Pages - Menu

Saturday, April 30, 2016

தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி விழாவும் சிறப்பு ஹோமங்களும்


வேலூர் மாவட்டம்வாலாஜாபேட்டைஅனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் டாக்டர் கயிலைஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ள தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ஆரோக்கிய லஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும் 73 பரிவார முர்த்திகளும்
468 சிவலிங்க ருபமாக அமைந்துள்ள சித்தர்களுக்கு வருகிற மே மாதத்தில் உலக நலன் கருதி பல்வேறு ஹோமங்கள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.
09.05.2016 திங்கள் காலை 10.00 மணிக்கு அட்சய திதியை முன்னிட்டு
ஸ்ரீ மகாலட்சுமி யாகத்துடன் ஸ்ரீ குபேர லட்சுமி யாகம், மற்றும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் யாகம் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது….. செல்வ வளம் பெறுகவும். பணப்பிரச்சினை அகலவும் .கணவன் மனைவி ஓற்றுமையாக வாழவும்,. சௌபாக்கியங்கள் பெருகவும்., மேலும் பல நன்மைகள் பெற  இந்த ஹோமங்கள் நடைபெறுகிறது..இந்த ஹோமம் முடிந்தவுடன் தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி மற்றும் ஸ்ரீ குபேர லட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து
10ம் தேதி செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி விழா
11.05.2016 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா
12.05.2016 வியாழன் அன்று காலை 10.00 மணிக்கு சஷ்டியை  முன்னிட்டு சத்ரு சம்ஹார சுப்பிரமணிய ஹோமம்
சத்ருக்கள் தொல்லை அகலவும் எமபயம் நீங்கவும் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் தோஷம் நீங்கவும்
 19.05.2016 வியாழன் பிரதோஷ பூஜை மாலை 5 .00 மணிக்கு
பிரதோஷ பூஜையை முன்னிட்டு ம் 468 சித்தர்கள் சிவலிங்க ருபத்திற்க்கும் மற்றும் ஸ்ரீ மரகத லிங்க சமேத  மரகதேஸ்வரருக்கும் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும் சிறப்பு  அபிஷேகம் மற்றும் பூஜைகளும் நடைபெற உள்ளது..
20.05.2016 வெள்ளி கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மர் ஹோமம்
மேலும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கூர்மலட்சுமி நரசிம்மருக்கு ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் கடன் பிரச்சினை தீரவும் உடல் உபாதைகள் அகலவும் மன நோய்,, மந்திரம், யந்திரம் ,தந்திரம்,போன்றவையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொழிலில் பாதிக்கப்பட்டவர்கள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் யாகம் நடைபெறுகிறது.. லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி யாகத்திருவிழாவாக நடைபெற உள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்க்கு வருகை புரிந்து ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்திரி  பெருமாள் மற்றும் 468 சித்தர்கள் இதர பரிவார தெய்வங்களையும் வணங்கி ப்ரார்த்திக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்..

மேலும் விவரங்களுக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை. 632513

No comments:

Post a Comment