Pages - Menu

Sunday, June 28, 2015

தன்வந்திரி பீடத்திற்கு தருமபுர ஆதினம் கட்டளை முனைவர் குமாரசாமி தம்பிரான் வருகை புரிந்தார்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 29.06.2015 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் ஜீர்ணோதாரன அஸ்டோபந்தன கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தில் ராகு கேது, கருடாழ்வார், ஸ்ரீ லட்சுமி கணபதி மற்றும் பலிபீடம் ஆகியவை மாற்று ப்ரதிஷ்டை நடைபெற உள்ளது. இந்த வைபவத்திற்கு முன்னதாக இன்று காலை (28.06.2015) 10.00 மணியளவில் நடைபெற்ற ஆரம்பகால பூஜையில்  தருமபுர ஆதீனம் முனைவர் குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள் வந்திருந்து தன்வந்திரி பகவானையும் இதர பரிவார தெய்வங்களையும் தரிசித்து ப்ரார்த்தனை செய்து யாகசாலை பூஜையில் பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சுயம்வரகலாபார்வதி யாகத்தில் கலந்து கொண்ட திருமணமாகாத பெண்களுக்கு சிறப்பு ஆசிகள் வழங்கினார். ஹோமத்தில் பங்கேற்றவர்கள் சிறப்பு அன்னதானத்திலும் பங்கேற்றனர் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.


No comments:

Post a Comment