வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி மகா பீடத்தில் 05,03,2015 அன்று ஸ்ரீ ப்ரத்யங்கிரா
தேவி பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதை முன்னிட்டு இன்று 27.02.2015 வெள்ளிக்கிழமை
காலை 10,00 மணி முதல் 1,00 மணி வரை தன்வந்திரி பீடத்தில் உள்ள நவகன்னிகைகள் மற்றும்
மூலிகை வனத்தில் உள்ள முனீஸ்வரருக்கும் பொங்கலிட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில்
பங்கேற்ற சுமங்கலி பெண்களை நவகன்னிகளாக பாவித்து அவர்களுக்கு பூஜை செய்து பூஜையில் வைத்த சௌபாக்ய
பொருட்களை ஸ்வாமிகள் வழங்கி ஆசிர்வதித்தார். இந்த வைபவத்தில் ப்ரத்யங்கிரா தேவி அன்னை
மகா பீடத்தில் சிறப்பாக அமர்ந்து வருகிற பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அளித்து ஆரோக்யம்
ஐஸ்வர்யங்களையும் வழங்கி நோயின்றி நலமுடன் வாழ அருள் புரிய வேண்டி ப்ரார்த்தனை செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி மகா பீட குடும்பத்தினர்
தெரிவித்தனர்
No comments:
Post a Comment