜை          

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விரைவில் அமைக்கப்படவுள்ள தீர்த்தகுளம் அமைப்பதற்கான பூமி பூஜை ராஜ வாஸ்துவுடன் 13.06.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு தொடங்கியது.

                             

                               

                             





 




Monday, June 14, 2021

ஜெய மங்கள சனீஸ்வரர் மற்றும் பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம்

     ஜெய மங்கள சனீஸ்வரர் மற்றும் பாதாள சொர்ண                      சனீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் 

சனி ஜெயந்தியை முன்னிட்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயமங்கள சனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு ஹோமம்  மற்றும் 1008 சங்காபிஷேகம்

                                  






 

Friday, June 11, 2021

ஸ்ரீ தன்வந்திரி ஹோமம்


ஸ்ரீ தன்வந்திரி ஹோமம்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு தன்வந்திரி மற்றும் சுதர்சன ஹோமம் நடைபெற்றது.