Pages - Menu

Saturday, April 30, 2016

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை (1.05.2016) ஞாயிறு காலை 10 மணியளவில் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தன்வந்திரி முலவருக்கு தேன் அபிஷேகம், நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக தொழிலாளர்களின் உடல் நலம், மன நலம் கருதியும், அவர்களது குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டியும் நாளை (1.05.2016) ஞாயிறு காலை 10.00 மணியளவில் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தன்வந்திரி முலவருக்கு தேன் அபிஷேகம், தன்வந்திரி யாகமும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற உள்ளது.
தொழிலாளர்கள் இந்நாட்டின் முதுகெலும்பாவார்கள். ஏனென்றால் எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் கண்டு உலகம் செழித்தோங்க வேண்டுமானால் தொழிலாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். எனவே அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்பதாற்காக சிறப்பு தன்வந்திரி யாகத்தை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்த உள்ளார்.
இந்த யாகத்தின் போது உலக தொழிலாளர்களின் நலன்கருதி தன்வந்திரி குடும்பத்தினரும், பீடத்திற்கு வரும் பக்தர்களும் இணைந்து கூட்டுப்பிரார்த்தனை செய்ய உள்ளனர். ஆகவே அனைவரும் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு ப்ரார்த்திக்கின்றோம். மேலும் சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,

வாலாஜாபேட்டை. 632513 

No comments:

Post a Comment