Pages - Menu

Sunday, February 22, 2015

தன்வந்திரி பீடத்தில் இன்று அஷ்டதிக் பாலகர் ஸகித பூமி புத்ரன் (வாஸ்து பகவான்) புனராவர்த்தன ப்ரதிஷ்டா வைபவம் நடைபெற்றது…




22.02.2015 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள்ளாக தன்வந்திரி பீடத்தில் 6அடி உயரமும் 6அடி விட்டத்துடன் பஞ்சபூதங்கள் மற்றும் அஷ்டதிக் பாலகர்களை கொண்டு அமைந்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு புனராவர்த்தன ப்ரதிஷ்டா வைபவம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் நடைபெற்றது.
உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்து பகவான் மற்றும் அஷ்டதிக் பாலகர்களுக்கு என்று ஒரு தனி பீடம் அமைத்து ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும் வளர்பிறை பஞ்சமியிலும் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமம் செய்து வருகை புரியும் பக்தர்களுக்கு விசேஷ ஹோம பிரசாதங்களை அளித்து ஆசிர்வதித்து வருகிறார் முரளிதர ஸ்வாமிகள். மேலும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்கும் வகையில் வேறு இடத்திற்கு வாஸ்து பகவானை மாற்றி அஷ்டதிக் பாலகர் ஸகித பூமி புத்ரன் (வாஸ்து பகவான்) புனராவர்த்தன ப்ரதிஷ்டா வைபவம் நடைபெற்றது…

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீடு மனை நிலம், அமைய வேண்டி வாஸ்து பகவானை ப்ரார்த்தனை செய்தனர். இவ்வைபவத்திற்கு பாண்டிச்சேரியை சேர்ந்த திரு.சீனிவாசன், சென்னையை சேர்ந்த திரு.பாஸ்கரன், பிரபல ஜோதிடர் திரு.நம்பிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர்.முரளிதரஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
தன்வந்திரி குடும்பத்தினர்
வாலாஜாபேட்டை-632513.
வேலூர் மாவட்டம்..

No comments:

Post a Comment