Pages - Menu

Friday, January 10, 2014

தன்வந்திரி பீடத்திற்கு 5 அடி உயரமுள்ள சிலை வருகை…


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை பஞ்சாயத்து, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 17.1.2014 69வது விக்ரஹமாக ப்ரதிஷ்டை செய்யப்படவுள்ள 5 அடி உயரமுள்ள வீர பிரம்மங்காரு கற்சிலை தன்வந்திரி பீடத்திற்கு வருகை.

மேற்கண்ட விக்ரஹம் மகாபலிபுரம், பிரகாஷ் சிற்பக்கலைக்கூடம் திரு.லோகநாதன் ஸ்தபதி அவர்களால் பிரத்யேகமாக வடிமைக்கப்பட்டுள்ள சிலையில் பாதரட்சை, சித்தையா, மந்திரக்கோல், விபூதி, திருவோடு, காலக்ஞானம் சுவடியுடன் கம்பீரமான முறையில் சுமார் ஒன்னரை டன் எடையுள்ள விக்ரஹம் ஆதார பீடத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் விசேஷ புஜை செய்து வழிபட்டனர்.

ப்ரதிஷ்டைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும், இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகளின் தலைமையில் நடைபெற இருப்பதாகவும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment