Pages - Menu

Monday, October 2, 2017

ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 1008 இளநீர் அபிஷேகம்

வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு
1008 இளநீர் அபிஷேகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  30.09.2017,01.10.2017 மற்றும் 2.10.2017 திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள 9 அடி மூலவருக்கு 1008 இளநீர்கள் மற்றும் நல்லெண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன் கரும்பின் சாறு, பழவர்க்கம், வாசனைச் சந்தனம் மற்றும் சிருங்கநீர், ஆகியனவற்றை கொண்டு வரிசையாக தன்வந்திரி ஹோமத்துடன் மஹாபிஷேகம் நடைபெற்றது.

மேற்கண்ட அபிஷேகம் உலக மக்களின் விருப்பங்கள் நிறைவேறவும், சுகத்தை பெறவும், பாவத்தைப் போக்கவும், உடல் திடம் பெறவும். யம பயத்தைப் போக்கவும் நன்மக்களைப் பெறவும். கடன் தொல்லை நீங்கி நல்வாழ்வு  பெறவும், ஆரோக்கியம். சுகம். செல்வப் பெருக்கு பயிர்கள் வளர்ச்சி பெறவும், கோபத்தைப் போக்கி சாந்தத்தை பெறவும்ஒழுக்கத்தை பெறவும். பயம், பகை அகன்று போகங்களை பெறவும். அரச வாழ்வு. இலட்சுமி கடாட்சம் கிடைக்கவும் தீர்க்க ஆயுள் கிடைக்கவும்.மன துக்கம் நீங்கவும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கவும். அஞ்ஞானம் நீங்கிவிடும். வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு பெற்று பேரானந்தம் பெறவும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து புரட்டாசி திருவோணத்தை முன்னிட்டு ஸ்ரீ லக்‌ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ பால ரங்கநாதர், ஸ்ரீ பட்டாபிஷேகம் ராமர், ஸ்ரீ சத்யநாரயண பெருமாளுக்கு நவ கலச திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட சுகாதார இயக்குனர் திரு சுரேஷ், வாலாஜாபேட்டை கண்மணி ரெடிமேட் உரிமையாளர், திருச்சி நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி திரு பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




















No comments:

Post a Comment