Pages - Menu

Saturday, February 21, 2015

தன்வந்திரி பீடத்தில் விதியை வெல்லும் விசேஷ ஹோமங்கள் நாளை நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 22.02.2015 அன்று காலை 10.00 மணிமுதல் 1.00 மணிவரை உலக மாணவ மாணவியர்களின் கல்வி தரம் உயரவும் ஆரோக்யம் ஏற்படவும் சகமாணவர்களிடம் அன்பாக பழகவும் வருகிற பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று விரும்பும் பாடங்களில் சேரவும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு நல்ல உறவுமுறை ஏற்படவும் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு நல்ல நட்புறவு ஏற்படவும் குருபக்தியை பற்றி மாணவச்செல்வங்கள் தெரிந்து கொள்ளவும் ஞாபகமறதி உடல்சோர்வு தேவையற்ற பழக்கவழக்கங்கள் போன்ற தோஷங்களிலிருந்து விடுபடவும் தேர்வில் தோல்வி ஏற்படாமல் இருக்கவும், தேர்வு பயம் நீங்கவும், ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் ஸ்ரீ சரஸ்வதி ஹோமம் மற்றும் ஸ்ரீ பிரம்மா ஹோமமும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எழுதுபொருட்களை ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் மாணவ மாணவியருக்கு ஆசி வழங்கி இலவசமாக வழங்க உள்ளார். இம்மாபெரும் யாகத்தில் மாணவ மாணவியர்கள் மட்டுமல்லாமல் ஜோதிடர்கள், ஆசிரியர்கள் வழக்கறிஞர்கள், விற்பனை ஜோதிடர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment