Pages - Menu

Tuesday, October 3, 2017

ருண விமோசன பிரதோஷ வழிபாடு

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று ருண விமோசன

பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று மாலை 03.10.2017 செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம்  ருண விமோசன பிரதோஷம் என்பதால் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக அனுஷ்டிக்கப்பட்டு பிரதோஷ பூஜை நடைபெற்றது.

ருணம் எனில் கடன் என்று பொருள்.

பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் (  உட்பட ) சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம். உலகை காப்பதற்க்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம்.நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய  காதில் தங்கள் ப்ரார்தனைகளை ரகசியமாக சொல்வார்கள்.

பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பாகவும் சிவன் அபிஷேகப் பிரியன்ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு கறந்த பசும்பால் இளநீர், மற்றும் தயிர், சந்தனம், விபூதி போன்ற விசேஷ திரவியங்களை கொண்டு வலம்புரி சங்குடன் மஹாபிஷேகம் நடைபெற்று  வில்வ இலை, தும்பைப் பூ அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, பிரதோஷ பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சகல தோஷங்கள் நீங்கவும், ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள் அகலவும், பிரம்மஹத்தி தோஷம் விலகவும், கடன் பிரச்சனை தீரவும், துன்பங்கள் தொலையவும், ருண விமோசன பிரதோஷம் நாளான இன்று பிராத்தனை செய்யப்பட்டது. ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. வேறு விதமாக கூறினால் தோஷங்களை குறிக்கும் எனலாம். பணமாக பெறப்படும் கடன் மட்டுமல்ல. தேவ, பூத,பித்ரு,ஆசார்ய, மனுஷ்ய தோஷம் என்ற வகைப்படும் இவைகளை களைய, இந்நாளில் நந்தியெம்பெருமானை  பக்தர்கள் வேண்டி வணங்கி சென்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







No comments:

Post a Comment