Pages - Menu

Saturday, April 11, 2015

ஏப்ரல் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை… தன்வந்திரி பீடத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 21000 ஜாங்கிரிகள் கொண்டு முப்பெரும் ஹோமங்கள்…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தமிழ் புத்தாண்டில் அனைத்து மக்களும் நோயின்றி சகல ஐஸ்வர்யங்கள் பெற்று ஆனந்தத்துடன் வாழ  வருகிற 14ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை ஒரு வார காலத்திற்கு 21000 ஜாங்கிரிகள் கொண்டு நோய் தீர்க்கும் மாகா தன்வந்திரி யாகமும், மன பயங்கள் போக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய ஹோமமும், ஐஸ்வர்யங்கள் பெற மகாலட்சுமி யாகமும்  காலை 10.மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் இந்த யாகத்தில் 500க்கும் மேற்பட்ட மூலிகைகள், விசேஷ திரவியங்கள், நவதான்யங்கள், பட்டு வஸ்திரங்கள், பலவகையான பழங்கள், நெய், தேன் மற்றும் சித்ரா அன்னங்களும் சேர்க்கப்பட உள்ளன.
பீடத்தில் அமைந்துள்ள 9 அடி உயர ஆஞ்சநேயருக்கு 1008 ஜாங்கிரி மாலை சாற்றப்பட இருக்கிறது.

நிறைவாக 21ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அட்சயதிருதியை என்பதால் குபேர லட்சுமி யாகமும், மாலையில் திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த யாகங்களில், ஆந்திர மாநிலம் விஜயவாடா, சைவ ஷேத்திர பீடாதிபதி ஸ்ரீ சிவசாமி அவர்கள் கலந்து கொண்டு அருளாசி வளங்க உள்ளார். மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஜோதிடர்கள், சாதுக்கள், மகான்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

உலகில் முதன் முறையாக நடைபெறும் இந்த யாகத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தமிழ் புத்தாண்டில் நலமுடன் வாழ ப்ரார்த்திக்கின்றோம் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஜாங்கிரி பிரசாதமாக வழங்கப்படும்.


மேலும் தொடர்புக்கு : 04172-230033
www.danvantritemple.org

No comments:

Post a Comment